8 வயசுல இருந்தே அவன்.. நைட்டு வர சொன்னேன்… பிரபல நடிகைக்கு தொல்லை கொடுத்த இயக்குனர்..!

தமிழ் சினிமாவில் ஒரு காலகட்டத்தில் கவர்ச்சி நடிகைகளுக்கு என்று தனி மார்க்கெட் இருந்தது. அப்பொழுது கவர்ச்சி நடிகை ஆக வேண்டும் என்று சினிமாவிற்கு வந்த சில நடிகைகளும் இருந்தனர். அப்படியாக சினிமாவிற்கு வந்த நடிகைகளில் பிரபலமான நடிகைகள் சிலர் தான் இருக்கின்றனர்.

அப்படியான நடிகைகள் வரிசையில் முக்கியமானவர் நடிகை டிஸ்கோ சாந்தி. சாந்தகுமாரி என்கிற டிஸ்கோ சாந்தி தென்னிந்திய சினிமா வட்டாரத்தில் மிக முக்கியமான ஒரு நடிகை அவார். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி மற்றும் ஒடிசா ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார் டிஸ்கோ சாந்தி.

8 வயசுல இருந்தே அவன்

சினிமாவிற்கு வந்து வெகு சில காலங்களிலேயே அதிகமான வரவேற்பை பெற்ற ஒரு நடிகையாக டிஸ்கோ சாந்தி இருந்துள்ளார். இவர் ஆரம்பத்தில் தமிழில் தான் முதன்முதலாக அறிமுகமானார். 1983 ஆம் ஆண்டு வெளியான வசந்தமே வருக என்கிற திரைப்படம் மூலமாக இவர் அறிமுகமானார்.

அதற்கு அடுத்த வருடமே அவருக்கு நிறைய திரைப்படங்களில் வாய்ப்பு கிடைத்தது. அதனை தொடர்ந்து 1985இல் இவரது நடிப்பில் 9 திரைப்படங்கள் வெளியானது. அவற்றில் இரண்டு மலையாள திரைப்படங்களாகும். அதனை தொடர்ந்து மலையாளத்திலும் இவருக்கு வாய்ப்புகள் கிடைக்க துவங்கின.

நைட்டு வர சொன்னேன்

இந்த நிலையில் தொடர்ந்து நிறைய திரைப்படங்களில் நடித்து வந்த டிஸ்கோ சாந்தி ஒரு கட்டத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலக துவங்கினார் 1997க்கு பிறகு இவர் சினிமாவில் இருந்து விலகினார்.

இந்த நிலையில் தன்னுடைய சொந்த வாழ்க்கை குறித்த நிறைய விஷயங்களை டிஸ்கோ சாந்தி ஒரு பேட்டியில் பகிர்ந்து இருக்கிறார். அதில் அவர் கூறும்போது பல விஷயங்கள் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் இருக்கிறது.

இந்த நிலையில் சாதாரண நடிகைகளே தமிழ் சினிமாவில் தொடர்ந்து அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சனைகளை சந்திக்கும் பொழுது ஒரு கவர்ச்சி நடிகை ஆக டிஸ்கோ சாந்தி எப்படியான பிரச்சனைகளை சந்தித்து இருப்பார் என்பது ஒரு கேள்வியாக இருந்தது.

தொல்லை கொடுத்த இயக்குனர்

இந்த நிலையில் இது குறித்து அவர் ஒரு பேட்டியில் போட்டிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது நானும் இந்த மாதிரியான பாலியல் அச்சுறுத்தல் பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறேன். ராஜாராம் என்கிற ஒரு ஹிந்தி இயக்குனர் ஒருவன் இருக்கிறான்.

அவனுக்கு சிறு வயதிலிருந்தே என்னை நன்றாக தெரியும். எனக்கு ஏழு எட்டு வயது முதலே அவனுக்கு என்னை தெரியும். அப்படி இருக்கும் பொழுது அவன் இயக்கிய ஒரு திரைப்படத்தில் எனக்கு ஒரு கதாபாத்திரம் கொடுத்தான் நானும் நடிப்த்தேன்.

அந்த படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த காலங்களில் எல்லாம் இரவுகளில் எனக்கு அவன் போன் செய்து கொண்டே இருந்தான். ஏன் இவன் இப்படி செய்கிறான் என்று சக நடிகையிடம் நான் கேட்ட பொழுது அவர்கள் விஷயத்தை கூறினார்கள். பிறகு அவனை ஒருநாள் இரவு நேரில் வரச் சொல்லி செருப்பை கழட்டி அவனை அடித்தேன் அதற்கு பிறகு என் பக்கமே வரவில்லை என்று கூறி இருக்கிறார் நடிகை டிஸ்கோ சாந்தி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version