“வாஸ்து படி சமையலறையில் இது வேண்டாம்..!” – இல்லாம இருந்தா நன்மைங்க !

வீட்டுக்கு மட்டும் வாஸ்து சாஸ்திரம் இல்லை. வீட்டில் பொருட்களை எப்படி வைப்பது என்று கூறுவதிலும் வாஸ்து சாஸ்திரம் ஒரு மிகப் பெரிய பங்கினை செய்கிறது.வாஸ்து படி அனைத்தும் அமைந்துவிட்டால் அந்த இல்லத்தில் மகிழ்ச்சி, ஆரோக்கியம், செல்வ செழிப்பு அனைத்தும் தங்கு தடை இன்றி கிடைக்கும்.

vastu don’t keep it in kitchen

அதன் அடிப்படையில் வாஸ்து சாஸ்திரப்படி நீங்கள் உங்கள் சமையல் அறையில் இந்த பொருட்களை வைக்காமல் இருப்பதின் மூலம் உங்கள் வீட்டில் ஏற்படும் எதிர்மறை ஆற்றலை சரி செய்ய முடியும் என்று கூறியிருக்கிறார்கள். அப்படி என்ன என்ன பொருட்களை நீங்கள் உங்கள் வீட்டு சமையல் அறையில் வைக்க கூடாது என்பதை பற்றி பார்ப்போம்.

சமையல் அறையில் வைக்க கூடாத பொருட்கள்

வாஸ்து சாஸ்திரப்படி அக்னி மூலையில் உங்கள் சமையலறை அமைந்திருந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் உங்கள் வீட்டு சமையல் அறையில் இந்த வாஸ்துவின் படி நீங்கள் கண்ணாடி அல்லது கண்ணாடி சம்பந்தமான எந்த பொருட்களையும் வைத்திருக்கக் கூடாது.

 அப்படி வைத்திருந்தால் அது கட்டாயம் உங்களுக்கு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கச் செய்யும். இதனால் நீங்கள் துன்பத்தை சந்திக்க வேண்டிய சூழ்நிலைகளுக்கு உள்ளீர்கள்.

vastu don’t keep it in kitchen

மேலும் சமையலறையில் உடைந்த பொருட்கள் இருந்தால் அதை உடனே நீக்கி விடுங்கள். உடைந்த பாத்திரங்கள், உடைந்த கரண்டிகள் இது போல எந்த பொருட்கள் உடைந்து இருந்தாலும் அவையும் உங்கள் சமையல் அறையில் இருந்து கொண்டு எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும்.

 இதனால் உங்கள் குடும்ப முன்னேற்றம் பாதிப்படையும் எனவே அந்தப் பொருட்களை உடனடியாக நீக்குவது நல்லது.

தானிய லட்சுமியும், அன்னபூரணியும் வாசம் செய்யக்கூடிய சமையல் அறையில் சீமாறு, துடைப்பம் போன்றவற்றை வைக்கக் கூடாது. அப்படி வைப்பதின் மூலம் உங்கள் வீட்டில் ஆரோக்கியம் சீர்கேடு அடைந்து உடல்நிலை பலருக்கும் மோசமாகும்.

vastu don’t keep it in kitchen

பூச்சிகளை கொல்லுவதற்காக பயன்படுத்தும் மருந்து பொருளை உங்கள் வீட்டு சமையல் அறையில் ரேக்குகளில் நீங்கள் வைக்காதீர்கள். இதன் மூலம் உங்கள் வீட்டு உணவு பொருட்களும் நஞ்சாகலாம்.

எனவே மேற்கூறிய பொருட்கள் உங்கள் வீட்டு சமையல் அறையில் இருந்தால் அதை கட்டாயம் வேறு இடத்திற்கு உடனே மாற்றி விடுங்கள். இதன் மூலம் உங்கள் வீட்டில் நேர்மறை ஆற்றல் அதிகரிக்கும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam