உடலில் ஏற்பட்ட அந்த நோய் சிக்கலில் சிக்கிய பிரபலம்.. இனி படங்களில் நடிக்க மாட்டாரா?..

கேரளாவை பூர்வீகமாகக் கொண்ட நடிகர் துல்கர் சல்மான் ஒரு வாரிசு நடிகர். இவர் மலையாளத்தில் முன்னணி நடிகராக திகழும் மம்முட்டியின் மகன் ஆவார்.

Dulquer Salmaan 4

இதனை அடுத்து இவர் தீவிரம் பட்டம், போலே, அல்லாஹ் மொபிலஸ், வாயை மூடி பேசவும் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்து தனது அபார நடிப்பு திறமையை வெளிப்படுத்தி தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை பெற்றிருக்கிறார்.

உடலில் ஏற்பட்ட அந்த நோய் சிக்கல்..

இவர் மலையாள திரைப்படங்கள் மட்டுமல்லாமல் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடித்து தனது நடிப்பு எல்லையை விரிவுபடுத்திக் கொண்டவர்.

மேலும் ஒவ்வொரு முறை படங்களையும் தேர்வு செய்து நடிக்கும் போது ஒரு சீரான இடைவெளியை விட்டு நடித்து அனைவரையும் கவரக்கூடிய அற்புத மனிதராக விளங்குகிறார்.

Dulquer Salmaan 3

இந்நிலையில் இவர் நடித்த கிங் ஆப் கொத்த என்ற மலையாள திரைப்படம் வெளி வந்து ஓராண்டுகள் கடந்து விட்ட நிலையில் அடுத்த படம் குறித்த அறிவிப்பு அல்லது அது நிமித்தமான பேச்சுகளோ இன்று வரை ஊடகங்களில் வெளியாகவில்லை.

இனி படங்களில் நடிக்க மாட்டார் துல்கர் சல்மான்..

மேலும் சமீபத்தில் வெளியான கல்கி திரைப்படத்தில் கூட ஒரு சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கும் துல்கர் சல்மான் தமிழில் நடித்துள்ள லக்கி பாஸ்கர் திரைப்படம் கூட ஏறக்குறைய முடிவடைந்து ரிலீசுக்கு தயாராகிவிட்டது.

Dulquer Salmaan 2

இந்நிலையில் வேறு எந்த படம் குறித்தும் அறிவிப்போ அல்லது ஒப்பந்தமோ செய்யப்பட்டுள்ளதா என்று பல்வேறு கேள்விகள் எழும்பியுள்ள நிலையில் அவர் இனி வேறு எந்த படங்களிலும் நடிக்கவோ ஒப்புக்கொள்ளவோ மாட்டார் என்ற விஷயம் தற்போது வெளி வந்து அதிர்ச்சியை தந்துள்ளது.

இந்த விஷயமானது திரையுலகை சார்ந்தவர்கள் மட்டுமல்லாமல் அவர்களது ரசிகர் வட்டாரத்தையும் நிலை குலைய செய்துள்ளதால் எதனால் இந்த முடிவை எடுத்தார் என்ற கேள்விகள் கேட்கப்படுகிறது.

இதில் பல படங்களில் நடிப்பதிலேயே கவனத்தை செலுத்தியதால் உடல்நிலையில் கொஞ்சம் அக்கறை காட்ட தவறியதை அடுத்து சில உடல் நிலை பிரச்சனைகள் ஏற்பட்ட உள்ளதாகவும் அதை சரி செய்யத் தான் இந்த இடைவெளியை விட்டுள்ளதாகவும் துல்கர் கூறி இருக்கிறார்.

Dulquer Salmaan 1

மேலும் இது வந்து எவருடைய தவறும் அல்ல என்னுடைய தவறு தான். எனக்கு ஒரு சிறிய இடைவெளி தேவைப்படுகிறது. அவ்வளவு தான் என்பதை வெளிப்படையாக சொல்லியிருக்கும் துல்கர் சல்மான் தனக்கு ஏற்பட்டிருக்கும் நோய் குறித்து எந்த விதமான விஷயத்தையும் ஓபன் ஆக சொல்லாததை அடுத்து எந்த நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார் என்பது போல ரசிகர்கள் அவரிடம் கேள்விகளை எழுப்பி இருக்கிறார்கள்.

இதை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறிவிட்டது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam