சிவகார்த்திகேயன், கவின் மத்தவங்களுக்கும் கொஞ்சம் இடம் கொடுங்க… ஓப்பனாக போட்டுடைத்த துல்கர் சல்மான்.. என்ன இப்படி சொல்லிட்டாரு?.

தற்சமயம் வளர்ந்து வரும் தமிழ் நடிகர்களில் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெற்றவராக நடிகர் சிவகார்த்திகேயன் இருந்து வருகிறார். சாதாரண தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த சிவகார்த்திகேயன் இவ்வளவு பெரிய உச்சத்தை தொட்டியிருப்பதே உண்மையிலேயே மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை ஏற்படுத்தியிருக்கிறது.

மேலும் நடிப்பதற்கு வரும் இளைஞர்கள் பலரும் சிவகார்த்திகேயனை தான் முன்னுதாரணமாக கொண்டு சினிமாவிற்கு வருகின்றனர். அந்த அளவிற்கு சிவகார்த்திகேயன் மக்கள் மத்தியில் முக்கிய நடிகராக மாறி இருக்கிறார்.

கொஞ்சம் இடம் கொடுங்க

ரஜினிகாந்த் விஜயை போலவே சிவகார்த்திகேயனும் தற்சமயம் குழந்தைகள் விரும்பும் நடிகராக மாறியிருக்கிறார். ஒவ்வொரு தலைமுறையிலும் குழந்தைகள் விரும்பும் நடிகராக மாறும் நடிகர் தான் பிறகு பெரிய உச்சத்தை தொடுவதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் அடுத்த சிவகார்த்திகேயன் கண்டிப்பாக விஜய் நிலத்தை பிடிப்பார் என்பது சிவகார்த்திகேயன் ரசிகர்களின் எண்ணமாக இருக்கிறது அதே போல கோட் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஒரு காட்சி வைக்கப்பட்டுள்ளது.

போட்டுடைத்த துல்கர் சல்மான்

அதில் விஜய்க்கு அடுத்தபடியாக சிவகார்த்திகேயன் தான் வருகிறார் என்பது போல அந்த காட்சிகள் அமைக்கப்பட்டு இருந்தது. சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்சமயம் உருவாகி வரும் திரைப்படம் அமரன். பொதுவாக சிவகார்த்திகேயன் திரைப்படத்தில் இருப்பது போல காமெடி காட்சிகள் எல்லாம் இல்லாமல் முழுக்க முழுக்க சீரியஸான கதைகளை கொண்ட ஒரு திரைப்படமாக அமரன் உருவாகி வருகிறது.

அமரன் திரைப்படம் வெளியாகும் அதே நாளில்தான் கவின் நடிக்கும் ப்ளடிபக்கர் திரைப்படமும் வெளியாகிறது. கவின் அடுத்து வளர்ந்து வரும் ஒரு முக்கிய நடிகராக இருந்த வருகிறார். அதனால் இவர்கள் இருவரது திரைப்படத்திற்குமே தீபாவளி அன்று நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

என்ன இப்படி சொல்லிட்டாரு

இந்த நிலையில் இந்த படங்களுக்கெல்லாம் போட்டியாக தற்சமயம் நடிகர் துல்கர் சல்மான் நடிக்கும் லக்கி பாஸ்கர் என்கிற திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக இருக்கிறது. துல்கர் சல்மானை பொறுத்த வரை அவருக்கு பெரிதாக ரசிகர்கள் என்று தமிழ் சினிமாவில் கிடையாது.

ஆனால் அவர் நடித்த ஓ காதல் கண்மணி, வாயை மூடி பேசவும்,  மாதிரியான ஒரு சில திரைப்படங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து பேசிய துல்கர் சல்மான் கூறும் பொழுது பெரிய நடிகர்கள் திரைப்படங்களுக்கு நடுவே என்னுடைய திரைப்படமும் வெளியாகிறது.

கவின் மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்கள் எனக்கும் கொஞ்சம் இடம் கொடுக்க வேண்டும் என்று கேட்டிருக்கிறார் துல்கர் சல்மான் ஏனெனில் பெரிய நடிகர்கள் திரைப்படம் வெளியாகும் போது சின்ன நடிகர்களின் திரைப்படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காது அதை குறிக்கும் வகையில் தான் துல்கர் சல்மான் அப்படி பேசி இருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version