வாய்ப்பு கொடுத்து.. சம்பளத்தையும் பேசிவிட்டு.. கடைசி நேரத்தில் இதை பண்ணுவாங்க.. மாமன்னன் ரவீனா வேதனை..!

திரை உலகில் டப்பிங் கொடுக்கக் கூடிய டப்பிங் ஆர்டிஸ்ட் பற்றி உங்களுக்கு தகவல்கள் தெரிந்திருக்கலாம். அந்த வகையில் மிகச் சிறந்த பின்னணி குரல் கொடுக்கக்கூடிய நபராக ரவீனா விளங்குகிறார். 

இவர் பல தமிழ் திரைப்படங்களுக்கு பின்னணி குரல் கொடுத்திருக்கிறார். இவர் புகழ் பெற்ற பின்னணி குரல் நடிகையான ஸ்ரீஜா ரவியின் மகள் என்பது பலருக்கும் தெரிந்திருக்கலாம்.

மாமன்னன் ரவீனா..

2012-ஆம் ஆண்டு வெளி வந்த சாட்டை படத்தில் பின்னணி குரல் கொடுக்க ஆரம்பித்த இவர் நிமிர்ந்து நில், கத்தி, அனேகன், ஐ, பொன்னியின் செல்வன் 1 போன்ற படங்களில் மிகச்சிறப்பான முறையில் பின்னணி குரல் கொடுத்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார்.

மேலும் பின்னணி குரல் கொடுப்பதோடு நின்று விடாமல் சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். அந்த வகையில் 2017-ஆம் ஆண்டு தமிழில் வெளி வந்த ஒரு கிடாயின் கருணை மனு என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

இதனை அடுத்து நித்திய ஹரித நாயகன் என்ற மலையாள திரைப்படத்தில் நடித்த இவர் 2020-இல் காவல்துறை உங்கள் நண்பன் என்ற படத்திலும் 2022-இல் லவ் டுடே என்ற படத்தில் நடித்து அசத்தியவர்.

வாய்ப்பு கொடுத்து சம்பளத்தைப் பேசி..

சமூக வலைதளங்களில் படு பிஸியாக இருக்கக் கூடிய இவர் அவ்வப்போது பேட்டிகளில் கலந்து கொள்வார். அந்த வகையில் அண்மை பேட்டியில் இவர் கூறிய விஷயங்கள் ரசிகர்களின் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இதற்கு காரணம் படங்களில் டப்பிங் செய்வதற்காக வாய்ப்பினை கொடுத்து சம்பளத்தையும் பேசி விடுவார்கள். ஆனால் கடைசி நிமிடத்தில் நம்முடைய குரல்தான் அந்த படத்தில் வந்ததா இல்லையா என்று படம் வெளி வந்த பிறகு தான் தெரியவரும். அந்த அளவு சிக்கல்கள் நிறைந்த துறை என்பதை தெரிவித்திருக்கிறார்.

மேலும் சம்பளமெல்லாம் பேசி முடித்த பிறகு நாளை காலை டப்பிங் என்ற நிலையில் நான் நிராகரிக்கப்பட்டு இருக்கிறேன் அந்த படத்தில் டப்பிங் பேச என்பதை மிகவும் கூலாக சொல்லி இருக்கிறார்.

கடைசில இத பண்ணுவாங்க..

மேலும் காலையில் செல்ல வேண்டிய நிலையில் எனக்கு அழைப்பு ஏதும் வராத காரணத்தால் நான் அலைபேசியின் மூலம் அழைத்து பேசினேன்.

எனினும் இரண்டு நாட்கள் கழித்து சொல்லுவதாக சொன்னார்கள். நானும் இருந்த வேலைப்பளுவால் மறந்து விட ஒரு வாரத்திற்கு மேலானதை அடுத்து கால் செய்து கேட்டேன்.

அப்போது வேறு ஒருவர் அந்த படத்திற்கான டப்பிங் முடித்து விட்டார் என்று சொன்னார்கள். இதில் எனக்கு வருத்தம் இல்லை என்றாலும் என்னிடம் ஃபோன் செய்து ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம் என்று நினைத்தேன்.

மேலும் சவுண்ட் இன்ஜினியர்களை வைத்து பல்வேறு பாலிடிக்ஸ் டப்பிங் சமயங்களில் நடந்து வருவதில் இயல்பான ஒன்றாக மாறிவிட்டது என்ற கருத்தை தெரிவித்து இருந்தார். இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam