அழகு.. நீ நடந்தால் நடை அழகு.. நீ சிரித்தால் சிரிப்பழகு.. என்று அழகை ஆராதிக்கின்ற ஒரு மிகப்பெரிய கூட்டம் இருக்கும் பொழுது உங்கள் அழகுக்கு அழகு சேர்க்கும் முக அழகுக்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவீர்கள் என்பது எல்லோருக்கும் மிக நன்றாக தெரியும். அப்படிப்பட்ட முக அழகை பேணி பராமரிக்க கூடிய வழிமுறைகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
முக அழகை மேம்படுத்தக்கூடிய டிப்ஸ்
பாலில் சில துளி எலுமிச்சம் பழத்தை சேர்த்து அதை உங்கள் முகத்தில் தடவி வர முகத்தில் இருக்கும் கருமை நிறம் மறைந்து முகம் விரைவில் வெண்மை நிறத்தை அடையும்.
புதினா சாறு, எலுமிச்சை சாறு இவை இரண்டையும் வெந்நீரில் கலந்து மூன்று நாட்களுக்கு ஒரு முறை ஆவி பிடித்து வந்தீர்கள் என்றால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் நீங்கி சருமப்பொலிவு ஏற்படும்.
கொய்யா இலைகளை நன்கு கழுவி அரைத்து ரோஸ் வாட்டர்ரோடு கலந்து உங்கள் முகத்தில் பேஸ்ட் பதத்தில் தேய்த்து விட்டு சில மணி நேரம் காய விட்டு பிறகு குளிர்ந்த நீரால் கழுவுவதன் மூலம் உங்கள் முகம் பொலிவாக மாறும்.
அரிசி மாவு இரண்டு டீஸ்பூன் இரண்டு டீஸ்பூன் தயிர் இரண்டு டீஸ்பூன் இவை இரண்டையும் நன்கு குழைத்து உங்கள் முகத்தில் தடவி மசாஜ் செய்து தேய்ப்பதின் மூலம் இறந்த செல்கள் வெளியேறி முகம் பார்ப்பதற்கு பொலிவாக மாறிவிடும்.
வெள்ளை சர்க்கரை மற்றும் எலுமிச்சம் சாறு சேர்த்து அதை உங்கள் முகத்தில் தடவி நன்கு மசாஜ் செய்வதின் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் வெளியேறிவிடும். அது மட்டுமல்லாமல் சருமத்துளைகள் ஓபன் ஆகி அழுக்குகள் அனைத்தும் நீங்கி ரத்த ஓட்டம் அதிகரிப்பதின் மூலம் முகம் பார்ப்பதற்கு பொலிவோடு இருக்கும்.
பப்பாளி பழத்தை நன்கு வசித்து உங்கள் முகத்தில் அப்படியே அப்ளை செய்து கொள்வதின் மூலம் முகம் பளபளப்பாக மாறும் முகப்பருக்கள் ஏற்படாது.
அண்ணாச்சி பழத்தை நன்கு மசித்து தேனோடு கலந்து உங்கள் முகத்தில் பூசி வர இந்த ஃபேஸ் பேக் ஆனது 15 நிமிடங்கள் உங்கள் முகத்தில் அப்படியே இருக்க வேண்டும். பிறகு இதனை குளிர்ந்த நீரால் கழுவி விட உங்கள் முகம் இலட்சமாக பார்ப்பதற்கு பளிச்சென்று இருக்கும்.