திடீரென நடிகை நயன்தாராவை சமூக வலைதளங்களில் போட்டு பொழந்து கொண்டிருந்தனர் இணைய வாசிகள் சிலர். என்ன ஆச்சு என்று பார்த்தால்.. அதற்கு பின்னால் வைரலாகி வரும் ஒரு காணொளி தான் காரணம் என தெரிய வந்தது..
சமீபத்தில் தன்னுடைய நிறுவனமான ஃபெமி நைன் நிறுவனத்தின் ப்ரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் நடிகை நயன்தாரா. அந்த நிகழ்ச்சியில் இறுதியாக அழைக்கப்பட்டிருந்த சமூகவலைதள இன்ஃப்ளுவென்சர்ஸ் ( Social media Influencers ) நிகழ்ச்சி முடிந்த பிறகு நயன்தாராவுடன் போட்டோ எடுத்துக் கொள்வது என்று ஏற்கனவே திட்டமிட்டு இருக்கிறார்கள்.
ஆனால், நடிகை நயன்தாரா அந்த நிகழ்ச்சிக்கு தாமதமாக வந்த காரணத்தினால் தங்களுடன் போட்டோ எடுத்துக் கொள்ளாமல் கிளம்பி விடுவாரோ என்று நினைத்த அந்த Social media Influencers பலர் முண்டியடித்துக்கொண்டு நடிகை நயன்தாரா மற்றும் அவருடைய கணவன் விக்னேஷ் சிவனுடன் புகைப்படம் எடுத்துக் கொள்ள முயற்சி செய்திருக்கின்றனர்.
இதனால் அங்கே தள்ளுமுள்ளு ஏற்பட்டிருக்கிறது. நயன்தாராவுக்கு பாதுக்காப்பு பிரச்சனை ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கிருந்து ஒரு இளைஞர் அங்கு இருந்த Social media Influencer-களை பார்த்து நாமெல்லாம் Normal People கிடையாது.. சாதாரணமான மனிதர்கள் கிடையாது Social media Influencers அதை புரிந்து கொண்டு இப்படி முண்டியடிக்காமல் இடைவெளி விட்டு பொறுமையாக வந்து புகைப்படம் எடுத்துக் கொள்ளுங்கள்.
பல வேலைகளுக்கு நடுவே கஷ்டப்பட்டு நயன்தாரா இங்கே வந்திருக்கிறார் என Social media Influencer-களை பார்த்து கூறி இருக்கிறார். ஆனால், நடிகை நயன்தாரா Normal People கிடையாது என்று அவர் கூறியதாக இணைய பக்கங்களில் வீடியோ வைரலாகி வருகிறது.
இந்த வீடியோவை சில வினாடிகள் மட்டும் கட் செய்து பரப்பிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வீடியோவில் தோன்றக்கூடிய நபர் நடிகை நயன்தாராவை நார்மல் பீப்பிள் இல்லை என்று சொல்லவில்லை. அங்கு கூடியிருந்த Social media Influencer-களைத்தான் சாதாரண மக்களை போல் நடந்து கொள்ளாதீர்கள். சமூக வலைதள பிரபலங்கள் போல நடந்து கொள்ளுங்கள் என காட்டமாக பேசியிருக்கிறார். இதுதான் உண்மை.
ஆனால், அதற்குள் தூக்கி போட்டு சாத்து ராயா.. ராயா.. என்று ராயன் மோடுக்கு சென்று விட்ட இணைய வாசிகள் நயன்தாராவை அடித்து துவைக்க ஆரம்பித்து விட்டார்கள்.
View this post on Instagram