இதை பண்ணா வீக் ஆகிடுவேன்.. அதனால பண்றத விட்டுட்டேன்.. வெளிப்படையாக கூறிய பிக்பாஸ் கேப்ரில்லா..!

தொலைக்காட்சி ரியாலிட்டி நிகழ்ச்சிகள், சீரியல்கள், திரைப்படங்கள் என பல்வேறு தளங்களில் தன்னுடைய திறமையை நிரூபித்துக் கொண்டிருக்கும் நடிகை கேப்ரில்லா சமூக வலைதளங்களில், தான் வெளியிடக்கூடிய புகைப்படங்களுக்கு வரக்கூடிய மோசமான கருத்துக்களை எப்படி எதிர்கொள்வேன் என்பது குறித்தும் சமீபத்திய பேட்டியில் வெளிப்படையாக பேசி இருக்கிறார்.

அவர் கூறியதாவது, முதன்முதலாக நான் 11-ம் வகுப்பு படிக்கும் பொழுது என்னுடைய அப்பா ஒரு குட்டை பாவாடை வாங்கி கொடுத்தார். 11-ன்றாவது படிக்கும் பெண்ணை ஒருவன் எப்படி மோசமான முறையில் பார்க்க முடியும்..? ஆனாலும் அந்த உடையை அணிந்து கொண்டு நான் புகைப்படத்தை வெளியிட்ட பொழுது உன்னுடைய அப்பன் இப்படி எல்லாம் டிரஸ் வாங்கி கொடுக்கிறானா…? என்று கருத்துக்களை சிலர் தெரிவித்தார்கள்.

அந்த நேரத்தில் நான் உடைந்து போய் விட்டேன். நான் ஏதோ வலு விழுந்தது போலவும், வீக்கானது போலவும் உணர்ந்தேன். அப்போது முடிவு செய்தேன் இப்படியான கருத்துக்களை படிக்கும் பொழுது இப்படி மோசமான கமெண்ட்களை படிக்கும் பொழுது நான் வீக் ஆகி விடுகிறேன். அதனால் இனிமேல் கமெண்ட் படிக்க கூடாது.

அப்போது எடுத்த முடிவிலிருந்து நான் இதுவரை பின்வாங்கவில்லை. யார் என்ன கமெண்ட் செய்தாலும் அதனை நான் படிப்பது கிடையாது. ஏனென்றால் நான் எப்படி இருக்க வேண்டும் என்று எனக்கு தெரியும். நான் எப்படி இருக்கிறேன் என்று எனக்கு தெரியும். வேறு யாரும் கமெண்ட் அடித்து என்னை வலுவிலக்க செய்ய முடியாது.

அன்று எடுத்த அந்த முடிவை தற்போது வரை நான் பின்பற்றிக் கொண்டிருக்கிறேன். இப்போது கூட என்னுடைய புகைப்படத்தை வைத்து போலியான உடலோடு எடிட் செய்து சிலர் புகைப்படங்களை வெளியிடுகிறார்கள்.

அதனை கண்டிப்பாக நீங்கள் எல்லோரும் பார்த்திருப்பீர்கள். சிலர் பார்க்காமல் இருக்கலாம். அப்படி வெளியிடக்கூடியவர்கள் பற்றி எனக்கு கவலையே கிடையாது. அதைப்பற்றி நான் கவலை கொள்ள போவது இல்லை.

எப்படி சமூக வலைதளங்களை கையாள வேண்டும் என்பதை நான் கற்றுக் கொண்டிருக்கிறேன். எப்படி மோசமான மனநிலைக்குள் நம்மை தள்ளக்கூடிய விஷயங்களில் இருந்து நம்மை தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன் என பேசியிருக்கிறார் பிக்பாஸ் கேப்ரில்லா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version