நடிகர் ராம் சரண், நடிகை கியாரா அத்வானி, நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் இயக்குனர் சங்கர் கூட்டணியில் வெளியாகி உள்ள Game Changer திரைப்படம் இன்று திரைக்கு வந்திருக்கிறது.
இந்த படத்தின் அதிகாலை காட்சிகளை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை சமூக வலைதள பக்கங்கள் வாயிலாக பதிவு செய்து வருகின்றனர்.
மிகப் பெரிய பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் மீது ரசிகர்களுக்கு மிகுந்த எதிர்பார்ப்பு இருந்தது.
குறிப்பாக இயக்குனர் சங்கருக்கு இது ஒரு கம் பேக் படமாக இருக்கும் என்று பலராலும் எதிர்பாக்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை கேம் சேஞ்சர் பூர்த்தி செய்ததா..? ரசிகர்களின் கருத்து என்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
இயக்குனர் சங்கரின் கடைசி சில திரைப்படங்கள் எதிர்பார்த்த வரவேற்பு பெறவில்லை. இந்த திரைப்படம் சங்கருக்கு கம்பேக் படமாக அமையும் என்று எதிர்பார்த்து இருந்த ரசிகர்களுக்கு என்ன பதில் கிடைத்தது..? என்று சமூகவலை தளங்களில் வரக்கூடிய இந்த விமர்சனங்கள் வைத்து தெரிந்து கொள்ளலாம் வாங்க பார்க்கலாம்.
இரண்டாம் பாதி ஃப்ளாக்பேக் மற்றும் அப்பன்னா கதாபாத்திரம் அருமை
எமோஷனல் கனெக்ட்.. உச்ச கட்ட ஹீரோயிசம்..
அருமையான அரசியல் களம்.. காதல் கதையும் கச்சிதம்..
உங்க கதை.. உங்களுக்கு பிடிச்சிருந்தா நீங்களே வச்சிக்கோங்க.. விடியக்காத்தால என்னை தியேட்டருக்கு கூட்டி வந்து சாவடிக்க உங்களுக்கு என்னய்யா ரைட்ஸ் இருக்கு..
ஃப்ளாஸ்பேக் சிறப்பாக உள்ளது
டோட்டல் டேமேஜ்
ஷங்கர் தன்னுடைய மேஜிக்கை இழந்து விட்டார்
படம் தரமா இருக்கு ப்ரோ..
முதல் பாதி விழுந்து எழுந்தது.. இரண்டாம் பாதி எழுந்து படுத்து விட்டது..
அப்பன்னா கதாபாத்திரம் இந்த படன் உயிர்
ஷங்கரின் வலுவான அரசியல் கதை
லைகா இந்தியன் 3 எடுக்க கூடாதுன்னு தான் சண்டை போட்டிருக்கணும்
Summary in English : Fans have been buzzing about the much-anticipated movie “Game Changer,” featuring the dynamic duo of actor Ramcharan and director Shankar. From the moment the first teaser dropped, it was clear that this film was going to be something special. Fans have taken to social media to share their excitement, with many praising Ramcharan’s electrifying performance and Shankar’s signature direction style.