Actress Gautami recently opened up about her experiences with toxic relationships, and her insights are both eye-opening and relatable.
தமிழ் சினிமாவின் பெருமை, தமிழ் சினிமாவின் அடையாளம், தமிழ் சினிமாவின் ஐகான், என்று பல்வேறு பெயர்களால் அழைக்கப்படுபவர் நடிகர் கமல்ஹாசன்.
இடையில் சில வருடம் நடிப்பை நிறுத்தி இருந்த இவர் தற்போது மீண்டும் பழைய வேகத்தில் நடிக்க ஆரம்பித்து இருக்கிறார். அந்த வகையில், இவர் நடித்த விக்ரம் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.
பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் உருவான இந்தியன் 2 திரைப்படம் மோசமான விமர்சனங்களை பெற்றது. இந்நிலையில், இயக்குனர் மணிரத்தினம் இயக்கத்தில் தக் லைஃப் என்ற படத்தில் நடித்து வருகிறார் கமல்ஹாசன்.
அடுத்ததாக இயக்குனர் அன்பறிவ் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இடையில் சில காலம் நடிகை கௌதமியுடன் லிவிங் டுகெதர் வாழ்க்கையில் வாழ்ந்தவர் கமல்ஹாசன் என்பது பலருக்கும் தெரிந்த விஷயம்.
இந்நிலையில் தனியார் Youtube சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்த நடிகை கௌதமி டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்பின் அடிப்படையான விஷயம் என்னவென்றால்.. அதிலேயே இருக்கவும் முடியாது… அதிலிருந்து வெளியேவும் வர முடியாது.. இதனால் தான் அது டாக்ஸிக்காக மாறுகிறது.
அதில் ஏதோ ஒரு குறை இருக்கிறது. அந்த குறை உங்களால் தான் உருவாகி இருக்கும்.. அதில் நடக்கும் விரும்பத்தகாத விஷயங்கள் அனைத்துமே உங்களால் தான் நடந்திருக்கும்.. என்று ஆள் மாற்றியால் நினைத்துக் கொள்வார்கள்.
இது காலம் காலமாக நடக்கக்கூடிய ஒன்று தான். ஒருவருடன் நீங்கள் உறவில் இருக்கும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் உங்களுக்குள் ஏதோ ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தால்.. அதுதான் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப்.
இப்படியான உறவில் நாம் இருக்கிறோம்.. என்பதை தெரிந்து கொள்வதற்கு நீண்ட நேரம் ஆகும். அதனை கண்டுபிடிப்பது தான் முதல் கட்டம், அதிலிருந்து வெளியே வரவேண்டும் என்று நினைப்பது இரண்டாவது கட்டம், அதன் பிறகு அதிலிருந்து வெளியே வருவதற்கான வலிமையையும் வழிகளையும் நமக்கு நாமே உருவாக்கிக் கொள்வது மூன்றாவது கட்டம், வெளியே வந்த பிறகு நமக்கான சுதந்திரத்தை தக்க வைத்துக் கொள்வது நான்காவது கட்டம்.
இப்படி ஒவ்வொரு கட்டமாக திட்டமிட்டு அப்படியான டாக்சிக் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வெளிவர வேண்டும். நம்முடைய வாழ்க்கை மிகவும் அற்புதமானது. அப்படி இருக்கும் பொழுது நீங்கள் உங்களுடைய வாழ்க்கையை நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கான எல்லா தகுதியும் உங்களுக்கு இருக்கிறது.
எல்லா உரிமையும் உங்களுக்கு இருக்கிறது. அந்த உரிமை உங்களிடம் இருக்க வேண்டும். நீங்கள் ஒரு ரிலேஷன்ஷிப்பில் டாக்ஸில் நிலையை உணரும்போது இந்த நிலை தன்னால் தான் உருவாகிவிட்டதோ.. என்று நீங்கள் குறைபட்டுக் கொள்ளத் தேவையில்லை.
நீங்கள்தான் தவறானவர் என்றே வைத்துக் கொள்ளுங்கள்.. அது சரியாக ஒர்க் அவுட் ஆகவில்லை என்று வைத்துக் கொள்ளுங்கள்.. பரவாயில்லை.. நீங்கள் இதை திட்டமிட்டு செய்யவில்லை.. இது வாழ்க்கையின் ஒரு பகுதி என்பதை புரிந்து கொண்டு உங்களுடைய சுந்தரமான வாழ்க்கை நோக்கி பயணிக்க பழகிக்கொள்ள வேண்டும்.
நடிகை கௌதமியின் இந்த பேச்சை கேட்டு ரசிகர்கள் நடிகர் கமல்ஹாசன் உடன் இருந்த ரிலேஷன்ஷிப்பை தான் இவர் டாக்ஸிக் ரிலேஷன்ஷிப் என்று கூறுகிறாரோ..? என்று விவாதிக்க தொடங்கி இருக்கின்றனர்.
Summary in English : Actress Gautami has been pretty open about her experiences with toxic relationships, and her insights are both relatable and empowering. She emphasizes that recognizing the signs of toxicity is the first step toward reclaiming your happiness.