அந்த மாதிரி பெண்ணோட பழக்க விடமாட்டாங்க.. காயத்ரி ரகுராம் ஓபன் டாக்!!..

இன்றைய காலகட்டத்தில் பெண்கள் சுதந்திரமாக தனித்து தன் காலில் நிற்கக்கூடிய நிலை உருவாகிவிட்டதை அடுத்து திருமண பந்தம் கசக்க கூடிய சமயத்தில் அவர்கள் சுயமாக முடிவெடுத்து அந்த வாழ்க்கையில் இருந்து வெளி வர துணிந்து விட்டதை அடுத்து விவாகரத்துக்கள் அதிகரித்துள்ளது.

Gayathri Raguram 4

அந்த வகையில் இந்த விவாகரத்துக்கள் பெண்களின் வாழ்க்கையில் கஷ்டத்தை ஏற்படுத்தி இருப்பதோடு மட்டுமல்லாமல் வெகுஜனம் மத்தியிலும் திரை உலகில் நட்சத்திர தம்பதிகளாக திகழும் தம்பதிகளின் மத்தியிலும் அதிகரித்து வருகின்ற சூழ்நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.

இப்ப இத விரும்பி செய்யும் பொண்ணுக..

இது பற்றி விரிவாக 90 காலகட்டங்களில் ஒரு மிகச் சிறந்த நடிகையாகவும் நடன இயக்குனராகவும் திகழ்ந்த காயத்ரி ரகுராம் ஓபனாக பேசியிருக்கும் பேச்சு இணையும் முழுவதும் பரவி வருகிறது.

இவர் பிக் பாஸ் 1 சீசனில் கலந்து கொண்டதோடு மட்டுமல்லாமல் ட்ரோல் மெட்டீரியலாக விளங்கியது உங்கள் நினைவில் இருக்கலாம். திரைப்படத்துறை மட்டுமல்லாமல் அரசியலிலும் ஈடுபட்டு வரும் காயத்ரி விவாகரத்து செய்யக்கூடிய பெண்களுக்கு சமுதாயத்தில் பெரிய அளவு பாதுகாப்பு இல்லை என்ற பகிர் குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.

Gayathri Raguram 3

விவாகரத்து ஆன பெண்களை இன்று இருக்கும் சமுதாயத்தில் ஆண்கள் அவர்களை அணுகுவது மிகவும் எளிது என்று நினைப்பதோடு மட்டுமல்லாமல் ஈசியாக காய்களை நகர்த்தி தாக்கி விடலாம் என்ற எண்ணம் நிலவுவதாகவும் சொல்லி இருக்கிறார்.

இதில் அந்தப் பெண் படிப்பறிவு இல்லாமல் இருக்கக்கூடிய பட்சத்தில் அவரது கேரக்டர் பற்றி அவதூறாக பேசும் விஷயங்கள் கூட அதிக அளவு நடக்கும்.

அதனால தடம் மாறும் வாழ்க்கை காயத்ரி ரகுராம் ஓபன் டாக்..

அந்த வகையில் அட்ஜெஸ்ட்மென்ட் பொருத்த வரை சினிமாத்துறை மட்டுமல்லாமல் பல்வேறு துறைகளிலும் பெண்களுக்கு எதிராக இது போன்ற கொடுமைகள் நடைபெற்றுக் கொண்டுதான் வருகிறது.

Gayathri Raguram 2

இதில் வெட்கமான விஷயம் என்னவென்றால் ஒரு பெண் விவாகரத்து பெற்று விட்டால் உடனே அவள் உடன் இருக்கும் ஆண் கூட அவளை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என நினைக்கும் அர்ப்ப புத்தி நிறைந்த ஆண்கள் இந்த சமுதாயத்தில் நிறைய உண்டு.

எனவே தான் பெண்கள் பெண்களுக்கு எதிராக இருக்கிறார்கள் குறிப்பாக விவாகரத்து ஆன அது மாதிரியான பெண்களோடு சில ஆண்கள் நெருங்கி பழகுவதை தவிர்க்க அவரது மனைவிகளை அந்த பெண்களோடு பழக விடமாட்டார்கள்.

எனவே என்னை ஒரு பெண்ணாக இருந்து பார்த்துக் கொள்ள வேண்டும். ஆணாக இருந்தும் பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயம் அப்பா இல்லாத குடும்பங்களில் தொடர்கதையாக உள்ளது.

Gayathri Raguram 1

கேரக்டரை ஒருவர் அவதூறாக பேசினால் நீங்கள் அதில் வீக் ஆகி விடுவீர்கள் என்று அவர்கள் நினைப்பதை பொய்யாக்க வேண்டும். என்னை பொறுத்த வரை அப்படி கிடையாது நீங்கள் தைரியமாக இருந்தால் எல்லாவற்றையும் சாதிக்கலாம்.

பாக்குறவன் பார்வை தவறாக இருந்தால் அது அவனுடைய பிரச்சனை அதில் நாம் எதுவும் செய்ய முடியாது என விவாகரத்து குறித்து தன்னுடைய ஓபன் கருத்தை ஓபன் ஆக சொல்லி இருக்கிறார் நடிகை காயத்ரி ரகுராம்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் பார்க்கும் பார்வையில் தான் அனைத்தும் உள்ளது என்று நினைப்பது தவறு என்பதையும் சுட்டிக்காட்டி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam