Tamil Cinema News

“எவனோ நம்ம பய தான்…” – முடியை பின்னாடி போட்டு கட்டுங்க..! – இறுதியில் நடந்த கூத்து..! – வைரலாகும் வீடியோ..!

உலக நாயகன் கமலின் மூத்த மகளான ஸ்ருதிஹாசன், தென்னிந்திய திரையுலகில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வந்து கொண்டிருக்கிறார். தமிழ்,தெலுங்கு, இந்தி மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார்.

பாடகி , நடனம், நடிப்பு என அனைத்திலும் கை தேர்ந்தவராக ஸ்ருதிஹாசன் இந்திய அளவில் அனைவராலும் கவனிக்கக் கூடிய மிக முக்கிய நடிகைகளில் ஒருவராக உள்ளார். குறிப்பாக தென்னிந்தியாவில் பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டு உள்ளார்.

தமிழ் சினிமாவிற்கு ஏழாம் அறிவு படத்தின் மூலம் அறிமுகமான இவர் அதைத் தொடர்ந்து 3, பூஜை, புலி,வேதாளம், சிங்கம்-3 என பல ஹிட் படங்களில் நடித்துள்ளார்.தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற ‘பிங்க்’ படத்தின் ரீமேக்கான நேர்கொண்ட பார்வை, தெலுங்கில் பவன் கல்யாண் நடிப்பில் வக்கீல் சாப் என்ற பெயரில் ரிலீஸ் ஆனது.

இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் ஸ்ருதிஹாசன். மறைந்த இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடித்த ‘லாபம்’ படமும் அண்மையில் ரிலீஸ் ஆனது.சோஷியல் மீடியாவிலும் படு ஆக்டிவாக விளங்கும் ஸ்ருதிஹாசன், அடிக்கடி ரசிகர்களுடன் கலந்துரையாடுவது வழக்கம்.

அந்த வகையில், சமீபத்தில் பேசும் போது, முடியை பின்னாடி வாரி கட்டுங்க என்று ரசிகர் ஒருவர் கேட்க, எதற்கு அப்படி சொல்கிறார் என்று புரியாமல் வெள்ளந்தியாக தனது கூந்தலை பின்னால் முடிந்தார்.. இறுதியில் சுதாரித்துக்கொண்டு கொஞ்சம் போரிங்கா இருக்குல்ல.. என்று மீண்டும் தலை முடியை முன்னால் எடுத்து போட்டுக்கொண்டார். இதனுடன் ஜி.பி முத்துவின் வாடிக்கையான வசனத்தை பின்னால் இணைத்து கூத்து செய்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

இந்த வீடியோ காட்சி, இணையத்தில் தீயாக பரவி வருகின்றது.

உலகில் அதிக முறை Forward ஆன மெசேஜ் - திகிலூட்டும் உண்மை சம்பவம் | Teresa Fidalgo | Master Kishore

 

-- Advertisement --

 

Copyright 1991 - 2022 Tamizhakam Media Services. All RIGHTS RESERVED.