பாலிவுட்டில் முன்னணி கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர்தான் மலைக்கா அரோரா. இவர் மணிரத்தினம் இயக்கிய உயிரை படத்தில் இடம்பெறும் தைய தையா பாடலில் மிக சூப்பராக ஷாருக்கான் உடன் இணைந்து நடனம் ஆடியவர்.
பாலிவுட்டில் பல படங்களில் நடித்து ரசிகர்களின் இதயத்தில் இதய ராணியாக திகழ்ந்த இவர் ஏறக்குறைய 50 வயதை நெருங்கி விட்டார்.
ஐம்பதிலும் ஆசை வரும் என்ற வாக்கியத்திற்கு ஏற்ப இவர் நடிகர் சல்மான்கானின் சகோதரர் அர்பாஸ் கானை கடந்த 1998 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஒரு மகன் உள்ள நிலையில் இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேற்றுமை காரணமாக 2017 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார்கள்.
இதனை அடுத்து இவர் தற்போது துணிவு பட தயாரிப்பாளரான போனி கபூரின் மகனாகிய அர்ஜுன் கபூர் மீது காதல் வயப்பட்டு இருப்பதோடு மட்டுமல்லாமல் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வந்திருக்கிறார்.
மேலும் அர்ஜுன் கபூரை விட மலைக்கா 12 வயது மூத்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வயதை வித்தியாசத்தை பொறுப்பெடுத்தாமல் காதலித்த இவர்கள் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போவதாக தெரியவந்துள்ளது.
இதற்குக் காரணம் நடிகை மலைக்கா கர்ப்பமாக இருப்பதாக பாலிவுட் வட்டாரத்தில் இந்த தீ காட்டு தீ போல் பரவி வருகிறது. திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா என்று பல கேள்விகளை எழுப்பிய நிலையில் இப்போது ட்ரோல் செய்து வருகிறார்கள்.
இதனை அடுத்து கடுப்பான இவர் கர்ப்பமாக இருக்கும் செய்தி உண்மையல்ல தயவுசெய்து இதுபோன்ற செய்திகளை தெரியாமல் பரப்ப வேண்டாம் என்று கடுமையான கோபத்தில் கூறியிருக்கிறார்.
இதனைப் புரிந்து கொண்ட ரசிகர்கள் எதற்கு நமக்கு வேண்டாத வேலை என்று தற்போது ஒதுங்கி விட்டார்கள் என தெரிகிறது. எனினும் இந்த செய்தியானது காட்டு தீ போல பரவி விட்டதால் இதை தடுப்பதற்கு என்ன வழி என்று தெரியாமல் அனைவரும் முழித்துக் கொண்டிருக்கிறார்கள்.