விஜய், அஜித் படத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி.. ரீசன் தெரிஞ்சு ஷாக்கான ரசிகாஷ்..

தென்னிந்திய திரை உலகில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழும் சாய் பல்லவி கோவையை சேர்ந்தவர். படுகர் இனத்தைச் சேர்ந்த இவர் பல் மருத்துவ படிப்பை முடித்து இருப்பவர்.

நடனத்தின் மீது அதிக அளவு ஆர்வம் கொண்டிருந்த காரணத்தால் விஜய் தொலைக்காட்சியில் நடைபெற்ற உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றார். இதனை அடுத்து இவருக்கு 2009 இல் தெலுங்கு தொலைக்காட்சியில் தே அல்டிமேட் டான்ஸ் என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

விஜய், அஜித் படத்திற்கு நோ சொன்ன சாய் பல்லவி..

மலையாளத் திரைப்படமான பிரேமம் திரைப்படத்தில் மலர் டீச்சர் கேரக்டரை செய்து பலரது மனதிலும் இடம் பிடித்த இவர் 2016 ஆம் ஆண்டு கலி என்ற திரைப்படத்தில் துல்கர் சல்மானோடு இணைந்து நடித்தார்.

இதனை அடுத்து இவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் வந்து சேர்ந்தது. அந்த வகையில் தெலுங்கு, தமிழ் என அனைத்து மொழிகளிலும் நடிக்க ஆரம்பித்தார். இவர் நடிக்கின்ற படங்களில் சிறந்த கதை அம்சம் உள்ள கதைகளை தேர்வு செய்து நடிப்பதில் வல்லவராக திகழ்கிறார்.

இந்நிலையில் அண்மையில் நடிகை சாய் பல்லவி தமிழில் முன்னணி நடிகர்களாக திகழும் தளபதி விஜய் மற்றும் தல அஜித்தோடு இணைந்து நடிக்க கூடிய வாய்ப்பு கிடைத்தும் அந்த வாய்ப்பை மறுத்துவிட்டதாக செய்திகள் வேகமாக பரவியது.

பொதுவாகவே சாய் பல்லவி தன்னைப் பற்றி வரும் கிசுகிசுகளுக்கு எந்த விதமான பதில்களும் அளிக்க மாட்டார். அதன் போக்கில் அப்படியே விட்டுவிடுவார். ஆனால் இப்படி வந்த செய்திகளுக்கு அவர் உடனடியாக பதில் அளித்து இருக்கிறார்.

அந்த பதில் அவர் ஏன் தளபதி விஜய் மற்றும் தல அஜித்தோடு நடிக்கவில்லை என்ற விஷயத்தை முற்றுப்புள்ளி வைக்க கூடிய வகையில் பதில் அளித்ததை பார்த்து பலரும் அசந்து போனார்கள்.

ரீசன் தெரிஞ்சு ஷாக்கான ரசிகாஷ்..

அப்படி அவர் என்ன பதில் அளித்து இருப்பார் என்று நீங்கள் நினைக்கலாம். அவர் அளித்த பதில் தமிழில் முன்னணி ஹீரோவாக இருக்கும் தளபதி விஜய் மற்றும் தல அஜித் உடன் எல்லா நடிகைகளுமே நடிக்க விருப்பப்படுவார்கள். அப்படித்தான் நானும் இருக்கிறேன்.

எனினும் எனக்கு இந்த நிமிடம் வரை தளபதி விஜய் மற்றும் தல அஜித்தோடு இணைந்து நடிக்க எந்த ஒரு பட வாய்ப்பு வந்து சேராத நிலையில் நான் எப்படி அவர்களின் படத்தில் நடிக்க விரும்பவில்லை அவர்களின் படத்தில் நடிக்க நோ சொல்லிவிட்டேன் என்று சொல்லுவீர்கள்.

இப்படி நடக்காத விஷயத்தை நடந்தது போல் சித்தரித்து பேசுவது மிகவும் தவறு என்பதால் தான் உடனடியாக இந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் நான் இதற்கு பதில் அளித்து இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

இதனை அடுத்து இந்த பதிலைக் கேட்ட சாய் பல்லவியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல் தளபதி விஜய் மற்றும் தல அஜித்தின் ரசிகர்களும் அவரது பதிலில் உண்மை உள்ளது என்பதை உணர்ந்து கொண்டு ஆச்சரியத்தில் உறைந்து போனார்கள்.

எனவே இனி வரும் காலத்தில் சாய் பல்லவிக்கு தளபதி விஜய் மற்றும் தல அஜித்தோடு நடிக்க வாய்ப்பு கிடைத்து கதையில் தன்மையும் அவருக்கு பிடித்திருந்தால் கட்டாயம் நடிப்பார் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version