சரோஜாதேவியிடம் ஜெயலலிதா யாருக்கு தெரியாமல் வாங்கிய சத்தியம்.. வெளி வந்த அதிர்ச்சி சம்பவம்!!

கன்னடத்து பைங்கிளி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்ட நடிகை சரோஜாதேவி பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவரது துறுதுறு பார்வையும் குழந்தைத்தனமான பேசும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததை அடுத்து இவருக்கு என்று தனி ரசிகர் வட்டாரம் உருவானது.

தென்னிந்திய மொழி படங்களில் அதிக அளவு நடித்திருக்க கூடிய நடிகை சரோஜாதேவி தமிழில் முன்னணி நடிகர்களாக திகழ்ந்த எம்ஜிஆர், சிவாஜி, முத்துராமன் என பலரோடும் இணைந்து நடித்து தனது அற்புத நடிப்பை வெளிப்படுத்தியவர்.

சரோஜாதேவியிடம் ஜெயலலிதா யாருக்கு தெரியாமல் வாங்கிய சத்தியம்..

அந்த வகையில் புரட்சித்தலைவர் எம்ஜிஆர்ரோடு அதிக படங்களில் இணைந்து நடித்த ஜோடிகளாக சரோஜாதேவி மற்றும் ஜெயலலிதாவை நாம் சொல்ல முடியும். இவர் ஜெயலலிதா திரையுலகில் காலடி எடுத்து வைக்கும் முன்னரே நடிப்பில் களைகட்டிய சீனியர் நடிகை.

சரோஜாதேவியின் நடிப்பால் பெரிதும் ஈர்க்கப்பட்ட ரசிகர்கள் அவரை அபிநய சரஸ்வதி என்ற அடைமொழியோடு அழைத்தது உங்கள் நினைவில் இருக்கலாம். சினிமாவில் நடித்துக் கொண்டு இருக்கும் போதே திருமணம் செய்து கொண்டார் நடிகை சரோஜாதேவி.

இதனை அடுத்து ஒரு கட்டத்தில் இவர் கணவர் எதிர்பாராத விதமாக இறந்து போக அந்த இறப்பு நிகழ்வுக்கு எம்ஜிஆர் தனது மனைவி ஜானகியோடு சென்றிருந்தார்.

அந்த சமயத்தில் சரோஜாதேவிக்கு ஆதரவாக பேசி அவரது துக்கத்தை பகிர்ந்து கொண்ட எம்ஜிஆர் இந்த மீளா துயரிலிருந்து வெளி வர மீண்டும் திரைப்படங்களில் நடிக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்தார்.

எம்ஜிஆர் சொன்ன வார்த்தையை ஏற்றுக் கொண்ட சரோஜாதேவி மீண்டும் பல படங்களில் ஹீரோயினியாக நடித்து திரை உலகில் உச்சகட்ட நடிகையாக வலம் வந்தார்.

வெளி வந்த அதிர்ச்சி சம்பவம்..

இந்நிலையில் திரைப்படங்களில் நடித்து வந்த ஜெயலலிதா தமிழக முதல்வராக மாறிய பின்பு கன்னடத்துப் பைங்கிளி சரோஜா தேவியை தனது இல்லத்திற்கு அழைத்து தனது நட்பினை தொடர்ந்ததோடு மட்டுமல்லாமல் கடைசி வரை நட்போடு இருந்தார்.

அந்த வகையில் ஒரு முறை சரோஜாதேவி தன் வீட்டிற்கு வந்த போது அவர் நடித்த புதிய பறவை திரைப்படம் தன்னுடைய ஃபேவரைட் திரைப்படம் என்று முதல்வர் ஜெயலலிதா அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அது மட்டுமல்லாமல் எந்த சமயத்திலும் நீங்கள் டாப்பில் இருந்து கீழே இறங்கக்கூடாது. எப்போதும் கதாநாயகியாக தான் நடிக்க வேண்டும். சின்ன சின்ன கதாபாத்திரத்தில் நடிக்க வேண்டாம் இப்போது இருப்பது போல் எப்போதும் இருக்க வேண்டும் என்று சத்தியம் வாங்கிக் கொண்டார்.

இந்த விஷயமானது தற்போது இணையம் முழுவதும் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version