ஜனகராஜ் வாழ்வில் நடந்த சோகம்..! கண்கள் இடம் மாறிய காரணம் தெரியுமா..?

எண்பதுகளில் காமெடி நடிகர்கள் கவுண்டமணி செந்தில் தங்களுடைய சினிமாவில் உச்சத்தை தொட்டிருந்த நேரம். இவர்கள் இருவரும் இல்லாமல் ஒரு திரைப்படம் வெளியானால் அந்த படம் ரொம்ப நாள் ஓடாது என்ற ஒரு சூழல் அந்த நேரத்தில் நிலவியது.

அப்போது, காமெடி நடிகராக சினிமாவுக்குள் நுழைந்து மிகப்பெரிய மாற்றத்தை கொண்டு வந்தவர் கொண்டு வந்தவர் நடிகர் ஜனகராஜ். கவுண்டமணி செந்தில் ஆகிய இருவரின் காமெடியை மிஞ்சும் விதமாக ஒரு கண்ணை மூடிக்கொண்டு வித்தியாசமான சிரிப்புடன் இவர் பேசும் மெட்ராஸ் தமிழுக்கு ரசிகர்கள் பட்டாளம் உருவானது.

செந்தில் கவுண்டமணிக்கு நிகராக இவருக்கும் பட வாய்ப்புகள் குவிந்தன. தற்போது வரை 200-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியிருக்கிறார்.

நடிகர் ஜனகராஜ் அறிமுகமானது இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான கிழக்கே போகும் ரயில் திரைப்படம் தான். இயக்குனர் பாரதிராஜா வீட்டிற்கு அருகே தன்னுடைய சொந்த வீட்டில் வசித்து வந்தவர் தான் ஜனகராஜ்.

அப்படி பாரதிராஜா உடன் ஏற்பட்ட பழக்கம் தான் இவருக்கு கிழக்கே போகும் ரயில் படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றுக் கொடுத்தது. சினிமாவில் அறிமுகமானபோது எல்லோரையும் போல வழக்கமான முக அமைப்புடன் தான் காணப்பட்டார் கனகராஜ்.

ஆனால் ஒரு கட்டத்தில் இவருடைய முக வாதம் வந்தது போல.. முகம் மாறி.. கண்கள் இடம் மாறியது போன்ற தோற்றம் உருவானது. இதற்கு என்ன காரணம்..? அதற்கு பின்னால் இருக்கும் சோக சமபாவம் குறித்து பலருக்கும் தெரிந்திருக்காது.

தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த ஜனகராஜ் பாலைவன சோலை என்ற படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். அந்த படத்தின் படப்பிடிப்புக்காக வெளியூருக்கு சென்று கொண்டிருந்த பொழுது யாரோ எரிந்த கல் ஒன்று இவருடைய முகத்தில் பலமாக வந்து தாக்கியிருக்கிறது.

அந்த கல்லை யார் வீசினார்கள்.. என்ன விபரம் என்று எதுவும் தெரியவில்லை. ஆனால், இந்த தாக்குதலால் ஜனகராஜின் முகம் கடுமையாக பாதிக்கப்பட்டு இருக்கிறது. ஒரு பக்கம் முகம் வீங்கி இருக்கிறது. இவருடைய கண்கள் இடம் மாறி இருக்கின்றன.

சினிமாவில் நம்பிக்கை நாயகனாக முன்னேறிக் கொண்டிருந்த ஜனகராஜ் தன்னுடைய நம்பிக்கையை அந்த நேரத்தில் இழந்தார். முகம் மிகவும் பாதிக்கப்பட்டிருந்ததால் இது மேலும் சினிமாவில் நடிக்க முடியுமா..? என்று துவண்டு போனார்.

அந்த கடினமான சூழலில் இவருடைய நண்பர்கள் சினிமா பிரபலங்கள் அனைவரும் இவருக்கு ஒன்றுமில்லை பார்த்துக் கொள்ளலாம் என்று ஆறுதல் மட்டுமே கூறினார்கள். ஆனால் இவரை சினிமாவில் அறிமுகப்படுத்திய பாரதிராஜா கூறிய ஒரு வார்த்தை தான் இவரை தொடர்ந்து திரைப்படங்களில் நடிக்க வைத்தது.

பாரதிராஜா என்ன கூறினார்..? என்றால்,.. இந்த முகத்தை வைத்துக்கொண்டு எப்படி நடிக்க முடியும் என்று கவலைப்படுகிறாயா? என்னுடைய அடுத்த படத்தில் நீதான் ஹீரோ நான் அடுத்ததாக இயக்க உள்ள காதல் ஓவியம் திரைப்படத்தில் நீதான் ஹீரோ.. இப்போது என்ன சொல்கிறாய்..? என்று ஜனகராஜை பார்த்து கேட்டிருக்கிறார்.

அப்போது மீண்டும் பிறந்தது போல உணர்ந்திருக்கிறார் ஜனகராஜ். அந்த படம் வெளியான பிறகு மீண்டும் தன்னுடைய திரைப்பயணத்தில் எந்த தொய்வும் இல்லாமல் பயணப்பட்டார் ஜனகராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam