பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்.. படியாத பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி!! 21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

கேரளாவில் ஹேமா கமிஷன் வெளிவந்து இந்தியாவில் ஒரு மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியது உங்களுக்கு நினைவிருக்கலாம். அந்த சூடு தனியாக முன்பே தற்போது தெலுங்கு சினிமாவில் டான்ஸ் மாஸ்டர் ஜானி செய்த பாலியல் விஷயம் விஸ்வரூபமாக மாறி உள்ளது.

இந்த டான்ஸ் மாஸ்டர் ரஞ்சிதமே ரஞ்சிதமே காவலா போன்ற பாடல்களுக்கு நடனம் அமைத்தவர். அதுமட்டுமல்லாமல் திருச்சிற்றம்பலம் படத்தில் தேசிய விருதைப் பெற்ற ஒரு டான்ஸ் மாஸ்டர் என்பதை நினைக்கும் போது நெஞ்சு பொறுக்குதில்லையே என்ற பாரதியின் வரிகள் தான் நினைவில் வருகிறது.

பகலில் மாஸ்டர் இரவில் கொடூரன்..

திருமணம் ஆகி பிள்ளை குட்டி என்று நல்ல முறையில் செட்டிலாக இருக்கும் இந்த டான்ஸ் மாஸ்டர் கடந்த சில வருடங்களாக 21 வயதை நிறைந்த பெண்ணை பாலியல் ரீதியாக வன்கொடுமைப்படுத்தி இருக்கும் விஷயம் வன்மையாக கண்டிக்கத்தக்கதோடு மட்டுமல்லாமல் தக்க தண்டனையை கொடுக்க வேண்டும் என்று பலர் மத்தியிலும் பேச வைத்துள்ளது.

இது ஹைலைட்டான விஷயம் என்றால் என்னவென்றால் இது போன்ற விஷயத்தில் இவரது மனைவியும் உடந்தையாக இருந்திருக்கிறார்.

நெல்லுரை பூர்வீகமாகக் கொண்ட டான்ஸ் மாஸ்டராக சினிமா இண்டஸ்ட்ரியல் படிப்படியாக வளர்ந்து இந்த அளவு முன்னேறியவர். மேலும் முக்கிய பிரபல நடிகர் நடித்த திரைப்படத்தில் நடித்த ஒரு பெண் அதுவும் 16 வயது பெண் தான் இவருக்கு உதவியாளராக இருந்திருக்கிறார்.

மராட்டியத்தை பூர்வீகமாகக் கொண்ட அந்தப் பெண் இவரிடம் தொழில் கற்றுக் கொள்ள வேண்டும் என்று வந்தவர். அந்தப் பெண்ணைத்தான் சைக்கோ போல இவர் பல்வேறு வகைகளில் தொல்லைகளை கொடுத்து இருக்கிறார்.

பெண்களை மிரட்டி சூறையாடிய ஜானி..

இதுவே அந்த கால படங்களில் மிகவும் நேர்த்தியான முறையில் நடன காட்சிகளை பதிவு செய்து இருக்கிறார்கள் எம்ஜிஆர் மற்றும் ராஜஸ்ரீ பஞ்சாபி டான்ஸ் ஆடிய போது அதை ஷூட் செய்து சமயத்தில் எம்ஜிஆர் ஒரு வாரம் பயிற்சியை மேற்கொண்டு அந்த நடனத்தை ஆடியிருக்கிறார் எனினும் இரண்டு டேக்குகள் எடுக்கச் சொல்லி இயக்குனர் சொல்லி இருக்கிறார்.

இதனை அடுத்து ராஜஸ்ரீ இயக்குனரிடம் ஏற்கனவே செய்த மிகவும் சிறப்பாக தான் இருந்தது. எனினும் நீங்கள் ஏன் இரண்டு டேக்குகள் செய்வீர்கள் என்று கேட்டதற்கு முதல் தேக்கில் ராஜஸ்ரீயின் உள்ளாடை தெரிந்ததாக கூறிய இவர் இது ஆடியன்ஸுக்கு தெரிந்தால் அவ்வளவு சிறப்பாக இருக்காது அதனால் தான் ரீடெக் சொன்னேன் என்று சொல்லியிருக்கிறார்.

இந்த கண்ணியம் அன்று இருந்தது. அது தற்போது எங்கு சென்றது என்று கேட்கக் கூடிய அளவு ஜானி மாஸ்டரின் செயல் அமைந்துவிட்டது என்று செய்யாறு பாலு கூறி இருக்கிறார்.

இதை விடக் கொடுமை தற்போது ஜானி மாஸ்டருக்கு சில பேர் ஆதரவாக பேசி இருப்பதோடு அந்த பெண் ஏன் இத்தனை நாள் வாய் மூடி மௌனியாக இருந்தது என்ற கேள்வியையும் வைத்திருக்கிறார்கள். இதற்கு பதில் அளித்து இருக்கும் செய்யாறு பாலு அந்த பெண்ணிற்கு எந்த அளவு மன அழுத்தம் இருந்திருக்கும் என்றும் மேலும் அந்தப் பெண் மிரட்டப்பட்டு இருந்திருக்கலாம் என்றும் அது நிமித்தமாக பல கேஸ்கள் போடப்பட்டுள்ளது என்பதையும் கூறினார்.

இதில் ஜானி மாஸ்டர் பவன் கல்யாண் கட்சியில் முக்கிய பொறுப்பில் இருக்கிறேன் என்று கூறுகிறதோடு அந்தப் பெண்ணை பாலியல் ரீதியாகவும் மனரீதியாகவும் தொந்தரவுகள் பல செய்திருக்கிறார். எனினும் ஜனசேனா கட்சியில் இருப்பதால் தன்னை ஒன்றும் பண்ண முடியாது என்று பேசி இருக்கிறார்.

21 வயது பெண் பட்ட கொடுமைகள்..

தான் கட்சியில் இருக்கக்கூடிய விஷயத்தை சொல்லி சொல்லியே அந்தப் பெண்ணை அதுவும் 21 வயது நிரம்பிய பெண்ணை பல்வேறு கொடுமைகள் செய்ததை அடுத்து ஒரு கட்டத்தில் பொறுக்க முடியாமல் தான் உண்மையைப் போட்டு அந்த பெண் உடைத்திருக்கிறார்.

இதைத்தொடர்ந்து பாடகி சின்மயி இந்த பெண் குறித்து போடப்பட்ட 16 வயதிலிருந்து அதாவது மைனராக இருக்கும் போதே அந்த பெண்ணை இது போன்ற அவஸ்தைகளுக்கு உள்ளாக்கி இருக்கிறார் என்று கூறி இருக்கிறார்.

மேலும் மைனர் பெண்ணின் மீது கை வைத்த இவருக்கு கடுமையான தண்டனைகளை கொடுக்க வேண்டும் என்று கேட்டு இருப்பதோடு பவன் கல்யாண் தன் கட்சியிலிருந்து அந்த நபரை தற்போது நீக்கி இருப்பதும் வரவேற்கத்தக்க விஷயமாகும்.

மேலும் ஆண்களை கூட விட்டு வைக்கவில்லை என்ற ஜானி மாஸ்டர் என்று சொல்லக்கூடிய வகையில் இவரது நடத்தை உள்ளது எனவே இவரை போன்ற நபர்களை சட்டம் கண்டிப்பாக தனது இரும்புக்கரம் கொண்டு அடக்கி தக்க தண்டனை கொடுக்க வேண்டும்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam