அப்பாவுக்காக அந்த முடிவை எடுக்கிறேன்?… விஜய்க்காக விட்டு கொடுத்த ஜேசன் சஞ்சய்..!

என்னதான் தமிழ் சினிமாவிலேயே பெரிய டாப் நடிகராக இருந்தாலும் கூட இப்பொழுது விஜய் எடுத்திருக்கும் முடிவு பலருக்குமே இன்னமும் ஜீரணிக்க முடியாத ஒரு முடிவாகதான் இருக்கிறது.

விஜய் திடீரென்று சினிமாவிலிருந்து விலகப் போவதாக அறிவித்திருக்கிறார் விஜய்யின் சினிமா பயணம் என்பது மிகப்பெரியதாக இருந்து வருகிறது. இப்படி ஒரு இடத்தை பிடிப்பதற்கு எக்கச்சக்கமான ஏற்ற இறக்கங்களை கண்டுள்ளார் நடிகர் விஜய்.

அப்பாவுக்காக அந்த முடிவை எடுக்கிறேன்

அப்படியெல்லாம் இருந்துமே கூட அதையெல்லாம் விட்டுவிட்டு மக்கள் சேவை செய்வதற்காக அரசியல் கட்சியை துவங்கியிருக்கிறார். தொடர்ந்து 2026 தேர்தலுக்குப் பிறகு அவர் மொத்தமாக சினிமாவில் இருந்து விலக இருக்கிறார்.

இந்த நிலையில் விஜய்யின் வாரிசான ஜேசன் சஞ்சய் சினிமாவில் களமிறங்க இருக்கிறார். கரெக்டாக அவருடைய தந்தை சினிமாவை விட்டு போகும் பொழுதுதான் இவர் சினிமாவிற்குள் வருகிறார். இயக்குனராக சினிமாவிற்குள் அறிமுகமாகிறார் ஜேசன் சஞ்சய்.

ஜேசன் சஞ்சய் முடிவு:

சிறு வயதிலிருந்தே ஜேசன் சஞ்சய்க்கு இயக்குனராக வேண்டும் என்பதுதான் இவருக்கு ஆசையாக இருந்து வந்துள்ளது. அவன் என்னுடைய ரத்தம் அப்படித்தான் இருப்பான் என்று இது குறித்து எஸ்.ஏ சந்திரசேகர் கூட ஒரு பேட்டியில் பெருமையாக கூறியிருந்தார்.

இந்த நிலையில் ஏற்கனவே ஒரு கதையை எழுதி வைத்திருக்கும் ஜேசன் சஞ்சய் அதை லைகா நிறுவனத்திடம் கூறி வாய்ப்புகளையும் பெற்று விட்டார். விடாமுயற்சி திரைப்படத்தின் வெளியீட்டுக்கு பிறகு ஒரு சில மாதங்களில் ஜேசன் சஞ்சையின் திரைப்படம் துவங்க இருப்பதாக கூறப்படுகிறது.

அப்பாவுக்காக எடுத்த முடிவு:

ஏனெனில் இப்பொழுது கொஞ்சம் பட்ஜெட் பிரச்சனையில் சிக்கி இருக்கிறது லைகா நிறுவனம். இந்த நிலையில் விஜய்யை பொறுத்தவரை ஜேசன் சஞ்சய் இயக்குனராக ஆவதை விட கதாநாயகனாக நடிக்க வேண்டும் என்பதுதான் விஜய்யின் ஆசையாக இருந்து வருகிறதாம்.

விஜய்யின் வெற்றிடத்தை தனது மகன் ஜேசன் சஞ்சய்தான் நிரப்ப வேண்டும் என்று விஜய் ஆசைப்படுவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இந்த விஷயத்தை அறிந்த ஜேசன் சஞ்சய் நான்கு திரைப்படங்கள் மட்டும் தான் இயக்கப் போவதாகவும் அதற்குப் பிறகு கதாநாயகனாக நடிக்க போவதாகவும் முடிவு எடுத்திருப்பதாக கூறப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version