சென்னையில் உள்ள ஒரு ஒரு நீச்சல் குளத்தில் குளித்துவிட்டு வெளியே வருகின்ற ஒரு இளம் பெண்ணை இயக்குனர் ஸ்ரீதர் அவர்களும் சித்ராலயா கோபு அவர்களும் பார்த்தார்கள்.
அப்போது அவர்கள் இருவரும் வெண்ணிற ஆடை படத்திற்கு கதாநாயகியை தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் தான் அந்த பெண்ணை அவர்கள் பார்த்தார்கள். ஸ்ரீதர் அவர்களுக்கு மிகவும் பிடித்து விட்டது.
இளம் விதவைப் பெண் வேடத்தில் நடிக்க வேண்டும் என்று கேட்டார்கள். அதனை கேட்ட ஜெயலலிதா அவர்களின் தாயார் சந்தியா அதிர்ந்து போனார். என்னுடைய மகள் நடித்த முதல் கன்னட திரைப்படத்திலும் அவளுக்கு விதவை வேடம் தான் கொடுக்கப்பட்டது.
தமிழிலும் அவளுக்கு விதவை வேடமா..? கண்டிப்பாக எங்களால் நடிக்க முடியாது என்று வருத்தப்பட்டார். ஆனால், இயக்குனர் ஸ்ரீதர் இந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமான கதாபாத்திரம் இந்த கதாபாத்திரத்தில் நடித்த உங்கள் மகளுக்கு மிகப்பெரிய எதிர்காலம் இருக்கிறது பெரிய ஆளாக வருவார் நம்புங்கள் என்று கூறினார்.
ஒரு வழியாக சரி என ஒப்புக்கொண்டு அந்த படத்தில் நடித்தார் ஜெயலலலிதா. அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இயக்குனர் சொன்னது போலவே ஜெயலலிதா அவர்கள் மிகப்பெரிய நடிகையானார். தமிழ்நாட்டின் முதலமைச்சரும் ஆனார்.
இயக்குனர் ஸ்ரீதர் சொன்னது போலவே பெரிய ஆள் ஆகிவிட்டார் நடிகை ஜெயலலிதா. ஆனால், அவருடைய முதல் படத்தில் என்ன கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தாரோ..? அதே நிலைதான் அவருடைய வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது.
ஒரு விதவை எப்படி தனியாக இருப்பாரோ.. அதுபோல ஜெயலலிதா அவர்கள் யாரையும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாகவே வாழ்ந்தார்.. தனியாகவே இருந்தார்.. தனியாகவே சென்று விட்டார்.. இப்படி நடிகை ஜெயலலிதாவின் விதி அவருடைய முதல் படத்திலேயே எழுதப்பட்டிருக்கிறது என்பது சோகமான ஒரு விஷயம்.