ஜெயலலிதா நடித்து.. பார்க்க முடியாமல் போன “A” படம்..!

காலம் சென்ற தமிழக முன்னாள் முதல்வர் செல்வி ஜெ ஜெயலலிதா அவருடைய திரைப்பயணம் தொடங்கிய படத்தில் அவருக்கு ஏற்பட்ட சங்கட்டமான அனுபவம் குறித்தும் தற்போது வெளியாக கூடிய படங்கள் மற்றும் அதற்கு கொடுக்கப்படும் தணிக்கை சான்றிதழ் குறித்தும்.. எப்படி இருந்த சினிமா இப்படி மாறிப்போச்சு என்று ஒரு நிமிஷம் யோசிக்க வைக்கும் அளவுக்கான ஒரு பதிவு தான் இது.

கடந்த 1965 ஆம் வருடம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு வெளியான திரைப்படம் வெண்ணிற ஆடை மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது. இந்த படத்தை இயக்குனர் ஸ்ரீதர் இயக்கியிருந்தார்.

இந்த படத்தில் நடிகைகள் நிர்மலா, நடிகர் மூர்த்தி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். சித்ராலயா தயாரிப்பு நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம் டேவிட் அண்ட் லிசா என்ற ஆங்கில படத்தை தழுவி எடுக்கப்பட்ட திரைப்படம்.

இது தான் ஜெயலலிதா நடிகையாக அறிமுகமான முதல் திரைப்படம். இந்த படத்தில் நடிக்கும் போது அவருக்கு வயது 17 தான். முதல் படத்தை நடித்து முடித்துவிட்டு திரையரங்கில் காணலாம் என ஆவலுடன் காத்திருந்த ஜெயலலிதாவிற்கு ஏமாற்றமே மிஞ்சியது.

????????????????????????????????????????????????????????????????????????????????????

என்ன காரணம் என்றால் இந்த படத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு நீர்வீழ்ச்சி ஒன்றில் நடனமாடுவது போன்ற ஒரு காட்சிகள் நடித்திருப்பார் ஜெயலலிதா.

“அம்மம்மா காற்று வந்து ஆடை தொட்டு பாடும்” என்ற பாடலில் ஸ்லீவ்லெஸ் ஜாக்கெட் சகிதமாக அருவியில் குளித்த படி நடனமாடி இருப்பார் ஜெயலலிதா. இது இதன் காரணமாக இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுக்கப்பட்டது.

அதே சமயம் இந்த படத்திற்கு ஏ சர்டிபிகேட் கொடுப்பதற்கான இன்னும் சில காரணங்களும் கூறப்படுகிறது. இந்த படத்தில் மருத்துவராக நடித்திருந்த ஒருவர் ஒரு பெண்ணின் ஆடையை கழட்டுவது போன்ற காட்சிகளும் இடம் பெற்றிருந்தது. இதுவும் இந்த படத்திற்கு ஏ சான்று கொடுக்க ஒரு காரணமாக இருந்திருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.

இந்த படம் வெளியான போது ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நாட்கள் செல்ல செல்ல இந்த படம் ஒரே திரையரங்கில் ஒரு வருடம் ஓடும் அளவுக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்த படத்திற்கு ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்ட காரணத்தினால் அப்போது 17 வயது ஆகியிருந்த நடிகை ஜெயலலிதா இந்த படத்தை பார்க்க அனுமதிக்கப்படவில்லை. இந்த சம்பவம் நடந்தது 1965 ஆம் ஆண்டு.

ஆனால் தற்போது இருக்கும் சினிமாவை பார்த்தால் ஏ சான்று கொடுக்கப்பட்ட படத்தை பள்ளி மாணவர்கள் பார்க்கிறார்கள்.. குழந்தைகளோடு சென்று பார்க்கிறார்கள்.. எந்த ஒரு கட்டுப்பாடும் கிடையாது.

மேலும், வெண்ணிறை ஆடை படத்தில இடம் பெற்று இருந்த காட்சிகளை விட மோசமான காட்சிகளிடம் பெற்ற படத்திற்கு கூட இப்போது யூ சான்றிதழ் கொடுப்பதை நீங்கள் பார்த்திருக்கலாம்.

ஒரு காலத்தில் ஸ்லீவ்லெஸ் உடை அணிந்து கொண்டு அருவியில் ஆட்டம் போட்டதற்கு ஏ சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். ஆனால் இப்போது வெளியாகும் படங்களுக்கு இப்படி எந்த கட்டுப்பாடுமே இல்லையே என்று விசனப்படுகிறார்கள் விஷயம் தெரிந்த வட்டாரங்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version