ஸ்டேஷனில் நடந்த அக்கப்போரு.! மாறி மாறி ஜெயம் ரவி ஆர்த்தி ரவி செய்த வேலை..!

ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி அவர்கள் இருவருக்கும் இடையேயான விவாகரத்து என்பது தற்சமயம் அதிக வீரியமிக்க விஷயமாக சென்று கொண்டிருக்கிறது. ஆரம்பத்தில் சின்ன கருத்து வேறுபாட்டால் இவர்கள் விவாகரத்து செய்ய போகிறார்கள் என்று மக்கள் நினைத்து வந்தனர்.

இந்த நிலையில் அதையெல்லாம் தாண்டி நிறைய பிரச்சனைகள் அவர்களுக்குள் நடந்துள்ளதாக கூறப்படுகிறது இந்த 18 வருட திருமண வாழ்க்கையில் ஒரு பத்து வருடம் மட்டும்தான் ஜெயம் ரவி சந்தோஷமாக வாழ்ந்ததாக கூறப்படுகிறது.

ஸ்டேஷனில் நடந்த அக்கப்போரு

அதற்கு பிறகு அவர்கள் இருவருக்குமே கருத்து வேறுபாடு தொடர்ந்து இருந்துள்ளது. இருந்தாலும் எடுத்தவுடன் விவாகரத்து என்று போக வேண்டாம் பிள்ளைகளின் வாழ்க்கை பாதிக்கப்படும் என்று ஜெயம் ரவியும் ஆர்த்தியும் அமைதியாக இருந்துள்ளனர்.

தற்சமயம் இவர்கள் இருவருக்கும் இடையே இனி ஒத்து வராது என்கிற நிலை ஏற்பட்டு இருக்கிறது. ஆனால் தொடர்ந்து ஜெயம் ரவிக்கு எதிராக ஆர்த்திதான் நிறைய விஷயம் செய்து வருவதாக வெளியில் பேசப்பட்டு வருகின்றன.

ஜெயம் ரவி ஆர்த்தி ரவி

ஏனெனில் ஆரம்பத்திலேயே ஜெயம் ரவி விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி தனது மனைவியிடம் ஒப்புதல் வாங்கி பிறகுதான் அது குறித்த பதிவை இணையத்தில் போட்டார். இருந்தாலும் ஜெயம் ரவி மீது கெட்ட பேர் வர வேண்டும் என்பதற்காக ஆர்த்தி தனக்கு எதுவுமே தெரியாது என்று இன்னொரு பதிவை போட்டுவிட்டார்.

அதேபோல இந்த விவாகரத்து பிரச்சனைக்கு முன்பு இருந்தே ஜெயம் ரவியின் அனைத்து விஷயங்களையும் ஆர்த்திதான் நிர்வகித்து வந்துள்ளார். சொல்ல போனால் ஜெயம் ரவியின் இன்ஸ்டாகிராம் அக்கவுண்ட் கூட ஆர்த்தியின் மொபைல் எண்ணில் ஓப்பன் செய்யப்பட்டது தான் என்று கூறப்படுகிறது.

மாறி மாறி செய்த வேலை

மேலும் ஜெயம் ரவியின் அலுவலகம் ஜெயம் ரவியின் வீடு என்று எல்லாவற்றிலும் ஆர்த்தியின் பங்கும் இருக்கிறது. இந்த நிலையில் எதையும் பிரித்துக் கொண்டு தனியாக ஜெயம் ரவி செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஜெயம் ரவி விவாகரத்தை அறிவித்ததும் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தை முடக்கிவிட்டார் ஆர்த்தி என்கிறார் ஜெயம் ரவி. அதனால் தான் அவர் அந்த பதிவை டிவிட்டரில் வெளியிட்டதாக கூறுகிறார். இந்த நிலையில் இதற்காக காவல் நிலையம் சென்ற ஜெயம் ரவி தன்னுடைய இன்ஸ்டாகிராம் கணக்கை தன்னிடம் தர வேண்டும்.

தனது பாஸ்போர்ட் கார் போன்றவற்றையும் தர வேண்டும் என்று கூறி வழக்கு தொடர்ந்து இருக்கிறார். பிறகு காவல் நிலையத்தில் இதற்காக பெரும் பஞ்சாயத்தை நடந்து இருக்கிறது. ஆர்த்தி ஜெயம் ரவி இருவரும் மாறி மாறி சண்டையிட்டுள்ளனர். பிறகு ஒரு வழியாக அவரது கார் சாவியையும் பாஸ்போட்டையும் போலீசார் வாங்கி கொடுத்திருக்கின்றனர். மெட்டா நிறுவனத்திடம் பேசி instagram கணக்கையும் திரும்ப பெற்று இருக்கிறார் ஜெயம் ரவி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam