ஆர்த்தி செய்த அட்டூழியங்கள்.. கார் இல்ல நடந்து போ..இது கூட சொந்தமா இல்ல – மனம் நொந்த ஜெயம் ரவி..!

நட்சத்திர தம்பதிகளான ஜெயம் ரவி மற்றும் ஆர்த்தி விவாகரத்து விஷயமானது தற்போது இணையம் எங்கும் பரவி பேசும் பொருளாக மாறியதோடு அவர்கள் பிரிவு பற்றிய பல்வேறு வகையான செய்திகள் தினம் தினம் வகை வகையாக வெளி வருகிறது.

அந்த வகையில் ஜெயம் ரவி விவாகரத்து பெறுவதற்கு முக்கிய காரணமே ஆர்த்தியின் ஆத்து மீறிய நடவடிக்கையால் ஜெயம் ரவி மனதளவில் பாதிக்கப்பட்டு இருக்கிறார். மேலும் அவர் செய்த அட்டூழியங்கள் ஜெயம் ரவியை ஆர்த்தி இடம் இருந்து பிரித்ததுவிட்டது என சொல்லலாம்.

ஆர்த்தி செய்த அட்டூழியங்கள்..

திருமணம் ஆகி 15 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்யப் போவதாக ஜெயம் ரவி அறிவித்த அறிவிப்பால் திரையுலகம் அதிர்ந்ததோடு மட்டுமல்லாமல் இந்த விவாகரத்தை ஆர்த்தி ஏற்றுக் கொள்ளாமல் தனக்கும் தன் குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் என்ன பதில் என்று கேட்டிருந்தார்.

மேலும் தன் கணவரை விட்டு பிரிய மனம் இல்லாமல் ஆர்த்தி ஜெயம் ரவியின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை வைத்ததோடு கோவாவில் இருக்கும் பாப் பாடகி கென்னிஷா உடன் தொடர்பு இருப்பதாக பரபரப்பான தகவல்களை ஆதாரப்பூர்வமாக வெளிப்படுத்தினார்.

இதனை அடுத்து ஜெயம் ரவி வாழு வாழவிடு என்ற ரீதியில் பிரதர் பட வெளியீட்டு விழாவிற்கு வந்த சமயத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்ததோடு தனக்கும் பாடகிக்கும் எந்த தொடர்பும் இல்லை. இவ்வாறு பேச வேண்டாம் என்று கூறியதோடு எதிர்காலத்தில் கிலிங் சென்டர் ஆரம்பித்து மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்ற விஷயத்தை வெளிப்படுத்தினார்.

மேலும் ஜெயம் ரவியின் இந்த விவாகரத்துக்கு காரணமே ஆர்த்தி ஜெயம் ரவியோடு இருக்கும் போது செய்த அட்டூழியங்கள் தான். அவர் மிகவும் டாமினேஷன் செய்ததும் ஜெயம் ரவியை மதிக்காமல் தன்னுடைய பண திமிரை ஒவ்வொரு இடத்திலும் அவர் மனம் போகும்படி காட்டியதும் தான் இந்த பிரிவுக்கு காரணம் என செய்யாறு பாலு கூறியிருக்கிறார்.

கார் இல்ல நடந்து போ.. இது கூட சொந்தமா இல்ல..

மேலும் தனக்கு என்று ஒரு மிகப்பெரிய ரசிகர் வட்டாரத்தை திரையுலகில் பெற்றிருக்கக் கூடிய ஜெயம் ரவிக்கு தனியாக வங்கியில் அக்கவுண்ட் இல்லை என்பது தெரிந்தால் நீங்கள் அதிர்ந்து போவீர்கள். ஆனால் அவருக்கு அக்கவுண்ட் இல்லை அது மட்டும் அல்லாமல் அவரது மனைவி காரை தராமல் அவரை சில சமயங்களில் நடந்து போக கூட சொல்லி இருக்கிறார்.

இப்படி அற்பதனமாக நடந்து கொண்ட ஆர்த்தியின் நடவடிக்கைகள் ஜெயம் ரவியை கடுமையான மன அதிர்ச்சியில் தள்ளியதோடு மட்டுமல்லாமல் அவருடைய பொசசிவ் தன்மை இவரை கடுமையாக பாதித்ததை அடுத்த தான் இந்த முடிவுக்கு வந்திருக்கிறார்.

பணக்கார வீட்டின் மருமகனாக இருந்தாலும் சுதந்திரமாக எதையும் செய்ய விடாமல் அவரது மாமியாரும் மனைவியும் பன்மடங்கு ஆதிக்கத்தை செலுத்தியதும் இந்த முடிவுக்கு காரணமாக இருக்கலாம்.

இவளை இவ்.வளவு ஏன் படங்களில் நடிப்பதற்காக கதைகளை ஆர்த்தி டிஸ்கஷன் என்ற பெயரில் கேட்டிருக்கிறார் இவர்தான் எந்த படத்தின் நடிக்க வேண்டும் என்பதை முடிவு செய்து அதற்கு உரிய சம்பளத்தையும் பிக் செய்து இருக்கிறார்.

மனம் நொந்த ஜெயம் ரவி..

இதுவரை ஜாயின் அக்கவுண்டில் மட்டுமே பணப்புழக்கம் இருந்து உள்ளதோடு மட்டுமல்லாமல் ஜெயம் ரவியின் சொத்துக்கள் கூட ஆர்த்தி கட்டுப்பாட்டில் உள்ளது என்ற பகீர் தகவல் தற்போது இணையம் முழுவதும் பரவி வருவதோடு ஏற்கனவே இந்த குடும்பத்தை பற்றி அனைவருக்கும் மிக நன்றாக தெரியும் அது தெரிந்தும் ஜெயம் ரவி எப்படி கோட்டை விட்டார் என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஒரு கட்டத்தில் ஜெயம் ரவியை சற்றும் மதிக்காத ஆர்த்தியின் மீது ஜெயம் ரவிக்கு வெறுப்பு ஏற்பட்டதோடு கடுமையான மன அழுத்தம் ஏற்பட்டதை அடுத்து ஆர்த்தியை விட்டு பிரிவு செய்ய முடிவு எடுத்து விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி இருக்கிறார்.

மேலும் இனி ஆர்த்தியோடு சேர்ந்து வாழ்வது கஷ்டம் என்ற முடிவில் எடுக்கக்கூடிய ஜெயம் ரவி இது பற்றி தனது மூத்த மகனிடம் பேசி இருப்பதாக செய்திகள் கசிந்துள்ளது.

இந்நிலையில் தான் ஜெயம் ரவியின் உண்மையான விவாகரத்துக்கு காரணம் ஆர்த்தி செய்த அட்டூழியங்கள் என்பது தற்போது தெரிய வந்துள்ளதோடு இதன் மூலம் மனம் நொந்து போய் ஜெயம் ரவி எடுத்த முடிவில் தவறு இல்லை என்று பலரையும் பேச வைத்துள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam