நடிகர் ஜெயம் ரவி பிரியங்கா மோகன் இருவரும் சேர்ந்து பிரதர் என்ற திரைப்படத்தில் ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த படத்தில் திருமண கோலத்தில் நடிகை ஜெயம் ரவியும் பிரியங்கா மோகனும் இருக்கும் புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகியிருக்கிறது.
இந்த புகைப்படங்களை பார்த்த சில ரசிகர்கள் இதை எதிர்பார்க்கவே இல்ல.. என்னடா நடக்குது இங்க…? என அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார்கள்.
சமீபத்தில் தான் நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து தகவல்கள் வெளியானது. நடிகர் ஜெயம் ரவியே அதிகாரபூர்வமாக இதனை வெளியிட்டு இருந்தார்..
இந்த நேரத்தில் ஒரு நடிகையுடன் திருமண கோலத்தில் நடிகர் ஜெயம் ரவி இருப்பது போன்ற புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஒரு நிமிடம் உறைந்து தான் போனார்கள்.
இது சில நிமிடம் கழித்து தான் இது பிரதர் படத்தில் இருந்து வெளியான புகைப்படம் என பெருமூச்சு விட்டனர்.
அதே சமயம் பிரதர் பட குழுவும் ஜெயம் ரவியை சுற்றி நடக்கும் பிரச்சனைக்கு ஏற்ப இந்த புகைப்படத்தை வேண்டுமென்றே தற்போது ரிலீஸ் செய்திருக்கிறார்கள் என்றும், படத்திற்கு பிரமோஷன் வேண்டும் என்ற பெயரில் இப்படி நேரம் கெட்ட நேரத்தில் இப்படியான புகைப்படங்களை வெளியிட வேண்டுமா..? என்ற கருத்தையும் முன் வைக்கிறார்கள் சில ரசிகர்கள்.
நல்லா பண்றீங்கப்பா புரமோஷனு..