பொது வெளியில் அதை செய்த ஹன்சிகா.. இதயமே நின்னு போயிட்டு.. ஆடிப்போன ஜெயம் ரவி.!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் ஜெயம் ரவி. பெரும்பாலும் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்களுக்கு முன்பு வரவேற்பு அதிகமாக இருந்தது.

ஆனால் இப்பொழுது எல்லாம் ஜெயம் ரவி திரைப்படம் என்றாலே மக்கள் திரையரங்கிற்கு சென்று பார்க்க யோசிக்கிறார்கள். அந்த அளவிற்கு தொடர்ந்து கதை தேர்ந்தெடுப்பதில் ஜெயம் ரவி நிறைய தடுமாற்றத்தை சந்தித்திருக்கிறார்.

ரொம்ப பெருமைப்பட்டுக்கிட்டு இருந்தேன்

அவர் நடித்த நிறைய திரைப்படங்கள் தொடர்ந்து தோல்வியை கண்டுள்ளன. ஜெயம் ரவி ஜாலியான கதாபாத்திரத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார் என்றால் எப்பொழுதும் அதை பார்ப்பதற்கு ரசிகர்கள் இருக்கிறார்கள். அப்படியான ஒரு திரைப்படமாக தான் தற்சமயம் பிரதர் என்கிற திரைப்படத்தில் நடித்து வருகிறார் ஜெயம் ரவி.

இந்த திரைப்படம் அக்கா சென்டிமென்ட் திரைப்படம் என்று கூறப்படுகிறது ஒரு அக்காவுக்கும் தம்பிக்கும் இருக்கும் உறவை பேசும் படமாக இது இருக்கும் என்று கூறப்படுகிறது. ஏற்கனவே இந்த கான்செப்டில் நிறைய திரைப்படங்கள் வந்திருந்தாலும் ஜெயம் ரவி நடிப்பது எப்படி இருக்கும் என்பது பலரது கேள்வியாக இருக்கிறது.

இதயமே நின்னு போயிட்டு

ஏனெனில் ஏற்கனவே இவர் குடும்ப செண்டிமெண்ட் கதைகளை கொண்ட எம் குமரன், சந்தோஷ் சுப்பிரமணியம் மாதிரியான திரைப்படங்களில் மெகா ஹிட் வெற்றியை கொடுத்திருக்கிறார்.

இந்த நிலையில் வெளிநாட்டுக்கு சென்ற பொழுது நடந்த ஒரு நிகழ்வு குறித்து ஜெயம் ரவி ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார். ஜெயம் ரவியும் ஹன்சிகாவும் சேர்ந்து நடித்த திரைப்படம் எங்கேயும் காதல். அந்த திரைப்படத்தில் ஒன்றாக நடித்துக் கொண்டிருந்தபோது பிரான்சில் அப்பொழுது ஆப்பிள் ஐபோன் வெளியாகி இருந்தது.

ஆடிப்போன ஜெயம் ரவி

அந்த போன் இன்னும் இந்தியாவில் வெளியே ஆகவில்லை என்று கூறலாம் இந்த நிலையில் அந்த போனை உடனே அங்கு சென்று வாங்கி இருக்கிறார் ஜெயம் ரவி. இந்தியாவிலேயே இந்த போனை வாங்கின முதல் நம்பர் நாம்தான் என்று மிகப் பெருமையுடன் இருந்துள்ளார் ஜெயம் ரவி.

அப்பொழுது அவர் ஒரு பொது இடத்தில் அமர்ந்திருந்தபோது யாரோ ஒருவர் வந்து அவரது ஃபோனை பிடுங்கிக் கொண்டு சென்று இருக்கிறார். அந்த சமயத்தில் என்னுடைய இதயமே நின்று விட்டது என்று கூறுகிறார் ஜெயம் ரவி.

அது யார் என்று பார்க்கும் பொழுது நடிகை ஹன்சிகா தான் அந்த வேலையை பார்த்திருக்கிறார். அந்த அளவிற்கு சின்ன பெண்ணாக இருந்ததால் மிகவும் சுட்டித்தனமாக இருந்தார் ஆனால் அவருடன் போகன் திரைப்படத்தில் நான் நடிக்கும் பொழுது அவ்வளவுக்கும் எதிர்மறையாக மிகவும் மெச்சூரிட்டியாக இருந்தார் ஹன்சிகா என்று கூறுகிறார் ஜெயம் ரவி.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version