நடிகர் ஜெயம் ரவியின் தந்தையான தயாரிப்பாளர் மோகன் ராஜா சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிக் கொண்டிருக்கும் பொழுது தன்னுடைய மகன் செஞ்ச தப்பு இதுதான் இதனால் மூன்று வருடம் வீணாக போய்விட்டது என வேதனையுடன் பேசி இருக்கிறார்,
நடிகர் ஜெயம் ரவியின் விவாகரத்து முடிவை அறிவித்தது தான் மிச்சம்.. அடுத்த நொடியில் இருந்து இணையத்தில் அதிகமாக விமர்சனங்களுக்கு உள்ளாகி வருகிறது ஜெயம் ரவி மற்றும் அவருடைய மனைவி ஆர்த்தியின் விவாகரத்து தகவல்கள்.
ஹீரோவாக பலரும் பார்த்து வியந்த நடிகர் ஜெயம் ரவி அவருடைய குடும்ப வாழ்க்கையில் தான் பட்ட கஷ்டங்கள் குறித்து வெளிப்படையாக பேசி வருகிறார். முன்னணி நடிகராக இருக்கும் இவருக்கு மனைவியால் இவ்வளவு கொடுமைகளா..? என்று வாயை பிளக்கிறார்கள் ரசிகர்கள்.
இந்நிலையில் இவருடைய தந்தை தயாரிப்பாளர் மோகன் அவர்கள் பற்றிய பேட்டியில் தன்னுடைய மனைவி தான் காதலித்து திருமணம் செய்த பெண் என்றாலும் கூட முதல் 10 ஆண்டுகள் தங்களுக்குள் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருந்தது.
ஆனால் மூன்று வருடங்கள் நான் நிம்மதி இல்லாமல் இருந்தேன். எனக்கு அந்த வீட்டில் சரியான மரியாதை கிடையாது. என்னுடைய பெயரில் சொந்தமாக ஒரு வங்கி கணக்கு கூட இல்லை.
செலவுக்கு பணம் வேண்டும் என்றால் நான் என் மனைவியிடம் தான் வாங்க வேண்டிய சூழல். என்னுடைய வரவு செலவு எல்லாவற்றையும் என்னுடைய மனைவியை பார்த்துக் கொண்டார். நான் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையால் வீட்டை விட்டு வெளியே போகும்போது என் கையில் ஒரு ரூபாய் கூட பணம் இல்லாமல் வெறும் காரை மட்டும் எடுத்துக் கொண்டு சென்றேன் என ஜெயம் ரவி பேசியிருப்பது மிகப்பெரிய அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க ஜெயம் ரவியின் மனைவி ஆர்த்தி இதனை மறுத்திருக்கிறார். தன்னுடைய விவாகரத்து குறித்து ஜெயம் ரவி தகவல்களில் உண்மை இல்லை என்று கூறி வருகிறார்.
இந்நிலையில் ஜெயம் ரவியின் தந்தை பேசியதாவது, எனக்கு உடம்பு சரியில்லாத நேரத்தில் தான் என் மகன் பிறந்தான்.
ஆரம்பத்தில் நன்றாக இருந்தேன் திடீரென எனக்கு கை கால் இழுத்து விட்டது. அப்போது என்னுடைய மகன் பிறந்த அடுத்த நாளிலிருந்து என்னுடைய உடலில் நல்ல மாற்றங்கள் தெரிந்தது.
பிறகு நாட்டு வைத்தியர் ஒருவரின் உதவியாளர் நான் பழைய நிலைமைக்கு திரும்பி குணமாகி இருந்தேன்.
ஜெயம் ரவி பிறந்த பிறகுதான் என்னுடைய வாழ்க்கையில் பல மாற்றங்கள் வந்தது என்னுடைய மகன் பள்ளியில் படிக்கும்போது அங்கு இருக்கும் நண்பர்கள் அவனை ஹீரோ போல நடத்த தொடங்கினார்கள்.
எப்போது எந்த பங்க்ஷன் என்றாலும் ஜெயம் ரவி இல்லாமல் அந்த பங்க்ஷன் நடக்காது என்ற அளவுக்கு ஜெயம் ரவி சுறுசுறுப்பாக இருந்தான். என்னுடைய மூத்த மகன் ராஜா ஆரம்பத்திலிருந்து பட தயாரிப்பு மற்றும் படம் இயக்குவதில் நல்ல ஆர்வத்துடன் இருந்தான்.
அதற்காக நான் அவரை தயார்படுத்திக் கொண்டிருந்தேன். ஆனால், நான் சொல்லியும் கேட்காமல் மூன்று வருடம் இயக்குனர் ஆவதற்கு படிக்கப் போகிறேன் என்று வாழ்க்கையை வேஸ்ட் பண்ணிக் கொண்டார்.
என்ன என்னிடம் இருந்தாலே ஒரு தயாரிப்பாளராக அவனை மாற்றி இருப்பேன் பலர் நம்மிடமிருந்து தயாரிப்பாளராக உருவாகி இருக்கிறார்கள். ஆனால் ராஜா நான் படித்து தான் இயக்குனராவேன் என்று சொல்லி படித்தும் முடித்தார் என்று தன்னுடைய இரண்டு மகன்கள் பற்றியும் அந்த பேட்டியில் பேசியிருக்கிறார்.