திருப்பி கொடுக்குற நேரம் வந்திடுச்சு… பிரிவுக்கு பிறகு ஜெயம் ரவியின் ப்ளான்.. ரகசியமாக நடக்கும் மீட்டிங்..!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் முக்கியமான ஒரு நடிகராக ஜெயம் ரவி இருந்து வந்தார். அப்பொழுது புதிதாக அறிமுகமான தனுஷ் சிம்பு மாதிரியான நடிகர்களுக்கு எல்லாம் போட்டி நடிகராக ஜெயம் ரவி இருந்து வந்தார்.

ஆனால் அதற்குப் பிறகு அவர் நடித்த திரைப்படங்கள் பெரிதாக வரவேற்பை பெறாமல் இருந்து வந்தது. ஆரம்பத்தில் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எல்லாமே பெரும்பாலும் நகைச்சுவையான திரைப்படங்களாக இருந்தன.

அவற்றில் ஆக்ஷன் காட்சிகள் இருந்தால் கூட ஜெயம் ரவி அதில் காமெடியான ஒரு ஜாலியான கதாபாத்திரமாகதான் இருப்பார். சம்திங் சம்திங் மாதிரியான படங்களில் எல்லாம் அந்த கதாபாத்திரத்தில் அவரை பார்க்க முடியும்.

திருப்பி கொடுக்குற நேரம் வந்திடுச்சு

அதற்குப் பிறகு வயது ஆக ஆக கொஞ்சம் சீரியஸ் ஆன கதாபாத்திரங்களில் நடிக்கலாம் என்று முடிவெடுத்தார் ஜெயம் ரவி. அப்படியாக அவர் நடித்த தனி ஒருவன் திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. ஆனால் அதற்குப் பிறகு அவர் அதே மாதிரி நிறைய திரைப்படங்களில் நடித்தார்.

அது பெரிதாக ஒர்க் அவுட் ஆகவில்லை. தொடர்ந்து தற்சமயம் தோல்வி படங்களாக கொடுத்து வந்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி. சமீபத்தில் அவர் நடித்த அகிலன், இறைவன், சைரன் மாதிரியான எந்த ஒரு திரைப்படமும் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை.

இதனை தொடர்ந்து இவர் குடும்ப வாழ்க்கையிலும் பிரச்சனைகள் துவங்கியிருக்கிறது. தற்சமயம் மனைவியை பிரிந்து இருந்து வருகிறார் ஜெயம் ரவி. ஜெயம் ரவி அவருடைய மனைவியுடன் இருந்த பொழுது அவர் நடிக்கும் கதைகளை எல்லாம் அவரது மாமியார்தான் தேர்ந்தெடுத்து வந்தார் என்று கூறப்படுகிறது.

ரகசியமாக நடக்கும் மீட்டிங்

எனவே தற்சமயம் அவர்களை பிரிந்த பிறகு நல்ல கதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஜெயம் ரவி முடிவு செய்து இருக்கிறார். இதற்காக தொடர்ந்து தமிழில் பெரிய இயக்குனர்களாக இருக்கும் கார்த்திக் சுப்புராஜ், வெற்றிமாறன் போன்ற முக்கிய இயக்குனர்களை சந்தித்து வருகிறாராம் ஜெயம் ரவி.

மேலும் ஏற்கனவே வெற்றிமாறனிடம் ஒரு கதையை கேட்டு அதற்கு ஓ.கேவும் செய்து விட்டதாக கூறப்படுகிறது. இப்படியாக தொடர்ந்து முக்கிய இயக்குனர்களிடம் கதை கேட்டு நல்ல கதைகளை மட்டும் தேர்ந்தெடுத்து நடித்து இருக்கிறார் ஜெயம் ரவி என்று கூறப்படுகிறது. அடிக்கடி இதற்காக ரகசியமாக மீட்டிங்கையும் வைக்கிறாராம் ஜெயம் ரவி.

எனவே இனி ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்கள் வெற்றியை கொடுக்க வாய்ப்புகள் இருக்கின்றன என்று கூறப்படுகிறது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam