“அந்தப் பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது” உண்மை ஒருநாள் வெளிவரும் – கொந்தளித்த ஜெயம் ரவி..

தற்போது இணையம் எங்கும் ஜெயம் ரவி ஆர்த்தி விவகாரம் படு வேகமாக பரவி வந்ததை அடுத்து ஜெயம் ரவிக்கும் கோவாவை சேர்ந்த பாடகி ஒருவருக்கும் தொடர்பு இருப்பதாக வைரலாக விஷயங்கள் வெளிவந்தது.

இதை அடுத்து இந்த விஷயத்துக்கு தக்க பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் ஜெயம் ரவி தற்போது கொந்தளித்து இருப்பதோடு மட்டுமல்லாமல் அது குறித்த உண்மை நிலையை தற்போது ஊடகங்களுக்கு தெரிவித்திருக்கிறார்.

நடிகர் ஜெயம் ரவி ஆர்த்தி ஜோடி..

தமிழ் திரையுலகில் ஜெயம் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான ஜெயம் ரவி முதல் படத்திலேயே நல்ல வெற்றியை தந்ததை அடுத்து அடுத்தடுத்து பட வாய்ப்புகள் அவருக்கு தேடி வந்தது.

இதனை அடுத்து தனி ஒருவன் படத்தில் இவர் தனது தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்தி ரசிகர்களின் மனதில் ஆக்சன் கிங்காக மாறினார்.

இந்நிலையில் இவரை காதலித்த ஆர்த்தியை பெற்றோர்களின் சம்மதத்தோடு திருமணம் செய்து கொண்டார். ஆர்த்தியின் அம்மா திரைப்பட தயாரிப்பாளராகவும் சின்னத்திரை சீரியல்களை தயாரிக்க கூடிய அனுபவம் வாய்ந்த நபராகவும் திகழ்கிறார்.

15 ஆண்டுகள் தன் மனைவியோடு குடும்பம் நடத்திய நடிகர் ஜெயம் ரவி அண்மையில் தன் மனைவியை விட்டு பிரிவதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு அதிர்ச்சியை தந்தார்.

இந்த அறிக்கையை பார்த்து இவரது மனைவி ஆர்த்தி தன்னிடம் கலந்து ஆலோசிக்காமல் ஜெயம் ரவி இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறியதோடு மட்டுமல்லாமல் தனக்கும் தன் மகனுக்கும் என்ன பதிலை இவர் சொல்லப்போகிறார் எங்களது எதிர்காலம் எப்படி இருக்கும் என்பது போல எமோஷனலாக பேசி இருந்தார்.

பெண்ணை தொடர்புபடுத்துவது தேவையில்லாதது..

இந்நிலையில் ஜெயம் ரவிக்கும் கோவாவை சேர்ந்த பாடகி கெனிஷா உடன் தொடர்பு இருப்பது போல இணையம் முழுவதும் செய்திகள் வேகமாக பரவியது.

மேலும் ஜெயம் ரவி கோவாவில் அவரோடு குடும்பம் நடத்துவதாக சில விஷயங்கள் வந்ததோடு ஆடி காரில் இருவரும் சேர்ந்து சுற்றியதாகவும் அது குறித்த ஆதாரங்களும் வெளிவந்து அதிர்ச்சியை தந்தது.

உண்மை ஒருநாள் வெளிவரும்  கொந்தளித்த ஜெயம் ரவி..

மேலும் எத்தனை வருட சினிமா வாழ்வில் எந்தவிதமான கிசுகிசுக்களும் ஏற்படாத நிலையில் தற்போது அந்த பெண்ணோடு தன்னை தொடர்பு படுத்தி பேசுவது தவறு என்று சுட்டிக்காட்டிய இவர் உண்மை ஒரு நாள் வெளி வரும் என்று சொல்லி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் அவர் ஒரு மிகச்சிறந்த சைக்காலஜிஸ்ட் என்பதால் எதிர்காலத்தில் இருவரும் இணைந்து மக்களுக்கு பணி செய்ய விரும்புவதாக சொல்லி இருக்கிறார்.

இந்நிலையில் தனது மனைவிக்கு இரண்டு முறை விவாகரத்து குறித்த மனுவினை கொடுத்துள்ளதாகவும் எனினும் இது குறித்து தனக்கு தெரியாது என்று கூறியிருப்பது வேடிக்கையாக உள்ளது என்ற கருத்தையும் முன் வைத்திருக்கிறார்.

தற்போது இந்த விஷயமானது இணையம் முழுவதும் தற்போது வைரலாக பரவி வருவதோடு ஜெயம் ரவியின் பேச்சினை கேட்டு அவர்கள் ரசிகர்கள் ஆச்சரியம் அடைந்து இருக்கிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version