இதை பண்ணாதது என் தப்புதான்.. வெட்கத்தை விட்டு வெற்றிமாறனிடம் கேட்டேன்.. ஜெயம் ரவி செய்த சம்பவம்.!

ஒரு காலகட்டத்தில் தமிழ் சினிமாவில் மிக முக்கியமான நடிகராக இருந்தவர் ஜெயம் ரவி. தொடர்ந்து ஜெயம் ரவி நடித்த திரைப்படங்கள் எல்லாம் வெற்றி கொடுத்து கொண்டிருந்த காலகட்டமாக இருந்தது.

ஆனால் இப்பொழுது அதற்கு மாறாக தொடர்ந்து ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்கள் எல்லாமே தோல்வி அடைந்து கொண்டு வருகின்றன. சமீபத்தில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தை தவிர அவர் நடித்த வேறு எந்த திரைப்படமுமே பெரிதாக வெற்றியே தரவில்லை.

இதை பண்ணாதது என் தப்புதான்

அகிலன், இறைவன், சைரன் போன்ற இப்பொழுது வெளியான பெரும்பான்மையான படங்கள் அவருக்கு தோல்வியைதான் கொடுத்து வந்தன. இதனால் சினிமாவில் வெகுவாக மார்க்கெட்டை இழந்து இருக்கிறார் ஜெயம் ரவி.

ஜெயம் ரவியின் சம்பளமும் கூட தற்சமயம் மிகவும் குறைந்திருப்பதாக பேச்சுக்கள் இருக்கின்றன. தற்சமயம் ஜெயம் ரவியின் திரைப்படங்களை விட விஜய் ஆண்டனியின் திரைப்படம் நல்ல வசூலை கொடுக்கிறது. ஆனால் ஜெயம் ரவியை விட விஜய் ஆண்டனி குறைவான சம்பளத்தை தான் பெற்று வருகிறார்.

வெற்றிமாறனிடம் கேட்டேன்

கதை தேர்ந்தெடுப்பதில் தொடர்ந்து ஜெயம் ரவி செய்யும் தவறுகள்தான் அவருக்கு படங்கள் தோல்வியடைய காரணம் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இதை ஒப்புக்கொண்டு ஜெயம் ரவியே ஒரு பேட்டியில் பேசியிருக்கிறார்.

அதில் ஜெயம் ரவி கூறும் பொழுது என்னிடம் கதை கூற வரும் இயக்குனர்கள் யாருமே பெரிய இயக்குனர்கள் கிடையாது. மணிரத்தினம் திரைப்படத்தை தவிர சமீபத்தில் நடித்த எந்த ஒரு திரைப்படமும் பெரிய இயக்குனர்கள் படத்திலும் நான் நடிக்கவில்லை.

ஜெயம் ரவி செய்த சம்பவம்

ஏனெனில் பெரிய இயக்குனர்கள் எல்லாம் என்னை வைத்து படம் எடுக்க மாட்டார்கள் என்று நான் நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்று இப்பொழுதுதான் தெரிந்தது.

சமீபத்தில் வெற்றிமாறனிடம் நானே சென்று எனக்கு ஏதாவது பட வாய்ப்பு தர முடியுமா? என்று கேட்டேன் உடனே வெற்றிமாறன் ஏற்கனவே கமிட் ஆகி இருக்கும் படங்களை முடித்துவிட்டு சொல்கிறேன். அடுத்து உங்களோடு தான் படம் பண்ணுவேன் என்று கூறினார். இப்படி பெரிய இயக்குனர்களிடம் நானே போய் கேட்டிருந்தால் எப்பொழுதோ நல்ல படங்களில் நடித்திருப்பேன் என்று வெளிப்படையாக கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam