என் பசங்களுக்கு இது தெரியும்.. கோர்த்து விட்ட ஜெயம் ரவி.. தர்மசங்கடத்தில் ரசிகர்கள்..!

முன்பெல்லாம் தமிழ் சினிமாவில் பெரிதாக சர்ச்சைக்குள் சிக்காத ஒரு நடிகராக இருந்தவர் நடிகர் ஜெயம் ரவி. தமிழ் சினிமாவில் தொடர்ந்து வெற்றி படங்களை ஒரு காலகட்டத்தில் ஜெயம் ரவி கொடுத்து வந்தார்.

ஆனால் இப்பொழுது அவர் நடிக்கும் திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக அவருக்கு வெற்றியை கொடுப்பதில்லை. கடந்த சில வருடங்களாக அவரது திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைக்காமல் இருந்து வருகிறது. இதனை அடுத்து ஜெயம் ரவி நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

என் பசங்களுக்கு இது தெரியும்

இதற்கு நடுவே ஜெயம் ரவியின் சொந்த வாழ்க்கையும் இப்பொழுது அதிகமாக விமர்சனத்திற்கு உண்டானது. ஜெயம் ரவி தனது மனைவி ஆர்த்தியை விவாகரத்து செய்து கொள்ள போவதாக அறிவித்ததில் இருந்து இந்த பிரச்சனை அதிகமாக இருந்து வருகிறது.

ஏனெனில் பொதுவாக பிரபலங்கள் விவாகரத்து செய்து கொள்ளும்பொழுது கணவன் மனைவி இருவரின் ஒப்புதலுடன்தான் விவாகரத்து குறித்த அறிக்கைகளை வெளியிடுவார்கள். ஆனால் ஜெயம் ரவியை பொறுத்தவரை அவரது மனைவி ஆர்த்தியின் ஒப்புதல் இல்லாமலே விவாகரத்து செய்தியை வெளியிட்டு விட்டார்.

கோர்த்து விட்ட ஜெயம் ரவி

இதனால் இதற்கு பதில் எழுதிய ஆர்த்தி தன்னிடம் இதைப் பற்றி ஜெயம் ரவி கூறவே இல்லை என்று குற்றம் சாட்டி இருந்தார். இது ஜெயம் ரவிக்கு அதிக பிரச்சனையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் சமூக வலைதளங்கள் முழுக்கவும் ஜெயம் ரவியின் விவாகரத்து குறித்த விஷயங்கள் தான் அதிகமாக பேசப்பட்டு வந்தது.

தற்சமயம் பிரதர் திரைப்படத்தின் ப்ரோமோஷனுக்காக ஜெயம் ரவி பேட்டி கொடுத்திருந்தார். அதில் அவரிடம் இந்த மாதிரி உங்களை குறித்த விவாகரத்து விஷயங்கள் அதிகமாக சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டிருக்கின்றன.

தர்மசங்கடத்தில் ரசிகர்கள்

இவற்றை பார்க்கும் உங்களது பிள்ளைகள் என்ன மனநிலையில் இருக்கிறார்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயம் ரவி என் பசங்க எல்லாத்தையும் புரிஞ்சுக்கிறாங்க. என்கிட்ட பேசும்போது கூட ரொம்ப ஆறுதலா பேசுறாங்க.

இதையெல்லாம் தாண்டி வந்துவிடலாம் கவலைப்படாத அப்பா என்று தான் கூறி வருகிறார்கள் இருந்தாலும் அவர்கள் இப்படியான கஷ்டங்களை அனுபவிப்பது எனக்கு மன வருத்தமாகதான் இருக்கிறது என்று கூறி இருக்கிறார் ஜெயம் ரவி.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam