கடந்த 20 வருடங்களுக்கு மேலாக தமிழ் சினிமாவில் முக்கிய நடிகராக இருந்தவர் நடிகர் ஜெயம் ரவி. ஒரு காலகட்டத்தில் பெரும்பாலும் ஜெயம் ரவி நடிக்கும் திரைப்படங்கள் வெற்றி பெற்று வந்தன.
ஆனால் நாட்கள் செல்ல செல்ல ஜெயம் ரவியின் திரைப்படங்களுக்கு வரவேற்புகள் என்பது குறைய தொடங்கியது. சமீப காலமாக ஜெயம் ரவி நடித்து வரும் திரைப்படங்கள் எல்லாமே அதிக வரவேற்பை பெறாமல் இருந்து வருகின்றன.
இந்த கண்ணோட்டத்தில்தான் பாக்குறாங்க
இதனால் அவருக்கான வரவேற்பு குறைய தொடங்கியுள்ளது. மேலும் ஜெயம் ரவி ரசிகர்களுக்கு இது கவலை அளிக்கும் விஷயமாக இருந்து வருகிறது. ஜெயம் ரவி கதை தேர்ந்தெடுப்பதில் செய்யும் தவறுகள் தான் இதற்கெல்லாம் முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.
ஆனால் ஒரு பக்கம் ஜெயம் ரவி நடித்த திரைப்படங்களின் கதைகளை அவரது மாமியார்தான் தேர்ந்தெடுத்தார் அதனால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயம் ரவியின் அடுத்த திரைப்படமான பிரதர் திரைப்படம் வருகிற தீபாவளிக்கு திரையரங்கிற்கு வர இருக்கிறது.
15 வருஷம் ஆகுது
பேட்டியில் இதுக்குறித்து பேசியிருந்தார் ஜெயம் ரவி. அதில் அவர் கூறும்பொழுது பொதுமக்களை பொறுத்தவரை நடிகரின் சுய வாழ்க்கையை அந்த அளவிற்கு அவர்கள் பார்க்க மாட்டார்கள். அவர்களைப் பொறுத்தவரை திரையில் நாம் எப்படி இருக்கிறோம் அந்த இரண்டு மணி நேரத்தில் அவர்களை மகிழ்வித்தோமா என்பதுதான் ரசிகர்களுக்கு பெரிய விஷயமாக இருக்கிறது.
அதை நாம் சரியாக செய்து தந்தால் ரசிகர்கள் நம்மை கொண்டாடுகிறார்கள் இந்த கண்ணோட்டத்தில் தான் என்னை ரசிகர்கள் பார்க்கிறார்கள். அதனால் இந்த திரைப்படத்தின் மூலமாக அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்வேன் என நினைக்கிறேன்.
வருத்தப்பட்ட ஜெயம் ரவி
பிரதர் திரைப்படம் தீபாவளிக்கு வெளியாவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இதற்கு முன்பு 15 வருடத்திற்கு முன்பு பேராண்மை திரைப்படம் தீபாவளிக்கு வெளியானது. அதற்கு பிறகு இப்பொழுது பிரதர் திரைப்படம் தான் வெளியாகிறது.
ஏனெனில் எப்போதும் இந்த மாதிரி பெரிய நாட்களில் பெரிய ஹீரோக்கள் படம் வெளியாவதால் சின்ன படங்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதில்லை இப்பொழுது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது என்று கூறியிருக்கிறார் ஜெயம் ரவி.