தூங்கிட்டு இருந்தப்ப என்ன போட்டு… பேருந்தில் ஜீவாவுக்கு நடந்த திகில் அனுபவம்.. ஓப்பன் டாக்!.

சூப்பர் குட் பிலிம்ஸ் என்கிற பெரும் தயாரிப்பு நிறுவனத்தின் நிறுவனரான ஆர்.பி சௌந்தரியின் மகன் என்றாலும் கூட அந்த அடையாளத்தை எல்லாம் விட்டு தன்னுடைய திறமையின் மூலம் மட்டுமே தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்தவர் நடிகர் ஜீவா

நடிகர் ஜீவா தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் வரை பெரிதாக யாருக்குமே அவர் ஆர்.பி சௌத்ரி என்பது தெரியாது. ஜீவா ஒரு தனிப்பட்ட நடிப்பை கொண்டிருக்கும் காரணத்தினால் அதற்கு தகுந்த கதைக்களங்களை தேர்ந்து எடுத்து வந்தார்.

ஆரம்பத்தில் அவர் பல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வந்தாலும் அவற்றில் எது அதிக வெற்றி பெறுகிறது என்பதை அறிந்து தற்சமயம் அந்த மாதிரியான கதைகளை மட்டுமே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இந்த நிலையில் அவர் பயணம் செய்தபோது நடந்த திகில் அனுபவம் ஒன்றை சமீபத்தில் பேட்டியில் கூறியிருக்கிறார்.

தூங்கிட்டு இருந்தப்ப என்ன போட்டு

தமிழ் சினிமா பிரபலங்கள் நிறைய பேருக்கு பேய் குறித்த அனுபவங்கள் நடந்திருக்கின்றன. இயக்குனர் சுந்தர் சி நடிகை அர்ச்சனா மாதிரியான சிலர் தங்களுக்கு நடந்த பேய் அனுபவங்களை கூறியிருக்கின்றனர். அப்படியாக ஜீவா ஜிப்சி என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்த பொழுது ஒரு ஊருக்கு பேருந்தில் செல்ல வேண்டியது இருந்தது.

அந்த பேருந்து டீலக்ஸ் பேருந்தாகும். எனவே அதில் படுத்து தூங்கிக்கொண்டே செல்ல முடியும். அப்படியாக அவர் சென்று கொண்டிருந்த பொழுது அவருக்கு பக்கத்தில் இருந்த ஒரு நபர் வெகுநேரமாக போன் பார்த்துக் கொண்டிருந்தாராம்.

திகில் அனுபவம்

பிறகு அவரும் படுத்து தூங்க ஆரம்பித்து விட்டார். திடீரென்று நடு இரவில் வலிப்பு வந்தது போல அந்த மனிதர் கத்தி இருக்கிறார். அவரால் எழுந்திருக்கவும் முடியவில்லை. நாங்கள் என்னவோ ஏதோ என்று பயந்துவிட்டோம் பிறகு அவருக்கு தண்ணீர் எல்லாம் கொடுத்துவிட்டு எல்லாம் தூங்க சென்றோம்.

பிறகு எனக்கும் அதே மாதிரி ஆனது. யாரோ ஒன்று ஏதோ ஒன்று என்னை போல என்னை போட்டு அமுக்குவது போல தோன்றியது என்று அந்த அனுபவத்தை கூறி இருக்கிறார் ஜீவா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam