கழண்டு விழுந்த அந்த பொருள்… நடிகையின் கை பிடித்து கட்டிவிட்ட ஜெயம் ரவி – வீடியோ!

தெனிந்த சினிமாவில் நட்சத்திர ஹீரோவாகவும் , இளம் ஹீரோவாகும், பெண்களின் ஃபேவரிரைட் ஹீரோவாகவும் பார்க்கப்பட்டு வந்தவர் தான் நடிகர் ஜெயம்ரவி.

திரைபின்பலம் கொண்ட குடும்பத்தில் பிறந்து வளர்ந்தாலும் பெரிதாக எந்த ஒரு பந்தாவும் காட்டாமல் மிகவும் எளிமையாக மக்களுடன் பழகக்கூடிய நடிகராக ஜெயம் ரவி மக்களின் மனதை வென்றார்.

நடிகர் ஜெயம் ரவி:

இவர் முதன் முதலில் தன்னுடைய அண்ணன் இயக்கத்தில் வெளிவந்த ஜெயம் திரைப்படத்தில் கதாநாயகனாக அறிமுகமானார்.

முதல் திரைப்படத்திலேயே தெலுங்கு மற்றும் தமிழ் சினிமா ரசிகர்களின் கவனம் ஈர்த்த நடிகராக பார்க்கப்பட்டார்.

அந்த திரைப்படத்தில் இவரது எதார்த்தமான நடிப்பும் மிகவும் க்யூட்டான நடிப்பு உள்ளிட்டவை ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது .

இதனால் இவர் தென்னிந்திய பிலிம் பேர் விருது மற்றும் 3 தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

ஜெயம் படத்தின் வெற்றியே அவரின் அடைமொழிப் பெயராக மாறியது. ஆம், ரவி என்று இருந்த அவரது பெயர் ஜெயம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஜெயம் ரவி என மாறியது .

வெற்றித்திரைப்படங்கள்:

தொடர்ந்து எம். குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் நடிகை நதியாவுடன் சேர்ந்து இவர் நடித்து பின்னி பெடல் எடுத்திருப்பார்.

இந்த திரைப்படத்தில் அம்மா மகன் பாசத்தை ஜெயம் ரவி நடிப்பில் வெளிகாட்டி ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்தார்.

இன்றும் பலரது பேவரைட் திரைப்படங்களில் ஒன்றாக எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படம் இடம் பிடித்திருக்கிறது.

தொடர்ந்து உனக்கும் எனக்கும், சந்தோஷப் பிரமணியும், தாம் தூம், பேராண்மை, எங்கேயும் காதல், பூலோகம், ரோமியோ ஜூலியட் , தனி ஒருவன் இப்படி பல வெற்றி திரைப்படங்களில் நடித்திருக்கிறார் ஜெயம்ரவி.

இதனிடையே நடிகர் ஜெயம் ரவி பிரபல தொலைக்காட்சி மற்றும் திரைப்பட தயாரிப்பாளரான சுஜாதாவின் மகளான ஆர்த்தியை காதலித்து கடந்த 2009 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் .

இவர்களுக்கு ஆரவ், அய்யன் என இரண்டு மகன்கள் இருக்கிறார்கள் . மிகச்சிறந்த காதல் ஜோடிகளாக பார்க்கப்பட்ட இவர்கள் திடீரென விவாகரத்தை அண்மையில் அறிவித்து ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி கொடுத்தார்கள் .

அடிமைபோல் நடத்திய மனைவி:

இதில் ஜெயம் ரவி…. மனைவி தன்னை அடிமை போல் நடத்தியதாகவும் மாமியார் பல விஷயத்தில் என்னை ஏமாற்றினார் என்றும் புகார் கூறியிருந்தார்.

மேலும் ஆர்த்தி ரவி இந்த விவாகரத்தில் எனக்கு விருப்பமே இல்லை. இது ஜெயம் ரவியின் தனிப்பட்ட முடிவு என்னிடம் கேட்காமலே ஆலோசிக்காமலே அவர் விவாகரத்து அறிவிப்பை வெளியிட்டு விட்டார். நான் அவருடன் சேர்ந்து வாழவே ஆசைப்படுகிறேன் என கூறியிருந்தார்.

இப்படியாக இவர்களின் விவாகரத்து விவகாரம் நாளுக்கு நாள் பெரும் சர்ச்சைகளையும் குழப்பத்தையும் கிளப்பி வருகிறது.

இப்படி ஒரு சமயத்தில் நடிகர் ஜெயம் ரவி குறித்த வீடியோ மற்றும் செய்திகள் எது வெளி வந்தாலும் அது வைரல் ஆகிவிடுகிறது .

நடிகையின் கை பிடித்து கட்டிவிட்ட ஜெயம் ரவி…

அப்படித்தான் தற்போது பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போது நடத்தப்பட்ட பிரமோஷன் விழா ஒன்றில் கலந்துக்கொண்ட ஜெயம் ரவி அந்த திரைப்படத்தில் பூங்குழலி என்ற கேரக்டரில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமி உடன் அருகில் இருக்கையில் அமர்ந்து கொண்டிருக்கிறர்.

அப்போது நடிகை ஐஸ்வர்யா லட்சுமியின் கையில் கட்டி இருந்த பிரேஸ்லெட் கழண்டு விழ அதை ஜெயம் ரவி அதை எடுத்து அவரது கையில் கட்டி விடுகிறார்.

ஐஸ்வர்யா லட்சுமி கையில் குடுங்க என கேட்டபோதும் அதை விடாப்படியாக ஜெயம் ரவி அவரது கையில் கட்டி விடும் இந்த க்யூட்டான வீடியோ இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்ஸ் பலரும் மனுஷன் எவ்வளவு நல்லவரா இருக்காரு பார்த்தீங்களா…? பெண்களை மதிக்க தெரிந்த ஒரே நடிகர் ஜெயம் ரவி தான் என கமெண்ட் செய்து வ்ருகிறார்கள்.

அத்துடன் அவருக்கு போய் வாழ்க்கை இப்படி அமைந்து விட்டதே? என தங்களது வருத்தத்தையும் ஆறுதல்களையும் தெரிவது வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version