மனசாட்சி இல்லாத மிருகங்கள்.. அந்த பாவப்பட்ட குழந்தை.. ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்களால் மனம் நொந்த வேதிகா.

சமீபத்தில் நடிகர் ஜூனியர் என்.டி.ஆர் நடிப்பில் வெளியான திரைப்படம் தேவரா. தேவரா திரைப்படத்தின் டிரைலர் வெளியானது முதலே மக்கள் மத்தியில் அந்த படம் குறித்த வரவேற்பு என்பது அதிகமாகவே இருந்து வந்தது.

ஏனெனில் ஜூனியர் என்.டி.ஆருக்கு தெலுங்கு சினிமா மட்டுமின்றி தென்னிந்தியாவிலேயே அதிக ரசிகர்கள் இருக்கின்றனர். மேலும் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் வெளியான பிறகு அவருக்கான ரசிக்கப்பட்டாளம் என்பது இன்னும் அதிகரித்தது.

மனசாட்சி இல்லாத மிருகங்கள்

தமிழ் சினிமாவிலும் ஒரு முக்கிய நடிகராக ஜூனியர் என்.டி.ஆர் மாறி இருக்கிறார். இந்த நிலையில் அடுத்து கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீலின் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் ஜூனியர் என்.டி.ஆர் இந்த நிலையில் தேவரா திரைப்படம் கடல் சார்ந்த ஒரு திரைப்படமாக உருவானது.

devara

#tax_name

இந்த திரைப்படத்திற்கு அனிருத் இசை அமைத்திருக்கிறார். கடல் கொள்ளையர்களை அடிப்படையாகக் கொண்ட இந்த கதைக்கு வரவேற்பு அதிகமாக இருந்ததை அடுத்து முதல் நாள் சிறப்பான வசூலை செய்து வந்தது தேவரா.

ஜுனியர் என்.டி.ஆர் ரசிகர்கள்

இந்த நிலையில் முதல் நாள் படத்தின் வெளியீட்டை கொண்டாடிய ரசிகர்கள் கொஞ்சம் அதிகப்படியாக சென்று சில விஷயங்களை செய்தனர். பொதுவாக பட வெளியீடு நடக்கும் பொழுது பாலாபிஷேகம் செய்து விழாக்களை கொண்டாடுவார்கள்.

ஆனால் தேவரா திரைப்படத்திற்கு ஒரு ஆட்டுக்கிடாயை வெட்டி அதன் ரத்தத்தை வைத்து பேனர்களில் அபிஷேகம் செய்திருக்கின்றனர். இது நடிகை வேதிகாவிற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் இது குறித்த பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார் வேதிகா.

vedhika

#tax_name

மனம் நொந்த வேதிகா

அதில் அவர் கூறும் பொழுது இது மிகவும் கொடுமையான ஒரு செயல். அந்த பாவப்பட்ட குழந்தைக்காக என்னுடைய இதயம் ரத்தம் சிந்திக்கிறது. இது போன்ற சித்திரவதை கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. குறளற்ற அப்பாவி ஜீவனை இப்படியா செய்வது.

அந்த அப்பாவி ஜீவராசிக்காக நான் பிரார்த்திக்கிறேன் அது இறைவனிடம் தஞ்சம் அடையட்டும். ரசிகன் கொண்டாட்டம் என்பதின் பெயரில் இனி மேலும் இது போன்ற எந்த ஜீவன்களையும் கொல்ல வேண்டாம் தயவு செய்து இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் என்று தெரிவித்திருக்கிறார் வேதிகா.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam