அவ என் மூச்சையே நிறுத்திட்டா.. அந்த 10 நிமிட காட்சி.. கதறும் ஜோதிகா..!

கடைசி பத்து நிமிடங்களில் என்னுடைய இதயத்தையும் என்னுடைய மூச்சையும் நிறுத்திட்டீங்க.. உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகியுள்ள அமரன் திரைப்படம் குறித்து ரசிகர்கள் தாண்டி திரை பிரபலங்களும் தங்களுடைய வரவேற்பை பதிவு செய்து வருகிறார்கள்.

இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவான இந்த திரைப்படம் குறித்து நடிகை ஜோதிகா வெளியிட்டுள்ள பதிவில் ராஜ்குமார் பெரியசாமி நீங்கள் ஒரு வைரத்தை உருவாக்கி இருக்கிறீர்கள்.

ஜெய் பீம் படத்திற்கு பிறகு ஒரு கிளாசிக் தமிழ் படமாக இந்த படம் வெளியாகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் இப்படி ஒரு கதாபாத்திரத்தை ஏற்று இவ்வளவு அர்ப்பணிப்புடன் இவ்வளவு மெனக்கெட்டு நடிப்பார் என்று நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.

சாய்பல்லவி என்ன நடிகை நீங்கள் கடைசி பத்து நிமிடங்களில் என்னுடைய இதயத்தையும் என்னுடைய மூச்சையும் நிறுத்திட்டீங்க.. உங்களை நினைத்தால் எனக்கு பெருமையாக இருக்கிறது.

திருமதி இந்து ரெபெக்கா வர்கீஸ் அவர்களே உங்களுடைய தியாகத்திற்கும் உங்களுடைய நேர்மைக்கும் நாங்கள் தலைவணங்குகிறோம்.

உங்களுடைய கணவரின் தியாகத்திற்கு அஞ்சலி செலுத்துகிறோம். ஒவ்வொரு குடிமகனும் இந்த படத்தை பார்த்து மேஜர் முகர்ந்து வரதராஜனை கொண்டாடுகிறார்கள்.

நம்முடைய குழந்தைகளையும் இப்படி மரியாதைக்குரியவர்களாக வளர்க்க வேண்டும் என்பதை விரும்புகிறோம்.

இந்த வைரத்தை மிஸ் செய்து விடாதீர்கள் ரசிகர்களே என்று தன்னுடைய பதிவை வெளியிட்டு இருக்கிறார்.

தன்னுடைய கணவரின் படம் குறித்து கூட இதுவரை நடிகை ஜோதிகா இந்த அளவுக்கு பேசியது கிடையாது. ஆனால், முதன்முறையாக இப்படி ஒரு தமிழ் படத்திற்கு தன்னுடைய பாராட்டுகளை பதிவு செய்திருக்கும் நடிகை ஜோதிகாவுக்கு லைக்குகள் குவிந்து வருகிறது.

Summary in English : Jyothika, the acclaimed Indian actress known for her impactful performances, recently shared her insights on the much-anticipated film “Amaran.” In her commentary, she emphasized the significance of the movie’s narrative and its reflection of contemporary societal issues.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam