“ச்சீ.. கருமம்.. உவ்வேக்..” மலை உச்சியில் தோழி செய்த விஷயம்.. படுக்கையில் ஜோதிகா.. வைரல் வீடியோ..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வரும் நடிகை ஜோதிகா. அவ்வப்போது வெளிநாடுகளுக்கு சுற்றுலா செல்வது ட்ரெக்கிங் செல்வது என தன்னுடைய விடுமுறை நாட்களை கழிப்பதை வாடிக்கையா கொண்டு இருக்கிறார்.

அந்த வகையில் தற்போது நேபால் பகுதியைச் சேர்ந்த கோகர்செப் என்ற மலைப்பகுதிக்கு சுற்றுலா சென்று இருக்கிறார். தன்னுடைய தோழி மற்றும் மகளுடன் சுற்றுலா சென்று இருக்கும் நடிகை ஜோதிகா அங்கிருந்து எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையத்தில் பதிவிட்டு தன்னுடைய மகிழ்ச்சியை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோவை பகிர்ந்து அவர் கூறியிருப்பதாவது, வெயிலான நாட்கள் முதல் குளிர் உரையும் இரவுகள் வரை.. செங்குத்தான மேடுகள் முதல் வழுக்கும் நீர்வீழ்ச்சி வரை.. பலவீனம் மருந்துகள் முதல் உடல் வலிமை வரை..

மலச்சிக்கல் முதல் வயிற்றுப்போக்கு வரை.. சூடான தண்ணீர் குடுவையிலிருந்து குளிர்ந்த நீர் வரை.. சிரிப்பில் இருந்து குழப்பங்கள் வரை.. முகம் கறுக்கும் வெயில் முதல் வெள்ளை பனிப்புயல் வரை.. இஞ்சி டீ முதல் பூண்டு சூப்புகள் வரை…

டாய்லெட் பேப்பர் முதல் நட்ஸ்கள் வரை.. நாங்கள் பல விஷயங்களை அனுபவித்தோம்.. நாங்கள் உள்வாங்கிய ஓவியங்கள் முதல் உண்மையான சாயல் வரை.. பார்த்து மகிழ்ந்தோம்.

மிக அழகிய சூரிய உதயங்கள் முதல்.. மாயாஜாலமான சூரிய அஸ்தமனம் வரை… அனைத்தும் என் இதயத்தில் எப்போதும் நீங்கா நினைவாக இருக்கும்.. என்னுடைய சிப்பாய் நண்பரான இவருடன் உண்மையிலேயே ஒரு இமாலய பணியை முறியடித்துள்ளோம்..

நம் வாழ்க்கையில் வாழ்வதை பெருமையாக கொள்வோம்.. ஆனால் ஒன்று தோன்றுகிறது.. இந்த ஏற்பாட்டை செய்த இந்த சிவம் குரூப் ஹாலிடே இருக்கும் ராம் சந்திர ஸ்வேதா அவர்களுக்கும் எங்களை விருந்தோம்பி வழிகாட்டிய திரு பகதூர் பூஜவுக்கும் நன்றி.

இளம் அயன் மேன் ஆன எங்களுடைய சாமான்களை மேலே கொண்டு வந்த திரு மிஷனராய் அவர்களுக்கும் மலையில் நான் சந்தித்த ஒரு நேபாளி அவருக்கும்.. நிஜ வாழ்க்கை ஹீரோக்களான இவர்கள் அனைவருக்கும் என்னுடைய நன்றி என அந்த வீடியோவில் கேப்ஷன் கொடுத்திருக்கிறார்.

மேலும் தன்னுடைய தோழி ஒருவர் ப்ரட் ஆம்லெட்டில் தக்காளி சாஸை ஊற்றி அதன் மீது பெப்பர் பொடியை தூவி ஒரு பிடி பிடிக்கிறார்.. இதனை பார்த்த ஜோதிகா முகம் சுளித்தபடி ச்சீ கருமம் என்பது போல முகபாவனை வெளியிடுகிறார்.

இந்த காட்சியும் அந்த வீடியோவில் தெரிகிறது. மேலும், ஆளை விடுங்கடா சாமி என்று மிகவும் கனமான ஒரு கம்பளியை போர்த்திக் கொண்டு படுக்கையில் படுத்து உறங்கும் ஜோதிகாவின் புகைப்படங்களும் இதில் இடம் பெற்று இருக்கின்றன.

இந்த வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version