“நடிகை லட்சுமிக்கு என் மேல கோபம் போகல..” கே.எஸ்.ரவிகுமார் பேச்சு.. உறைந்து போன ரசிகர்கள்..!

சமீபத்தில் அவள் விகடன் விருதுகள் நிகழ்ச்சியை சிறப்பாக நடந்து முடிந்தது. இந்த விருது நிகழ்ச்சியில் கலை நாயகி என்ற விருதினை நடிகை லட்சுமி அவர்களுக்கு வழங்கி கௌரவித்தது அவள் விகடன்.

இந்த விருது மேடையில் நடிகை லட்சுமி அவர்களுக்கு இயக்குனர் கே எஸ் ரவிக்குமார், நடிகை தேவயானி, நடிகை வெண்ணிற ஆடை நிர்மலா, நடிகை திவ்யா துரைசாமி உள்ளிட்டோர் சேர்ந்து இந்த விருதினை நடிகை லட்சுமிக்கு வழங்கினார்கள்.

தொடர்ந்து பேசிய கே.எஸ்.ரவிக்குமார் நடிகை லட்சுமி குறித்து பேச தொடங்கினார். அவர் கூறியதாவது, நடிகை லட்சுமிக்கு என் மேல் இருந்த கோபம் போகல போல இருக்கு என்று கூறினார்.

இவருடைய இந்த பேச்சைக் கேட்டு ரசிகர்கள் உறைந்து போனார்கள். நடிகை லட்சுமிக்கு கே.எஸ்.ரவிக்குமார் மீது என்ன கோபம்..? என்று ஆர்வத்துடன் அவருடைய பேச்சைக் கேட்க தொடங்கினார்கள்.

தொடர்ந்து, பேசிய கே.எஸ்.ரவிக்குமார் நான் அவரைப் பற்றிய ஒரு விஷயத்தை அவரிடம் முதலில் சொல்லாமல் ஊடகத்தில் சொல்லிவிட்டேன். இதுதான் அவருடைய கோபத்திற்கு காரணம்.

என்ன விஷயம் என்றால் நாட்டாமை திரைப்படத்தில் குஷ்பூ நடித்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது நடிகை லட்சுமி தான். அவருடைய கால் சீட் வாங்குவதற்காக சென்று கொண்டு இருந்தேன்.

அப்போது வழியில் ஒரு ஸ்டூடியோவுக்கு சென்றேன். அங்கே நடிகை குஷ்பூ படப்பிடிப்பில் இருந்தார். அப்போது என்னை பார்த்த அவர் என்னிடம் பேசிக் கொண்டிருந்தார்.

அப்போது என்ன விஷயம்.. அடுத்து என்ன படம் பண்ண போறீங்க.. என்றெல்லாம் கேட்டார். நான் நாட்டாமை என்ற படம் செய்யப் போகிறேன். அதில் நடிகை லட்சுமி நடிக்க வைக்க அவரிடம் கால் சீட் வாங்க தான் சென்று கொண்டிருக்கிறேன் என்று கூறினேன்.

அப்படியா நடிகை லட்சுமி நடிக்க கூடிய அளவுக்கு பெரிய கேரக்டரா அது..? என்று என்னிடம் கேட்டார். ஆம், என்று கூறினேன். அப்படி என்றால் அதனை ஏன் நான் செய்யக்கூடாது..? என்று என்னிடம் குஷ்பூ கேட்டார்.

எனக்கு என்ன செய்வது என்று புரியவில்லை.. தயாரிப்பாளரிடம் கலந்தாலோசித்தேன்.. அவரும் குஷ்பூ சரியா இருக்கும்.. மார்க்கெட்ல இருக்க பொண்ணுயா.. என்று கூறினார். குஷ்பு விடவும் கூறினேன்.. இதில் வயதான பெண் கதாபாத்திரத்திலும் நடிக்க வேண்டும்.

இளமையான கதாபாத்திரமும் இருக்கும்.. நடிகை லட்சுமிக்கு என்றால் இது சரியாக பொருத்தமாக இருக்கும். உங்களுக்கு பொருந்துமா..? என்று எனக்கு தெரியவில்லை என சந்தேகம் எழுப்பினேன்.

அப்போது நடிகை குஷ்பூ.. இல்லை நான் வெள்ளை முடியோடு நான் வயதான தோற்றத்தில் சில படங்களில் நடித்திருக்கிறேன். எனக்கு பிரச்சனை இல்லை. கண்டிப்பாக நான் நடிப்பேன் என கூறினார்.

அதன் பிறகு அவரையே நாட்டாமை படத்தில் ஒப்பந்தம் செய்தோம். இதைப்பற்றி லட்சுமியிடம் இதுவரை நான் சொன்னது கிடையாது. சமீபத்தில் ஒரு பேட்டியில் இதனை நான் உளறி விட்டேன்.

இதைக் கேட்ட பிறகு லட்சுமி என் மீது கோபத்தில் இருக்கிறார் என்று பேசினார் கே.எஸ்.ரவிக்குமார். இதனை கேட்டு ரசிகர்கள் ஒரு நிமிடம் அதிர்ச்சியில் உறைந்து தான் போனார்கள்.

Summary in English : Did you know that director K.S. Ravikumar originally had actor Lakshmi in mind for the iconic role in the blockbuster hit movie “Naattamai”? It’s pretty interesting to think about how different things could have been! Lakshmi was the first choice, but as fate would have it, actress Kushbu eventually stepped into the role and totally owned it.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam