தல அஜித் ஆட்டம் ஆரம்பம்டோ.. குட் பேட் அக்லி வேற லெவல் சம்பவம்.. கல்யாண் மாஸ்டர் பேச்சு..

தமிழ் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழும் தல அஜித் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. சினிமா துறையில் எந்த ஒரு பின்புலமும் இல்லாமல் தன் சொந்த உழைப்பால் இன்று முன்னணி ஹீரோ வரிசையில் ஒருவராக மாறி இருக்கிறார்.

அந்த வகையில் இவர் தற்போது குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் ஒரு மாஸ் ஹிட் படமாக வெளி வரும் என ரசிகர்கள் அனைவரும் காத்திருக்கிறார்கள். இது பற்றி கல்யாண் மாஸ்டர் கூறிய விஷயத்தை இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

தல அஜித் ஆட்டம் ஆரம்பம்டோ..

தல அஜித் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் போஸ்டர்கள் தற்போது வெளிவந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்ததோடு பொங்கலுக்கு இந்த படம் வெளிவரும் என தெரியவந்துள்ளது.

மேலும் இந்த படத்தில் நடன இயக்குனராக கல்யாண் மாஸ்டர் அஜித்தோடு இணைந்து பணியாற்றியதை அடுத்து இருவரும் இருக்கும் புகைப்படம் மற்றும் ஒரு மாஸ் கமர்சியல் பாடல் படமாக்கப்பட்டுள்ளது.

தல அஜித்தின் குட் பேட் அட்லீ போஸ்டர்கள் வெளிவர ஆரம்பித்ததை அடுத்து இதில் இருக்கும் அஜித்தை பார்த்து இது நம்ம தல அஜித்தா என்று புல்லரித்துப் போய் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் இந்த படம் வேறு லெவலில் இருக்கும் என்று சொல்லி இருக்கிறார்கள்.

டான்ஸ் மாஸ்டர் கல்யாணி பொருத்தவரை துணிவு வேதாளம் வில்லன் போன்ற படங்களில் அஜித்தோடு இணைந்து பணியாற்றி இருக்கிறார் அதுபோல தற்போது விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி படங்களிலும் இவர்தான் டான்ஸ் மாஸ்டர்.

குட் பேட் அக்லி வேற லெவல் சம்பவம்..

இவர் அண்மை பேட்டியில் பேசும்போது அஜித்தோடு தனக்கு மிகச்சிறந்த நட்பு உள்ளது என்று சொன்னதோடு வேலையை சிறப்பாக பார்த்தால் தான் அந்த நட்பும் நீடிக்கும் என்ற விஷயத்தை பக்காவாக சொல்லிவிட்டார்.

மேலும் அஜித்தோடு இணைந்து பணியாற்றக் கூடிய படங்களில் அஜித்தின் நடன அசைவுகள் நேர்த்தியான முறையில் இருப்பதாக தொகுப்பாளர் கூறியதை அடுத்து அது தன் தொழில் ரகசியம் என்று சிரித்தபடியே பதில் அளித்தது அனைவரையும் கவர்ந்துள்ளது.

அஜித் மட்டுமல்ல சில நடிகர்களுக்கும் தான் நடன அதிபர்களை கற்றுக் கொடுத்திருந்தாலும் அஜித் படம் என்பது தனி கவனம் ஈர்க்கும் படி உள்ளது. இதை அடுத்து என் பெயரும் வெளியே மிகச் சிறப்பாக தெரிகிறது என கூறினார்.

கல்யாண் மாஸ்டர் பேச்சு..

ஒவ்வொரு நடிகரின் பாடி லாங்குவேஜ் தக்கப்படி நடன அமைப்புகளை அமைத்துக் கொடுப்பதின் மூலம் அந்த பாடலில் நடனம் சிறப்பாக அமைந்து விடும். மேலும் அவரவர் ஸ்டைலில் அதை ஆட சொல்லும் போது இன்னும் அது மெருகேறும்.

அந்த வகையில் தல அஜித் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யக் கூடிய வகையில் குட் பேட் அக்லி திரைப்படம் அமைவதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் வர இருக்கும் பாடல்கள் அனைத்தும் வேறு லெவலில் ரசிகர்களுக்கு எனர்ஜி அளிக்க கூடிய வகையில் நடனம் இருக்கும் என்று சொல்லலாம்.

எனவே கட்டாயம் அஜித் தற்போது நடித்து வரும் திரைப்படம் ரசிகர்களுக்கு விருந்தாக அமைவதோடு மட்டுமல்லாமல் ஒரு மாஸ் படமாக வசூலை வாரி தரும் என்பதில் எனக்கு எந்த விதமான சந்தேகமும் இல்லை என கல்யாண் மாஸ்டர் கூறியிருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version