வாயை பொளக்க வச்சிட்டாங்க.. இதுக்கா இவ்ளோ பில்டப்பு.. இனிமேலாவது இதை பண்ணாதிங்க..

நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் முன்னணி நடிகர்கள் பாபி தியோல் மற்றும் நடிகை தீஷா பதானி ஆகியோர் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்த கங்குவா திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறது.

படத்தில் நடிகர் சூர்யாவின் உழைப்பை தவிர வேறு எதுவும் இல்லை. படத்தின் கதை என்ன..? என்றே இங்கு பலருக்கும் குழப்பமாக இருக்கிறது.

படத்தில் எந்த இடத்திலும் ஒரு எமோஷனல் கனெக்ட் இல்லை. கடைசி 15 நிமிடங்கள் மட்டும்தான் படத்தை காப்பாற்றி இருக்கிறதே தவிர முதல் பாதி முடிந்து இரண்டாம் பாதியில் கிட்டத்தட்ட அரை மணி நேரம் கடந்து தான் படமே ஆரம்பிக்கிறது.

இவ்வளவு பெரிய பொருட்செலவு.. பிரம்மாண்டமான காட்சிகள். கிராபிக்ஸ் என அனைத்துமே பாராட்டும் விதமாக இருக்கிறது. அதே சமயம் இவை அனைத்திற்கும் வலு சேர்க்கும் விதமாக  ஒரு கதையோ அல்லது திரைக்கதையோ எதுவுமே இல்லாதது கங்குவா படத்தின் மிகப்பெரிய தோல்வி.

இவ்வளவு பெரிய பொருட்செலவில் பல்லாயிரக்கணக்கான பேர் சேர்ந்து பணியாற்றி தயாராகியிருக்கக்கூடிய ஒரு படத்தில் திரைக்கதையை முடிவு செய்யாமல் திரைக்கதை இது செட் ஆகுமா..? என தெரியாமல் அதனை படமாக மாற்றுவது என்பது எந்த அளவுக்கு சரியான விஷயம் என தெரியவில்லை.

கங்குவா அந்த தவறை செய்திருக்கிறது. படத்தின் திரைக்கதைக்காக ஆறு மாதமோ ஒரு வருடமோ மெனக்கெட்டு திரைக்கதையை அமைக்க முடியாதவர்கள் எதற்காக கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி ஒரு படத்தை எடுக்க வேண்டும்..? ரசிகர்கள் மீது ஒரு எதிர்பார்ப்பை ஏற்ற வேண்டும்..? எதற்கு அந்த படத்தை தோல்வி படமாக்க வேண்டும்..?

இந்த வருடம் இல்லை என்றால் அடுத்த வருடம் திரைப்படம் வெளியாகி இருக்க போகிறது. கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் நடைபெற்று இருக்கிறது. கோடிக்கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டிருக்கிறது.

ஆனால், ஒரு திரைக்கதையை துணை இயக்குனர்களுடன் அமர்ந்து கொண்டு ஆறு மாதம் அல்லது ஒரு வருடம் ஆலோசித்து கதையை செதுக்குவதில் இயக்குனர்களுக்கு என்ன தடை இருக்கிறது..? அவசர அவசரமாக வருடத்திற்கு ஒரு படம் எடுத்து எதை சாதிக்க போகிறார்கள்..? இப்படி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் ஏமாற்றிய பெருமை கங்குவா படத்திற்கு கிடைத்துள்ளது.

தமிழ் சினிமாவில் இதுவரை 1000 கோடி வசூலித்த படம் வெளியாகவில்லை என்ற ஒரு குறை இருக்கிறது. அதனை கங்குவா திரைப்படம் தீர்த்து வைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள்.

ஆனால், அது முடியாமல் போய்விட்டது. முன்னணி நடிகர்களின் படங்கள் என வரும்போது அந்த படங்களுக்கு மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கப்படும். ஆனால், அந்த பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 70 சதவீத பங்கு ஹீரோ சம்பளமாகவே சென்று விடுகிறது.

மீதி இருக்கும் பணத்தில் தான் படம் எடுக்கிறார்கள். அப்படி இருக்கும் பொழுது திரைக்கதையை வலுவாக அமைத்தால்தான் அந்த படம் ரசிகர்கள் மத்தியில் எடுபடும். ஐந்து கோடி, பத்து கோடி என்ற பட்ஜெட்டில் படம் எடுக்கும் புது முகம் இயக்குனர்கள் அவ்வளவு சுவாரஸியமாக.. கதையோடு இணக்கமாக பயணிக்கும் உணர்வை கொடுக்கும்.. படங்களை கொடுக்கிறார்கள்.

ஆனால், இயக்குனர் சிவா மிகப்பெரிய ஒரு பட்டாளத்தை வைத்துக்கொண்டு இப்படி ஒரு மோசமான படைப்பை கொடுத்திருப்பதை ஜீரணிக்க முடியவில்லை. அதிலும் குறிப்பாக நடிகர் சூர்யா எப்போதும் இல்லாத அளவுக்கு இந்த படத்திற்கு ஹைப் கொடுத்து பேசியிருந்தார்.

இந்த படத்தை பார்ப்பவர்கள் வாயை பிளந்து கொண்டு பார்ப்பார்கள் என பேசியிருந்தார். நிஜமாகவே வாயை பிளக்க வைத்து விட்டார்கள். இவ்வளவு பெரிய நட்சத்திர பட்டாளத்தை கொண்டு இப்படி ஒரு மோசமான படைப்பை கொடுக்க முடியுமா..? என்று வாயை பிளக்க வைத்து விட்டார்கள் என கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறார்கள் ரசிகர்கள்.

கங்குவா திரைப்படம் குறித்து உங்களுடைய பார்வையை கமெண்ட் செக்சன்ல பதிவு செய்யலாம். இனிமேலாவது படம் வெளியாகும் முன்பு படத்திற்கு ஓவர் ஹைப் ஏற்றாதீர்கள் எனவும் என்ன இருக்கிறதோ அதை மட்டும் சொல்லுங்கள் அல்லது வெறுமனே படத்தை மட்டும் வெளியிடுங்கள் ..என்ன ஆகிவிடப்போகிறது..? படம் நல்லா இருந்தால் யார் தடுத்தாலும் அதன் வெற்றியை தடுக்க முடியாது என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட இருக்கின்றனர்.

Summary in English : When it comes to Surya’s latest flick, “Kanguva,” fans have taken to social media with a mix of humor and disbelief. The roasts are flying fast and furious, showcasing the internet’s knack for turning critiques into comedic gold. From hilarious memes to witty one-liners, viewers are not holding back in expressing their thoughts on the film’s plot twists and character choices.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Leave comment

Tamizhakam