ஹீரோயினை வச்சி அந்த மாதிரி காட்சி… அனுமதிக்கவே முடியாது… கங்குவா படத்தால் கடுப்பான சென்சார் குழு.!

தமிழில் வெகு காலங்களாகவே பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வரும் திரைப்படமாக கங்குவா திரைப்படம் இருந்து வருகிறது. தமிழ் சினிமாவில் தொடர்ந்து வித்தியாசமான கதை களங்களை தேர்ந்தெடுத்து நடித்துவரும் நடிகர்களில் முக்கியமானவராக சூர்யா இருந்து வருகிறார்.

இதனாலேயே சூர்யா நடிக்கும் திரைப்படங்களுக்கென்று தனி வரவேற்பு மக்கள் மத்தியில் இருந்து வருகிறது. பெரும்பாலும் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதையும் தாண்டி மக்களுக்கு வித்தியாசமான திரைப்படங்களை கொடுக்க வேண்டும் என்பதில் சூர்யா கவனம் செலுத்தி வருகிறார்.

ஹீரோயினை வச்சி அந்த மாதிரி காட்சி

இந்த நிலையில் சூர்யா நடித்து வரும் கங்குவா திரைப்படம் குறித்து மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் எடுக்கப்படாத ஒரு திரைப்படமாக கங்குவா இருக்கும் என்பதுதான் பலரது எதிர்பார்ப்புக்கு காரணமாக இருக்கிறது.

மேலும் சிறுத்தை சிவா இது குறித்து பேட்டியில் பேசும்போது கூட சூர்யா நான் கதையை சொன்ன உடனேயே பிரமித்து போய்விட்டார். பிறகு நான் ஒவ்வொரு காட்சியையும் படமாக்கிய பொழுது அதன் அவுட்புட்டை பார்த்துவிட்டு என்னை மிகவும் பாராட்டினார்.

அனுமதிக்கவே முடியாது

இந்த படம் ரிலீஸ் ஆக என்னைவிட அதிகமாக சூர்யா காத்திருக்கிறார் என்று கூறியிருந்தார். இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக ஹிந்தியில் பிரபல நடிகையான திசா பதாணி நடித்திருக்கிறார். இதன் மூலமாக இந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக மாறி இருக்கிறார்.

இந்த நிலையில் பாலிவுட் நடிகை என்பதால் கொஞ்சம் அதிகமாகவே இந்த திரைப்படத்தில் கவர்ச்சி காட்டி இவர் நடித்திருப்பதாக கூறப்படுகிறது இந்நிலையில் இந்த படத்தில் ஒரு பாடலில் அவர் மிகவும் அதிக கவர்ச்சியாக நடித்திருப்பதாக கூறப்படுகிறது.

கடுப்பான சென்சார் குழு

கங்குவா திரைப்படம் சென்சாருக்கு சென்ற நிலையில் அங்கே இந்த பாடலைப் பார்த்த சென்சார் குழு கண்டிப்பாக இந்த பாடலை நீக்க வேண்டும் அல்லது இந்த பாடலில் இருந்து காட்சிகளை நீக்க வேண்டும் என்று கூறியிருக்கிறது. இது ரசிகர்களுக்கு இன்னும் எதிர்பார்ப்பை அதிகரித்து இருக்கிறது.

அப்படி என்ன மாதிரி காட்சிகள் அந்த பாடலில் இடம் பெற்று இருக்கின்றன. என்பது அவர்கள் கேள்வியாக இருந்து வருகிறது எப்படியும் இந்த காட்சிகளை நீக்குவதற்கு பட குழு ஒப்புக்கொள்ளும் என்பது பலரும் அறிந்த விஷயமே ஆனால் அந்த பாடலை யூடியூபில் முழுமையாக விட்டால் பரவாயில்லை என்று இது குறித்து இப்பொழுதே கருத்து தெரிவிக்க துவங்கி விட்டனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version