நடிகர் கார்த்தி ஒரு தெலுங்கு திரைப்பட விருது விழாவில் கலந்து கொண்டார். அந்த விருது விழாவில் உங்களுக்கு தமிழ் ரசிகர்களை பிடிக்குமா..? அல்லது தெலுங்கு ரசிகர்களை பிடிக்குமா..? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு சிறிதும் யோசிக்காத நடிகர் கார்த்தி கண்டிப்பாக தெலுங்கு ரசிகர்களைத்தான் எனக்கு பிடிக்கும் எனக் கூறியிருந்தார்.
இது மிகப் பெரிய பேசுபொருளானது. தமிழ் சினிமா நடிகர் ஒருவர் தமிழ் சினிமா ரசிகர்களை பிடிக்காது, தெலுங்கு சினிமா ரசிகர்கள் தான் எனக்கு அதிகம் பிடிக்கும் என பேசுகிறாரே.. ஒரு வேளை இடத்திற்கு ஏற்றார் போல் பேசுகிறாரா…? அல்லது நிஜமாகவே தமிழ் சினிமா ரசிகர்களை அவருக்கு பிடிக்காதா..? என பல்வேறு விவாதங்கள் எழுந்தன.
தற்பொழுது வரை நடிகர் கார்த்தியின் சினிமா வரலாற்றில் இது பெரும் கரும்புள்ளியாக பார்க்கப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க சமீபத்திய விழாவில் கலந்து கொண்ட நடிகர் கார்த்தியிடம் தெலுங்கு ரசிகர்களைத்தான் உங்களுக்கு பிடிக்கும் என கூறியதன் காரணம் என்ன என்று கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு முதன்முறையாக பதில் கொடுத்து இருக்கிறார் நடிகர் கார்த்தி. அவர் கூறியதாவது, ஒரு குழந்தை நன்றாக ஓவியம் வரைகிறது. அந்த ஓவியத்தை பார்த்து பார்த்து வரைந்து.. அழகுப்படுத்தி.. அதனை தங்களுடைய பெற்றோர்களிடம் கொண்டு சென்று காட்டுகின்றது.
ஆனால் அந்த பெற்றோர்கள் அந்த ஓவியத்தை பார்த்ததும், டார் டாராக கிழித்து போட்டுவிட்டு இது என்ன ஓவியம்.,.? என்று அந்த குழந்தையை திட்டி அனுப்பி விடுகிறார்கள். ஆனால், பக்கத்து வீட்டுக்காரர் அந்த ஓவியத்தை ஒட்டவைத்து பார்த்து மிகவும் அற்புதமாக இருக்கிறது என்று பாராட்டுகிறார்.
இப்போது அந்த குழந்தைக்கு யாரை பிடிக்கும்..? இதே சூழ்நிலையில் தான் என்னுடைய ஆயிரத்தில் ஒருவன் திரைப்படம் வெளியான போது நான் இருந்தேன். அதனால் தான் நான் அப்படி கூறினேன்.
ஆனால், தற்போது வரை இந்த விஷயத்தை வைத்துக்கொண்டு என்னை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். திட்டட்டும் தமிழ் சினிமா ரசிகர்கள் தானே திட்டுகிறார்கள்.. எல்லோரும் நம்முடைய பசங்க தானே என்று பேசி இருக்கிறார் நடிகர் கார்த்தி.