சினிமாவில் துணிச்சலான ஒரு நடிகை என்றால் அது நடிகை ஸ்ரீபிரியா என்ற கூறலாம். கிட்டத்தட்ட 350 க்கு மேற்பட்ட திரைப்படங்களில் நடித்திருக்கிறார்.
குறிப்பாக கமலஹாசன் ரஜினிகாந்த் என இருவருடன் மட்டும் 60 படங்களில் ஜோடி போட்டு நடித்திருக்கிறார் நடிகை ஸ்ரீபிரியா என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்.
அந்த திரைப்படங்கள் எல்லாம் சூப்பர் சூப்பர் ஹிட்டான நிலையில் பிரபல பத்திரிகையாளர் தமிழா தமிழா பாண்டியன் அவர்கள் ஸ்ரீபிரியா குறித்து பேசி உள்ள விஷயம் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.
70 மற்றும் 80 காலகட்டங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருந்த நடிகை ஸ்ரீபிரியா உடைய உண்மையான பெயர் அலமேலு என்பதாகும்.
இவருடைய பெற்றோர் பக்கிரி சாமி மற்றும் கிரிஜா ஆவார்கள். நடிகை ஸ்ரீபிரியாவின் குடும்பம் ஒரு பெரிய இசை குடும்பம் சித்தப்பா பெரியப்பா மாமா என குடும்பமே இசை வித்துவான்களாக இருந்திருக்கின்றனர்.
அப்படி இருக்கும் நிலையில் ஸ்ரீபிரியாவின் மூத்த சகோதரி மீனாட்சி.. இந்த மீனாட்சி வேற யாரும் கிடையாது சமீபத்தில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சிவகுமாரின் அம்மா தான் இவர்.
சினிமாவில் நடிப்பதற்காக முதன் முதலில் மேக்கப் போட்டு போட்டோ எடுத்திருக்கிறார் மீனாட்சி. அந்த நேரத்தில் ஸ்ரீபிரியாவை பார்த்த புகைப்பட கலைஞர் அவருக்கும் மேக்கப் போட்டு போட்டோ எடுத்திருக்கிறார்.
அந்த நேரத்தில் போட்டோவை பார்த்த தயாரிப்பாளர் மீனாட்சியை விடவும் ஸ்ரீபிரியாவிற்கு சினிமாவில் நடிக்கும் முகம் இருக்கிறது என்று அவருக்கு பட வாய்ப்பு கொடுத்திருக்கிறார்.
அப்போதுதான் மாணிக்கத் தொட்டியில் என்ற படத்தில் ஐந்து பெண்களில் ஒருவராக நடித்து இருந்தார். இதனை தொடர்ந்து நடிகர் சிவகுமாருக்கு ஜோடியாக ஆட்டுக்கார அலமேலு என்ற படத்தில் நடித்திருந்தார்.
அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. இதன் காரணமாக தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னட அனைத்து மொழிப்படங்களிலும் இவருக்கு வாய்ப்புகள் குவிந்தன.
இப்படி பல்வேறு திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருந்த ஸ்ரீபிரியா நடிகர் கார்த்திக் உடன் நினைவுகள் என்ற படத்தில் சேர்ந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டது.
கார்த்திக் ஸ்ரீபிரியாயுடன் நான்கு வயது இளையவர். இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். இவர்களுடைய காதலும் திருமணம் வரை சென்றது. அந்த அளவுக்கு ஸ்ரீபிரியாவுக்கு நம்பிக்கை கொடுத்துள்ளார்.
ஆனால், கடைசியில் திடீரென நடிகர் கார்த்திக் ராகினி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இதை சற்றும் எதிர்பாராத ஸ்ரீபிரியா அதிர்ச்சி அடைந்தார். கார்த்திக்கின் படப்பிடிப்பு தளத்திற்கே சென்று அவரை சரமாரியாக அடித்து அங்கிருந்து பொருட்களை எல்லாம் தூக்கிப் போட்டு உடைத்து தவறான முடிவு எடுக்க முயன்றார்.
தன்னை இந்த உலகத்தை விட்டு மாய்த்துக்கொள்ளும் அளவுக்கு படுமோசமான முடிவுகளை எடுத்தார் ஸ்ரீபிரியா. அதன் பிறகு அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனை கலந்து சென்று காப்பாற்றினார்கள்.
இந்த விஷயத்தில் பல முன்னணி நடிகர்கள் தலையிட்டு ஸ்ரீபிரியாவை சமாதானப்படுத்தினார்கள். அதன் பிறகு மலையாள நடிகர் ராஜ்குமார் சேதுபதி என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருக்கிறார்கள்.
இதை தொடர்ந்து ஸ்ரீபிரியா குடும்ப வாழ்க்கை, சின்னத்திரை, அரசியல் என அனைத்திலும் தனி முத்திரை பதித்தார். தமிழ் சினிமாவின் துணிச்சலா நடிகை என்ற பெயரைப் பெற்று இருக்கிறார் ஸ்ரீ பிரியா என்று தமிழா தமிழா பாண்டியன் அந்த பேட்டியில் பதிவு செய்திருக்கிறார்.