1980-களில் சாக்லேட் பாயாக தமிழ் சினிமாவில் வலம் வந்த நடிகர் கார்த்திக் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் வாரிசு நடிகராக திகழ்வதோடு மட்டுமல்லாமல் நவரச நாயகன் என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படக்கூடிய இவர் பழம்பெரும் நடிகர் ஆர் முத்துராமனின் மகன் ஆவார்.
நவரச நாயகன் கார்த்திக் தமிழ் சினிமாவில் பாரதிராஜாவால் அலைகள் ஓய்வதில்லை என்ற திரைப்படத்தில் 1989 ஆம் ஆண்டு அறிமுகம் செய்து வைக்கப்பட்டதை அடுத்து அந்த ஆண்டின் சிறந்த புதுமுக நடிகருக்கான விருதை பெற்றவர்.
பிரபல நடிகையின் காதலை ஏற்க மறுத்த நவரச நாயகன் கார்த்திக்..
நடிகர் கார்த்திக் மணிரத்தினம், பாரதிராஜா, விசு, ஆர் சுந்தர்ராஜன், அமீர்ஜான், ஆர் வி உதயகுமார், பிரியதர்ஷன், பகத் பாசில், விக்ரமன், அகத்தியன், சுந்தர் சி, கே எஸ் ரவிக்குமார், பி. வாசு மற்றும் கே வி ஆனந்த் போன்ற முன்னணி திரைப்பட இயக்குனர்களின் படங்களில் நடித்திருக்கிறார்.
இவர் நடிப்பில் வெளி வந்த பகவதிபுரம் ரயில்வே கேட், பேய் வீடு, ராஜதந்திரம் போன்ற படங்கள் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டாலும் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது.
இதனை அடுத்து இவர் அக்னி நட்சத்திரம், வருஷம் 16, இதயத்தாமரை, கிழக்கு வாசல் போன்ற படங்களில் நடித்ததை அடுத்து இந்த படம் வணிக ரீதியான மாபெரும் வெற்றியை கொடுத்தது.
இதை அடுத்து ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்ததோடு மட்டுமல்லாமல் பல நடிகைகளும் கார்த்திக்கின் அழகிலும் திறமையிலும் மயங்கினார்கள். அந்த வரிசையில் நடிகை ஸ்ரீபிரியா கார்த்திகை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டார்.
வாழ்க்கையை முடித்துக் கொள்ள முடிவு செய்த அந்த நடிகை..
அந்த வகையில் நடிகை ஸ்ரீபிரியா நவரச நாயகன் கார்த்திக் இடம் பிடிவாதமாக தனது காதலை எடுத்துச் சொன்னதை அடுத்து கார்த்திக் அதை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் மனம் உடைந்து போன ஸ்ரீபிரியா தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ளக்கூடிய நிலைக்குத் தள்ளப்பட்டார்.
எனினும் எப்படியோ தன் உயிரை காப்பாற்றிக் கொண்ட அவர் தன் காதலை ஏற்காமல் கடைசி வரை தன்னை தவிக்க விட்ட கார்த்திக்கை நினைத்து வருந்தியதாக பத்திரிக்கையாளர் ரங்கநாதன் இந்த தகவலை கூறியதை அடுத்து இணையம் முழுவதும் வேகமாக பரவி வருகிறது.
மேலும் தன் வாழ்க்கையை முடித்துக் கொள்ள அன்று ஸ்ரீபிரியா எடுத்த முயற்சியை பற்றி அப்போது இருந்த ரசிகர்கள் தாறுமாறாக விமர்சனம் செய்திருந்ததை நினைவு படுத்தினார்.
மேலும் இந்த விஷயமானதை தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகவும் மாறி உள்ளது.