தமிழில் ஆக்ஷன் திரைப்படங்களை எடுக்கும் ஒரு சில முக்கிய இயக்குனர்களில் கார்த்திக் சுப்புராஜ் மிக முக்கியமானவர். ஹாலிவுட் இயக்குனரான டெரண்டினோவின் மீது அதிக ஈடுபாடு கொண்டு சினிமாவிற்குள் வந்த காரணத்தினால் அதிகபட்சம் கார்த்திக் சுப்புராஜ் திரைப்படங்களில் சண்டை காட்சிகளை பார்க்க முடியும்.
அதேபோல டெரண்டினோ திரைப்படங்களில் வரும் நிறைய காட்சிகளை அதே போல எடுத்து தனது திரைப்படத்தில் அவர் பயன்படுத்தியிருப்பார் அந்த அளவிற்கு டொரண்டினோவிற்கு பெரிய ரசிகராக கார்த்திக் சுப்புராஜ் இருந்து வருகிறார்.
இவர்தான் ஹீரோ
கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் திரைப்படங்கள் எல்லாமே தனிப்பட்ட முறையில் சிறப்பான படங்களாக இருக்கும். ஒவ்வொரு படத்தின் கதை களங்களும் மிக சிறப்பாக இருக்கும். மேலும் படத்தின் கதையில் கதைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க கூடியவர் கார்த்திக் சுப்புராஜ்.
அதனால்தான் தொடர்ந்து அவரது திரைப்படங்கள் வெற்றிகளை கொடுத்து வருகின்றன. சில படங்கள் பெரிதாக வெற்றி பெறவில்லை என்றாலும் கூட மக்கள் மத்தியில் அதிகமாக பேசப்பட்ட படங்களாக இருந்திருக்கின்றன.
கார்த்திக் சுப்புராஜ் கொடுத்த பதில்
உதாரணத்திற்கு அவர் இயக்கிய இறைவி, மகான் மாதிரியான திரைப்படங்கள் எல்லாம் பெரிதாக வெற்றியை கொடுக்கவில்லை ஆனால் அதே சமயம் அந்த திரைப்படங்கள் எப்பொழுதும் மக்கள் மத்தியில் பேசப்படும் படங்களாக இருக்கின்றன.
நடிகர் விக்ரம் கூட ஒரு பேட்டியில் கூறும் பொழுது கூட மகான் திரைப்படம் குறித்து எனக்கு மற்ற மாநிலங்களில் நல்ல வரவேற்பு கிடைத்தது என்று கூறியிருந்தார். இந்த நிலையில் கார்த்திக் சுப்புராஜ் நடிகர் ரஜினிகாந்தின் மிகப்பெரிய ரசிகர் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமே.
ஆடிப்போன ரசிகர்கள்
ரஜினிகாந்தை வைத்து பேட்ட என்கிற திரைப்படத்தை இயக்கியிருந்தார் கார்த்திக் சுப்புராஜ். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் அவர் பேசிய பொழுது ரஜினிகாந்த் நடித்த பழைய படங்களில் இப்பொழுது ஒரு ஆள் நடித்து ரீமேக் செய்யலாம் என்றால் யாரை வைத்து செய்யலாம் என்று கேட்கப்பட்டது.
அதற்கு பதில் அளித்த கார்த்திக் சுப்புராஜ் முள்ளும் மலரும் திரைப்படத்தில் இப்பொழுது தனுஷ் நடித்தால் சூப்பராக இருக்கும் ஆனால் பேட்ட திரைப்படத்தை ரீமேக் செய்தால் அதில் திரும்பவும் ரஜினி சார்தான் நடித்து ஆகணும் வேறு யாரையும் அதில் என்னால் பொருத்திப் பார்க்க முடியாது என்று கூறி இருக்கிறார்.