சினிமாவில் முதன்முதலாக காமெடி நடிகராக அறிமுகம் ஆகி இப்பொழுது மக்கள் மத்தியில் அதிக பிரபலமான ஒருவராக இருந்த வருகிறார் நடிகர் கருணாஸ்.
நடிகர் கருணாஸை பொருத்தவரை ஒரு காமெடி நடிகர் என்பதையும் தாண்டி எந்த ஒரு கதாபாத்திரம் கொடுத்தாலும் அதை சிறப்பாக நடிக்க கூடியவர். அதனாலேயே கருணாஸ்க்கு வரவேற்பு என்பது மிகவும் அதிகரித்தது.
என் மகனும் அவன் தோழியும்
முக்கியமாக பிதாமகன் திரைப்படத்தில் கருணாஸ் நடித்திருந்த நடிப்பு அதிக பிரபலமானது ஆகும். அதற்குப் பிறகு வில்லன் முதலிய நிறைய திரைப்படங்களில் கருணாஸ் காமெடி நடிகராக நடித்திருக்கிறார்.
காமெடி திரைப்படங்களில் காமெடியனாக வாய்ப்பு கிடைப்பதை பொருத்தவரை அதிலும் சில விதிமுறைகளை வைத்திருந்தார் கருணாஸ் அதாவது படத்தில் முக்கியமான கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே அவர் நடிப்பார்.
தெரிஞ்சுதான் பேசுறாரா
ஒரு படத்தில் அவர் நடிக்கிறார் என்றால் அந்த கதாபாத்திரம் மக்கள் நினைவில் நிற்கும் கதாபாத்திரமாக இருந்தால் மட்டுமே அவர் நடிப்பார் அதேபோல வில்லன் கதாபாத்திரங்களிலும் நடிக்கவே கூடாது என்று முடிவெடுத்திருந்தார் கருணாஸ்.
உதாரணத்திற்கு ஜி திரைப்படத்தில் நடிகர் அஜித்திடம் மோசமாக நடந்து கொள்ளும் ஒரு நண்பன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அவர் அப்படி நடிக்க முடியாது என்று கூறிவிட்டார்.
பிறகு கதாநாயகனாக ஒரு சில திரைப்படங்களில் நடித்தார் கருணாஸ் திண்டுக்கல் சாரதி அம்பாசமுத்திரம் அம்பானி மாதிரியான திரைப்படங்களில் நடித்தார். ஆனால் அவை எதுவுமே பெரிதாக வெற்றியைப் பெற்றுக் கொடுக்கவில்லை.
விமர்சனத்துக்கு உள்ளான கருணாஸ் பேச்சு
இந்நிலையில் தனது மகன் குறித்து சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது காதல் குறித்து சிறுவயதில் இருந்தே தவறான விஷயத்தை நாம் கற்றுக் கொடுத்து விடுகிறோம். அதுதான் பசங்களை தவறான வழிக்கு கொண்டு செல்கிறது.
நான் என்னுடைய மகனிடம் சொல்லி வளர்த்ததெல்லாம் ஒரு விஷயம் தான் ஏதாவது ஒரு பெண்ணிடம் தோழியிடம் பேசுகிறாய் என்றால் ரகசியமாக அதை செய்யாதே. வீட்டுக்கு வந்து பேசு எங்கள் வீட்டில் மொத்தம் மூன்று அறைகள் இருக்கின்றன.
அதில் ஏதாவது ஒரு அறையில் சென்று பேசுங்கள் என்று கூறினேன் அப்படி நான் அவனுக்கு கொடுத்த சுதந்திரம் தான் அவன் இப்பொழுது வரை நல்லவனாக இருக்கிறான் என்று கூறியிருந்தார் கருணாஸ். இது குறித்து விமர்சனம் செய்து வரும் ரசிகர்கள் சமுத்திரகனியின் அப்பா திரைப்படத்தில் வரும் அப்பாவாக தன்னை உணர்ந்திருக்கிறார் கருணாஸ் என்று பேசி வருகின்றனர்.