பசிக்குதுன்னு ரோட்டுல போய் கேட்டேன்.. ஒரு அம்மா காசு போட்டாங்க.. உண்மையை உடைத்த கவின்..!

தமிழில் வளர்ந்து வரும் நடிகர்களில் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றவராக தற்சமயம் கவின் இருந்து வருகிறார். ஒரு சில திரைப்படங்கள் தான் நடித்திருக்கிறார் என்றாலும் கூட கவினுக்கு அதிக ரசிகர்கள் உருவாக்கியிருக்கின்றனர்.

அவர் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு கதைகளமும் வித்தியாசமான கதைக்களங்களாக தேர்ந்தெடுத்துதான் நடித்து வருகிறார் கவின் ஆரம்பத்தில் லிப்ட் என்கிற ஒரு திரைப்படத்தில்தான் கவின் நடித்தார். இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை.

பசிக்குதுன்னு ரோட்டுல போய் கேட்டேன்

நேரடியாக ஓடிடியில்தான் வெளியானது. ஆனாலும் கூட அந்த படத்திற்கு வரவேற்பு கிடைத்தது. அதற்குப் பிறகு அவருக்கு டாடா என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. டாடா திரைப்படம் குடும்ப ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் கதையைக் கொண்டிருந்தது.

அந்த திரைப்படத்திற்கு பிறகுதான் நடிகர் கவினின் மார்க்கெட் மிகவும் அதிகரித்தது. அதற்கு பிறகு வரிசையாக பட வாய்ப்புகள் பெற்று வந்தார் கவின். அதனை தொடர்ந்து அவரது சம்பளத்தையும் அதிகரித்தார். இதனால் நிறைய பெரிய இயக்குனர்கள் திரைப்படத்தின் வாய்ப்புகள் இவருக்கு கிடைக்காமல் போனது என்றும் கூறப்படுகிறது.

ஒரு அம்மா காசு போட்டாங்க

உதாரணத்திற்கு கலகலப்பு திரைப்படத்தின் அடுத்த பாகத்தை சுந்தர் சி படமாக்க இருந்தார். அதில் நடிகர் கவினைதான் கதாநாயகனாக நடிக்க வைக்க இருந்தார். ஆனால் நடிகர் கவின் அதிக சம்பளம் கேட்டதால் சுந்தர் சி கதாநாயகனையே மாற்றிவிட்டதாக கூறப்படுகிறது.

இருந்தாலும் கூட கவினுக்கு மற்ற படங்களில் வாய்ப்புகள் அதிகமாக வந்து கொண்டிருக்கிறது. இவரது நடிப்பில் வெளியான ஸ்டார் என்கிற திரைப்படமும் மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது. தொடர்ந்து தற்சமயம் ப்ளடி பெக்கர் என்கிற ஒரு திரைப்படத்தில் நடித்து வருகிறார் கவின்.

உண்மையை உடைத்த கவின்

பிளடி பெக்கர் திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் தயாரித்து வருகிறார் இந்த திரைப்படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருக்கிறார். இதுக்குறித்து கவின் கூறும்போது படத்தில் நடிக்க எனக்கு நிறைய நாள் எடுத்தது.

ஒவ்வொரு காஸ்டியூமாக மாற்றி எது நன்றாக இருக்கிறது என்று இயக்குனர் பார்த்துக் கொண்டே இருந்தார். இறுதியில் ஒரு ஆடையை முடிவு செய்தார் ஆனால் பார்ப்பதற்கு உண்மையான பிச்சைக்காரன் போலவே இருக்கிறானா? என்கிற சந்தேகம் எனக்கு இருந்தது.

எனவே நான் தெருவில் சென்று சிலரிடம் பிச்சை எடுக்க துவங்கினேன் அப்பொழுது ஒரு அம்மா எனக்கு இருபது ரூபாய் பணம் போட்டார் அப்பொழுது முடிவு செய்தேன் நிச்சயமாக இந்த படம் சக்சஸ் ஆகும் என்று பிளடி பெக்கர் திரைப்படம் குறித்து கூறியிருக்கிறார் கவின்.

 

 

 

 

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam