என்னம்மா மறுபடியும் அந்த நடிகரோட.. புகையும் கீர்த்தி சுரேஷ் விவகார விஷயம்..

மலையாளத் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி வளர்ந்த பின் ஹீரோயினியாக தென்னிந்திய மொழி படங்கள் பலவற்றில் நடித்திருக்கும் நடிகை கீர்த்தி சுரேஷ் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

தேசிய விருதினை வென்ற கீர்த்தி சுரேஷ் மலையாள நடிகை மேனகாவின் மகள் என்பது உங்களுக்கு மிக நன்றாக தெரிந்திருக்கும். இவர் பாபி ஜான் படத்தின் மூலம் ஹிந்தியில் ஹீரோயினியாக களம் இறங்க இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றுள்ளது.

என்னம்மா மறுபடியும் அந்த நடிகரோட..

பாபி ஜான் படமானது ஹிந்தியில் வரும் டிசம்பர் மாதம் வெளி வர உள்ள சூழ்நிலையில் தற்போது கீர்த்தி சுரேஷின் கைவசம் ரிவால்வர் ரீட்டா, கன்னிவெடி போன்ற படங்கள் உள்ளது.

அண்மையில் இவர் நடிப்பில் வெளி வந்த திரைப்படம் மிகப்பெரிய தோல்வியை இவருக்கு தந்த போதும் அடுத்தடுத்து புதிய பட வாய்ப்புகளும் இவருக்கு வந்து சேர்வது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வகையில் தற்போது இவர் புதிதாக கமிட் ஆகியுள்ள படம் குறித்து லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்து இணையம் எங்கும் புகைய ஆரம்பித்து உள்ளது.

அதுமட்டுமல்லாமல் ரசிகர்கள் அனைவரும் இதைக் கேள்விப்பட்ட உடனேயே என்னம்மா மறுபடியும் அந்த நடிகரோட என்று அவரை நக்கலாக கிண்டல் செய்து வருவது அதிகரித்து இருப்பதை அடுத்து யார் அந்த நடிகர் எந்த படத்தில் நடிக்க இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ள பலரும் ஆர்வமாக இருக்கிறார்கள்.

புகையும் கீர்த்தி சுரேஷ் விவகார விஷயம்..

அந்த வகையில் நடிகை கீர்த்தி சுரேஷ் யார் படத்தில் இணைய இருக்கிறார் என்பது பற்றி விரிவாக இந்த பதிவில் நீங்கள் படித்து தெரிந்து கொள்ளலாம்.

மேலும் நடிகர் தனுஷ் தற்போது இயக்குனராக தனது பங்கை மிகச் சிறப்பாக பா பாண்டியன் படத்தில் செய்ததை அடுத்து பல ஆண்டுகள் இடைவேளையை எடுத்துக்கொண்டு தனது 50 வது படமான ராயன் படத்தை இயக்கியிருந்தார்.

இந்தப் படத்தின் வெற்றியை அடுத்து இவர் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்க இருப்பதாக தகவல்கள் வெளி வந்தது. இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் இந்த ஆண்டின் இறுதிக்குள் வெளியாகும் என தெரிய வந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்த படத்தை முடித்து விட்ட பிறகு தனுஷ் அடுத்ததாக இயக்க வரும் படம் தான் இட்லி கடை. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகிறது. இயக்குனராக ஒரு பக்கம் பிசியாக இருந்தாலும் நடிகராக இருக்கும் தனுஷ் தன் கைவசம் அதிகளவு படங்களை வைத்திருக்கிறார்.

இந்நிலையில் இரண்டாவது முறையாக கீர்த்தி சுரேஷ் தனுஷ் இயக்கி நடிக்கப் போகும் ஐந்தாவது திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்க இருப்பதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாக விஷயங்கள் கசிந்து வருகிறது.

அதுபோலவே இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படும் வேளையில் இது குறித்த அறிவிப்பு எப்போது வெளி வரும் என்பதை பொறுத்திருந்து பார்த்து தான் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் மற்றும் தனுஷ் இருவரும் தொடரி படத்தில் இணைந்து நடித்திருந்து ரசிகர்களின் மத்தியில் பெருத்த வரவேற்பை பெற்றது உங்கள் நினைவில் இருக்கலாம். இதை அடுத்து இந்த விஷயத்தை கேள்விப்பட்ட கீர்த்தியின் ரசிகர்கள் அனைவரும் உற்சாகத்தில் இருக்கிறார்கள்.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam