தல அஜித் மற்றும் தேவயானி இருவது திரை வாழ்க்கையிலும் மிக முக்கியமான படம் காதல் கோட்டை. இப்படத்தை இயற்றியதன் மூலம் தேசிய விருது பெற்ற இயக்குனர் அகத்தியன். இவரது மகள்தான் நடிகை விஜயலட்சுமி.
நடிகை விஜயலட்சுமி உடைய அக்கா கார்த்திகாவின் கணவர் தான் இயக்குனர் திரு. இயக்குனர் திரு தீராத விளையாட்டுப் பிள்ளை, சமர், நான் சிகப்பு மனிதன் போன்ற படங்களை இயக்கியுள்ளார்.
அதோடு விஜயலட்சுமியின் கணவர் பெரோஸ் பண்டிகை என்ற படத்தை இயக்கியுள்ளார்.
நடிகர் பிரகாஷ் ராஜ் மற்றும் நடிகர் ஸ்ரீஹரி இருவரும் சகளைகள். நடிகர் பிரகாஷ்ராஜுடைய முதல் மனைவி நடிகை லலிதா குமாரி. இவருடைய அக்கா தான் நடிகை டிஸ்கோ சாந்தி.
டிஸ்கோ சாந்தி உடைய கணவர் ஸ்ரீஹரியும் ஒரு நடிகர் பல தெலுங்கு படங்களில் நடித்த இவர் சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். விஜய் நடித்த வேட்டைக்காரன் படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் இவர் நடித்திருந்தார்.
நடிகை ஷாலினி உடைய அண்ணன் நடிகர் ரிச்சர்ட் ரிஷி. இவருடைய மனைவி சத்தியலட்சுமி கவிஞர் கண்ணதாசனுடைய பேத்தி. சத்தியலட்சுமியுடைய தம்பியும் ஒரு நடிகர். அவர் பெயர் ஆதவ் கண்ணதாசன்.
நடிகர் சிவாவின் மனைவி நடிகர் அஜித்துடைய நெருங்கிய உறவினர் ஆவார். தயாரிப்பாளரும் நடிகருமான ஏ.எல் அழகப்பனுடைய மகன் தான் இயக்குனர் ஏ.எல் விஜய். இவருடைய தம்பி தான் நடிகர் உதயா.
நடிகர் சுபலேகா சுதாகர் இவர் பல தமிழ் படங்களிலும் பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார் இவருடைய மனைவி எஸ் பி சைலஜா எஸ் பி பாலசுப்பிரமணியம் சகோதரி ஆவார்.
நடிகை விந்தியா. இவர் நடிகை பானுப்ரியாவின் அண்ணனுடைய முன்னாள் மனைவி.
நடிகை நஸ்ரியா உடைய மாமனார் இயக்குனர் பாசில் இவர் தமிழிலும் மலையாளத்திலும் பல வெற்றி படங்களை இயக்கியுள்ளார். குறிப்பாக தமிழில் இளைய தளபதி நடித்த காதலுக்கு மரியாதை படத்தையும் அரங்கேற்ற வேலை பூவே பூச்சூடவா போன்ற வெற்றி படங்களையும் இயக்கியுள்ளார். இவருடைய மகன் தான் நடிகர் பகத் பாசில்.
நடிகை ஜெயசித்ரா உடைய மகன்தான் நடிகரும் இசையமைப்பாளருமான அம்ரேஷ் கணேஷ். இவர் மொட்ட சிவா கெட்ட சிவா பாஸ்கர் ஒரு ராஸ்கல் போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
புன்னகையரசி சினேகாவின் அண்ணன் கோவிந்தராஜனுடைய முன்னாள் மனைவி தான் கலா மாஸ்டர்.
இசையமைப்பாளர் எம் எஸ் விஸ்வநாதனுடைய மகன் கோபி கிருஷ்ணனின் முன்னாள் மனைவி தான் நடிகை சுலக்ஷனா.
காவலன் படத்தில் நடித்த மித்ரா குரியன் நடிகை நயன்தாரா உடைய நெருங்கிய உறவினர் ஆவார்.
நடிகர் ஜெயப்பிரகாஷ் உடைய மகன்கள் தான் நடிகர்கள் நிரஞ்சன் மற்றும் துஷ்யன் இவர்கள் இருவரும் சசிகுமார் இயக்கிய ஈசன் படம் மூலம் அறிமுகமாகினர்.
இயக்குனர் செல்வராகவனுடைய மனைவி கீதாஞ்சலியின் அங்கிள் தான் நடிகர் மோகன் வி ராமன்.
இவருடைய மகள்தான் நடிகை வித்யுலேகா ராமன்.
நடிகை திவ்யா உன்னியின் கசின் தான் மீரா நந்தனும் நடிகை ரம்யா நம்பீசனும்.
இயக்குனர் விஷ்ணுவர்தன் உடைய மனைவி அனுவர்தன் கலைவாணர் என அழைக்கப்படும் நடிகர் எம் எஸ் கிருஷ்ணன் உடைய பேத்தி ஆவார். அதோடு விஷ்ணுவர்தன் உடைய தம்பி தான் நடிகர் கிருஷ்ணா.
நடிகை ஸ்ரீதேவி நடிகை மகேஸ்வரி உடைய ஆண்ட்டி ஆவார்.
நடிகர் விஜயகுமார் உடைய மகளும் நடிகையுமான வனிதா விஜயகுமாரின் மூன்றாவது கணவர் என்று கூறப்படுபவர் தான் நடன இயக்குனர் ராபர்ட். இவருடைய சகோதரி தான் நடிகை அல்போன்சா.
நடிகை வித்யா பாலன் உடைய கசின் தான் நடிகை பிரியாமணி.
அதோடு நடிகை சோபனா உடைய கசின் தான் நடிகர் வினித்.
இந்த மாதிரி பல பேர் அறியாத உறவு முறைகள் உங்களுக்கு தெரிஞ்சா அதை கமெண்ட்ல சொல்லுங்க.