கடந்த 2003ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் மங்களூர்வில் பிறந்தவர் நடிகை கீர்த்தி செட்டி. இவருடைய உண்மையான பெயர் க்ரித்தி கிருஷ்ணா செட்டி என்பதாகும். கடந்த 2019 ஆம் ஆண்டு ஹிந்தியில் வெளியான சூப்பர் 30 என்ற திரைப்படத்தில் மாணவியாக நடித்ததன் மூலம் திரைத்துறையில் அடி அடித்து வைத்தார்.
அதனை தொடர்ந்து 2021 ஆம் ஆண்டு உப்பெண்ணா என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
தொடர்ந்து பல்வேறு தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்த இவர் தற்போது நடிகர் கார்த்தி நடிப்பில் வா வாத்தியார், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் உருவாகி வரும் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, நடிகர் ஜெயம்ரவி நடிப்பில் உருவாகி வரும் ஜெனி மூன்று தமிழ் திரைப்படத்தில் தொடர்ந்து நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த திரைப்படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர இருக்கின்றன. இப்போது தொடர்ச்சியாக மூன்று தமிழ் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார் நடிகை கீர்த்தி செட்டி என்றாலும் இதற்காக அவர் பட்ட கஷ்டங்கள் அதிகம்.
குறிப்பாக நடிகர் விஜயின் வாரிசு திரைப்படத்தில் இவர்தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. கடைசி நேரத்தில் நடிகை ராஸ்மிகா மந்தனா அந்த வாய்ப்பை தட்டி தூக்கினார்.
அதனை தொடர்ந்து இயக்குனர் பாலா நடிகர் சூர்யா கூட்டணியில் உருவாக இருந்த வணங்கான் திரைப்படத்தில் ஹீரோயினாக ஒப்பந்தமானது நடிகை கீர்த்தி செட்டி தான். ஆனால், அந்த படம் டிராப் செய்யப்பட்டது.
மேலும் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவான சுல்தான் திரைப்படத்தின் ஹீரோயினாக ஒப்பந்தமானதும் நடிகை கீர்த்தி செட்டி தான். கடைசி நேரத்தில் அந்த வாய்ப்பு ராஷ்மிகா மந்தனாவுக்கு சென்றது.
தற்போது நடிகர் கார்த்தியின் வாத்தியார் என்ற திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில், தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகை கீர்த்தி செட்டி வெளியேற்றுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து இருக்கின்றது.