தமிழ்நாட்டுக்காரன் அந்த விஷயத்துல வெள்ளைக்காரன் மாதிரி… வெளிப்படையாக கூறிய ஏ.ஆர் ரகுமான்.!

தமிழ் சினிமாவில் புதுவித இசையை அறிமுகப்படுத்திய இசையமைப்பாளர்களில் மிக முக்கியமானவர் இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான்.

அதுவரை தமிழ் சினிமாவில் இருந்து வந்த இசையில் இருந்து முற்றிலுமாக புதிதான இசையை அறிமுகப்படுத்தி முதல் படத்திலிருந்தே அதிக வரவேற்பை பெற்றவர் ஏ.ஆர் ரகுமான்.

வெள்ளைக்காரன் மாதிரி

அதுவரை இளையராஜாவின் கையில் இருந்த தமிழ் சினிமாவின் இசை என்கிற விஷயம் பிறகு ஏ.ஆர் ரகுமானின் கைக்கு. சென்றது அதற்கு பிறகு தான் இளையராஜாவிற்கு திரைப்பட வாய்ப்புகளும் குறைய தொடங்கியது. அந்த அளவிற்கு ஏ.ஆர் ரகுமானின் தாக்கம் தமிழ் மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வருகிறது.

அதேபோல தமிழ் மொழி குறித்த பெருமையும் எப்பொழுதும் ஏ.ஆர் ரகுமானிடம் இருப்பதை பார்க்க முடியும். எங்கேயுமே தனது தாய் மொழியை ஏ.ஆர் ரகுமான் விட்டுக் கொடுக்கவே மாட்டார். ஏதாவது ஒரு ஹிந்தி நிகழ்ச்சிகளுக்கு சென்றாலும் கூட அங்கு தமிழ் குறித்து ஏதாவது பேசிவிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார் ஏ.ஆர் ரகுமான்.

அதேபோல அமெரிக்காவிற்கு சென்று ஆஸ்கார் விருது வாங்கும் பொழுது கூட அந்த மேடையிலும் தமிழில் பேசி தமிழுக்கு மரியாதை பெற்று கொடுத்தவர் ஏ.ஆர் ரகுமான்.

வெளிப்படையாக கூறிய ஏ.ஆர் ரகுமான்

சமீபத்தில் அவர் தமிழர்கள் குறித்து என்ன பேசினார் என்று கே.எஸ் ரவிக்குமார் ஒரு பேட்டியில் கூறியிருந்தார். அதில் அவர் கூறும் பொழுது பல மொழிகளில் நான் இசையமைத்திருக்கிறேன் ஆனால் தமிழிலும் ஹாலிவுட்டிலும் மட்டும்தான் நான் புதிதாக இசையை கொடுக்கும் பொழுது அதை மக்கள் ஏற்றுக் கொள்வதை பார்க்க முடிகிறது.

தெலுங்கு கன்னடம் போன்ற மற்ற மொழிகளில் புதிதாக நான் இசை போட்டால் அதை பிடிக்கவில்லை என்று கூறி விடுவார்கள் அவர்களுக்கு பிடித்த மாதிரி என்னை இசையமைக்க சொல்வார்கள். ஆனால் தமிழிலும் ஹாலிவுட்டில் மட்டும்தான் நான் புதிதாக ஒரு முயற்சியை செய்யும் பொழுது அந்த இசை நன்றாக இருக்கிறது என்று கூறுவார்கள்.

மேலும் அதற்கு வரவேற்பும் கிடைக்கும் அதனால்தான் தமிழிலும் ஹாலிவுட்டிலும் நான் துணிந்து புது முயற்சிகளை செய்கிறேன் என்று ஏ.ஆர் ரகுமான் கூறியதாக கே எஸ் ரவிக்குமார் பகிர்ந்து இருந்தார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version