In a rather poignant incident that highlights the intersection of perception and reality, a lady mistakenly offered 10 rupees to the legendary actor Superstar Rajinikanth, believing him to be a beggar in a temple.
சூப்பர் ஸ்டார் என்று சொன்னாலே அனைவருக்கும் டக்கென நினைவுக்கு வரக்கூடிய ஒரு பெயர் தான் ரஜினிகாந்த்.
ஆசியாவிலேயே அதிக சம்பளம் வாங்கக்கூடிய வெகு சில நடிகர்களில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ஒருவர்.
ஆனால் இப்படிப்பட்ட ரஜினிகாந்த்திற்கு ஒரு பெண் பிச்சை போட்டார் அந்த பிச்சையை ரஜினிகாந்த் பத்திரமாக வைத்திருக்கிறார் என்று சொன்னால் யாராவது நம்புவார்களா..? நம்பித்தான் ஆகவேண்டும்.
இது நடிகர் ரஜினிகாந்த் வாழ்க்கையில் நடந்த ஒரு உண்மை சம்பவம். இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் வெளியான சிவாஜி திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி வசூலில் சக்கை போடு போட்டது.
விமர்சன ரீதியாகவும் இந்த திரைப்படம் ரசிகர்களால் வரவேற்கப்பட்டது இந்த திரைப்படம் வெளியான போது பெங்களூருக்கு சென்ற நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய நண்பர்களை சந்தித்து அருகில் இருக்கக்கூடிய தான் வழக்கமாக செல்லக்கூடிய இந்த கோயிலுக்கு செல்லலாம் என கேட்டிருக்கிறார்.
அந்த நேரத்தில் நண்பர்கள், நீ அந்த கோயிலுக்கு வந்தால் கூட்டம் கூடிவிடும். இதனால் பல பிரச்சினைகள் வரும். எனவே அந்த கோயிலுக்கு செல்ல வேண்டாம் என கூறியிருக்கிறார்கள்.
ஆனால், நடிகர் ரஜினிகாந்த் அதெல்லாம் ஒன்னும் பிரச்சனை இல்லை. நான் ஒரு கசங்கிய சட்டை.. வேட்டி.. அணிந்து கொண்டு பார்த்தவுடன் அடையாளம் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு வருகிறேன்.
அந்த கோயிலுக்கு கட்டாயம் நாம் இப்போது செல்ல வேண்டும் என்று நண்பர்களிடம் கேட்டிருக்கிறார். சரி என கூறி நண்பர்களுடன் கோயிலுக்கு சென்று இருக்கிறார் ரஜினிகாந்த்.
அங்கு சாமி கும்பிட்ட பிறகு ஒரு தூணுக்கு அருகில் அமைதியாக வந்து அமர்ந்திருக்கிறார். அப்போது அந்த வழியாக வந்த ஒரு பெண் நடிகர் ரஜினிகாந்த் ஒரு பிச்சைக்காரர் என்று நினைத்துக் கொண்டு அவருக்கு அருகில் பத்து ரூபாய் பணத்தை போட்டு இருக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் கொஞ்சம் கூட கலங்காமல் அதை எடுத்து பத்திரமாக வைத்துக் கொண்டிருக்கிறார். அதனை தொடர்ந்து சிறிது நேரம் கழித்து கோயில் உண்டியலில் 100 ரூபாய் போட்டு இருக்கிறார் ரஜினிகாந்த். இதனை அந்த பெண் கவனித்து இருக்கிறார்.
குஜராத்தை சேர்ந்த அந்த பெண் ரஜினிகாந்திடம் சென்று நானே உங்களுக்கு பத்து ரூபாய் போட்டேன். ஆனால், நீங்கள் கோயில் உண்டியலில் 100 ரூபாய் போடுகிறீர்களே..? என்ன விஷயம்..? என்று கேட்டிருக்கிறார்.
மட்டுமில்லாமல் உங்களை எங்கேயோ பார்த்தது போன்ற உணர்வு ஏற்படுகிறது.. ஆனால் எனக்கு தெரியவில்லை என கூறியிருக்கிறார். சிறிது நேரத்தில் அது நடிகர் ரஜினிகாந்த் தான் என்பதை உணர்ந்து இருக்கிறார் அந்த பெண்மணி.
என்னை மன்னித்து விடுங்கள்.. என்னுடைய பணத்தை திருப்பி கொடுத்துவிடுங்கள்.. நான் தெரியாமல் செய்து விட்டேன் என கூறியிருக்கிறார். அப்போது, ரஜினிகாந்த் இல்லை நீங்கள் போட்ட பணம் என்னிடமே இருக்கட்டும்.. நான் யார் என்பதை காட்டுவதற்கு கடவுள் உங்களை அனுப்பி இருக்கிறார் என்று நான் நினைத்துக் கொள்கிறேன்.
இந்த பணத்தை நான் பத்திரமாக வைத்திருக்கிறேன். நன்றி.. என்று கூறிவிட்டு அங்கிருந்து வந்திருக்கிறார் ரஜினிகாந்த். தற்போதும் அந்த பத்து ரூபாய் பணத்தை பத்திரமாக வைத்திருக்கிறாராம் நடிகர் ரஜினிகாந்த்.
Summary in English : A lady mistakenly offered 10 rupees to the iconic Indian film star, Superstar Rajinikanth, believing him to be a beggar in a temple. This occurrence not only underscores the profound impact of celebrity culture but also raises questions about societal perceptions of wealth and status.